« Index | Home | மரம் வெட்டிகள், blog-ல் இப்படி தார் பூசினால்.... » | புலியும் அம்புலியும்... » | Elephant » | Crack » | ராஜீவ் காந்தி... this day that year (May21,1991) » | LTTE's Kattankudi Muslim Mosque Massacre » | பின்னூட்டம் பற்றி... » | Silent Spectators - of fight and fighting » | பறந்தது CARTOSAT-1; பொய்த்தது ஜோஸ்யம் ! » | ஜெயகாந்தனின் 'நாய்' பேச்சு » 

26 May 2005 

ரசிகர் மன்றங்கள்... வேறொரு பார்வை !

//அங்கிருந்த பள்ளிக்கூடத்திற்கு எழுத ஒரு கரும்பலகை இல்லை.. கரும்பலகை என்ற பெயரில் ஒன்று இருந்தது, அதில், பலகையை விட ஓட்டை அதிகமாக இருந்தது... பள்ளிக்கூடத்தில் 1 வருடமாக சரியான கரும்பலகை இல்லை..//

கேக்றேன்னு தப்பா நெனக்காதீங்க, 1 வருடமா அந்த ஓட்டை கரும்பலகைய மாத்தனும்னு அந்த பள்ளிக்கூடத்துக்கே தெரியலயா? அங்கே எப்படி பாடம் நடத்தியிருப்பார்கள்? அந்த வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் இதற்காக என்ன செய்தார்கள்? ஒரு வருடமாக அந்த பள்ளியில் inspection-ஏ நடைபெறவில்லையா? என்ன பள்ளி, என்ன ஆசிரியர்கள் இவர்கள்?

பொறுப்பில் உள்ளவர்கள் கடமையிலிருந்து தவறுவார்கள்; ஆனால் நாம் அவர்களை விட்டுவிட்டு, பொறுப்பற்றவர்களைச் சாடுவதால் என்ன பயன் விளையப்போகிறது?

விட்டால், ஊரில் குப்பைகளை அகற்றுவது, சாக்கடை சுத்தம் செய்வது மாதிரி வேலைகளையெல்லாம் யாராவது ரசிகர் மன்றத்தார் செய்யவேண்டும் என்று கட்டளை போடுவோம் போலிருக்கிறது.

ரசிகர் மன்றத்தார், எதாவது ஊருக்கு நல்லதை அவர்களாக செய்தாலோ அல்லது நாம் கேட்டபின் செய்தாலோ பாராட்டுவோம்; இல்லையென்றால் விட்டுவிடுவோமே.

நாம் blog-எழுதி என்ன பெரிய இலக்கிய சேவையா செய்கிறோம், வெறும் பொழுதுபோக்குதானே. நம்மிடம் யாராவது வந்து, சும்மா blog-ல தானே குப்பை கொட்றே; இங்கே எங்க கிராமத்துல வந்து, இருக்குற குப்பையெல்லாம் கொண்டு போய் எங்காவது கொட்டேன் என்றால்...

அப்படிபோடுங்க, நன்றாக் உரைக்கிற மாதிரி சொல்லுங்க எதுக்கெடுத்தாலும் ரசிகர்களை குறைசொல்லிக்கொண்டு, அவர்களுக்கு எவ்வளவு சமூகப்பணிகள் இருக்கின்றன, கட்-அவுட் கட்ட வேண்டியது இருக்கு, கொடித்தோரணம் கட்ட வேண்டியது இருக்கு, முதல் காட்சியில தனக்கு பிடித்த கதாநாயகன் திரையில் தோன்றும் போது சூடம் காண்பிக்க வேண்டியிருக்கின்றது, கதாநாயகர் பிறந்தநாளன்று ஊரிலே இல்லையென்றாலும் அவர் வீட்டின்முன் சரவெடிபோட்டு காத்துக்கிடக்க வேண்டியிருக்கு, கதாநாயகனின் மகளின் திருமணத்திற்கு அழைப்பே இல்லையென்றாலும் அங்கே சென்று காவல்துறையிடம் தடியடி வாங்கவேண்டியிர்க்கு, யாராவது ஒரு அரசியல்வாதி இந்த நடிகரின் படத்திற்கு நட்டம் வரும்படி செய்தால் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தி சிறைக்கு செல்ல வேண்டியிருக்கின்றது, இத்தனை சமூகப்பணிகளை விட்டுவிட்டு அவர்களைப்போய் கரும்பலகை கருப்பாக இல்லை, கரும்பலகையில் இத்தனை ஓட்டை இருக்கின்றது இதையெல்லாம் கவனிக்கவில்லையா என கேட்பது எந்த விதத்தில் நியாயம்? இந்த ரசிகர்கள் எல்லாம் தேர்தல் வரும்போது இந்த கட்சிக்கு வாக்களியுங்கள்,இந்த கட்சிக்கு வாக்களிக்கவே அளிக்காதீர்கள் என மக்களிடம் பிரச்சாரம் செய்வர், ஆனால் அப்போது கூட இந்த பலகையில் ஓட்டை இருக்கின்றதா,கருப்பாக இருக்கின்றதா என கேள்வியெல்லாம் கேட்க கூடாது, இதெல்லாம் சமூகப்பணியா என்ன?
இந்த நடிகர்களின் மொத்த குறியும் முதல்வர் பதவியின் மீதுதான் அவர்கள் முதல்வராகும்போது இவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள்,இப்படி சமூக அக்கறையோடு இருப்பவர்கள் தான் நாளைய சிறந்த அரசியல்வாதிகள், நன்றாகத்தான் சொன்னீர்கள் ஞானப்பீடம்.


நீங்கள் சொல்லும் ரசிகர்கள் எல்லாம் ஒருவேளை அந்த ஓட்டை கரும்பலகை இருக்கும் பள்ளியில் உள்ள பொறுப்பற்ற ஆசிரியரிடம் படித்ததார்களோ என்னவோ !

இந்த பதிவில் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி, குழலி அவர்களே.


«ýÒûÇ ÌÆÄ¢ìÌ

´Õ º¢ýÉ §ÅñΧ¸¡û. þýÛõ ±ò¾¨É ¿¡¨ÇìÌ þôÀÊ ¦À¡ò¾¡õ ¦À¡ÐÅ¡¸ ú¢¸÷ÁýÈí¸¨Ç ¸¢ñ¼ÄÊòÐì ¦¸¡ñÊÕì¸ô §À¡¸¢È£÷¸û? ÑÉ¢ôÒø §Á¡Áø ±ýÉ À¢Ãî¨É ±ýÀ¨¾ Ţġšâ¡¸ ±ØÐí¸û. À¾¢ÄÇ¢ì¸×õ, §¾¨ÅôÀð¼¡ø ¾¢Õò¾¢ì¦¸¡ûÇ×õ ¿¡ý ±ô§À¡Ðõ ¾Â¡Ã¡¸ þÕ츢§Èý.
À¢.Ì - ¯í¸ÙìÌ À¾¢ø ¦º¡øÄ ¿¢¨Éò¾üÌ ¸¡Ã½õ, ¿£í¸û Ó¸ãÊ «øÄ ±ý¸¢È ÓÊ×ìÌ ¿¡ý Åó¾¢ÕôÀ¾¡ø ÁðΧÁ.


அன்புள்ள குழலிக்கு

ஒரு சின்ன வேண்டுகோள். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொத்தாம் பொதுவாக ரசிகர்மன்றங்களை கிண்டலடித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? நுனிப்புல் மேயாமல் என்ன பிரச்னை என்பதை விலாவாரியாக எழுதுங்கள். பதிலளிக்கவும், தேவைப்பட்டால் திருத்திக்கொள்ளவும் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

பி.கு - உங்களுக்கு பதில் சொல்ல நினைத்தற்கு காரணம், நீங்கள் முகமூடி அல்ல என்கிற முடிவுக்கு நான் வந்திருப்பதால் மட்டுமே.


பின்னூட்டத்திற்கு நன்றி, திரு. ஜெ. ரஜினி ராம்கி அவர்களே.
உங்கள் சுனாமி நிவாரணப்பணிகள் பற்றி படித்தேன்; பாராட்டுக்கள்.


//பி.கு - உங்களுக்கு பதில் சொல்ல நினைத்தற்கு காரணம், நீங்கள் முகமூடி அல்ல என்கிற முடிவுக்கு நான் வந்திருப்பதால் மட்டுமே.//

வழக்கமாக நான் முகமூடிப்போட்டு எழுதுபவனல்ல, என் பெயரில் யாரும் முகமூடி போட்டு எழுதுவதும் இல்லை ஹி ஹி நான் இன்னும் அந்த அளவுக்கு பிரபலம் இல்லை.

//இப்படி பொத்தாம் பொதுவாக ரசிகர்மன்றங்களை கிண்டலடித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்,நுனிப்புல் மேயாமல் என்ன பிரச்னை என்பதை விலாவாரியாக எழுதுங்கள். //
எப்பொழுது பார்த்தாலும் சூடாகவே(?! ஹி ஹி நமக்கே அப்படி ஒரு நினைப்புதான்) எழுதுகிறோமே ஒரு நக்கலாக எழுதலாமே என்றுதான் எழுதினேன், மற்றபடி ரசிகர்மன்றங்களின் மீதான எனது விமர்சனத்தைதான் எழுதியுள்ளேன், ஏன் எப்பொழுது பார்த்தாலும் ரசிகர்மன்றங்களை எதிர்க்கின்றேன் என்பது பின்னூட்டங்களில் சொல்லுமளவுக்கு சிறிய விடயமல்ல தனியாக ஒரு பதிவே எழுதுகின்றேன், ஏதோ நான் மருத்துவர் இராமதாசுவினால் தான் ரசிகர்மன்றங்களை எதிர்க்கின்றேன் என யாரும் தவறாக எண்ண வேண்டாம், மருத்துவரெல்லாம் நடிகர்களை குறை சொல்லும் முன்னிருந்தே ரசிகர்மன்றங்களை விமர்சிப்பவன், கடைசியாக பார்த்த ரஜினியின் திரைப்படம் முத்து தாங்க, இந்த காலக்கட்டத்தில் மருத்துவர் ரசிகர்மன்றங்களை எல்லாம் எதிர்க்கவேயில்லை.

திரு.ராம்கி அவர்களே இந்த பதிவின் முதல் பின்னூட்டத்தில் நான் கொடுத்ததில் ஏதேனும் மறுப்பு,தவறு இருக்கின்றதா??


Post a comment Home Index

Links to this post

Create a Link