12 June 2006 

சென்று வருகிறேன் 13 June 2006

சென்று வருகிறேன்.

நன்றி, வணக்கம்.இவண்

உங்கள்
ஞான்ஸ்

09 June 2006 

ஏதோ ஒரு போதையில்...

Photobucket - Video and Image Hosting

கருநீல வானத்தில் மிதக்கும் வெண்பஞ்சு மேகக் கூட்டத்தைக் கலைத்திடும் விதமாய் வீசிடும் கீழ்க்காற்று.

இருளை மெல்ல விளக்கித் தள்ள நினைக்கும் லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில் வந்து அறியாமல் மடிந்து போகும் விட்டில் பூச்சிகள்.

எங்கோ உதிர்ந்த சருகுகளைக் கடத்தி வந்தது காற்று; இங்கே கிடக்கின்றன.

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தின் எரிச்சலால் நீர்க்குட்டையில் விழுந்து திளைத்திருக்கும் எருமைக் கூட்டம்.

கட்டுப்பாடு ஏதுமின்றி மலருக்கு மலர் தாவி தேன் உண்டு மயங்கிக் கிடக்கும் வண்டுகள்.

கடலுக்கு யார் வந்தாலும் வராவிட்டாலும் கரைக்கு வந்துவிட்டு போகும் அலைகள்.

08 June 2006 

நட்ட நடூ...நெலம

Photobucket - Video and Image Hosting

அந்தப்பக்கம் இருக்கறவன் எதையும் காதுல போட்டுக்க மாட்டேங்கறான்;

இந்தப் பக்கம் இருக்கறவன் வாயத் தொறந்து ஒன்னும் பேச மாட்டேங்கறான்;

நடுவுல இருக்கறவன் எதயுமே கண்டுக்க மாட்டேன்னு நடூ...நெலம வகுக்குறானோ?!

 

ஐ திறந்திடு ஐஸ்...


துளி - விழும் - மழை ||
பனி - விழும் - காலை ||

தொங்கும் - தொட்டில் - குரங்கு ||

ஆடும் - மயில் - காடு ||
பாடும் - குயில் - கூடு ||

===== *** ======

தவளை குதித்த குளத்தில்
தண்ணீரின் சத்தம்!

நிலவு மிதந்த வானில்
மேகத்தின் தடங்கள்!

மரங்கள் அடர்ந்த காட்டில்
பூக்களின் நறுமணம்!

அவள் நடந்த பாதையில்
புல்லுக்கும் புல்லரிப்பு!

===== *** ======

07 June 2006 

அவுத்துப் போட்டு ஆடு

எச்சரிக்கை: இது ஒரு ஆபாசம் நிறைந்த பதிவு.
Photobucket - Video and Image Hosting
I repeat, எச்சரிக்கை: இது ஒரு ஆபாசம் நிறைந்த பதிவு.


ஆடு... நன்றாக ஆடு
ஆடி ஆடிக் களைத்திடு
ஆடுவது உடலுக்கு நல்ல பயிற்சி
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்... சுகம்ம்... சுகம்!

*** **** ***

ஆனால் ஆடுவதற்கு முன்...

தலையைச் சுற்றி வளைத்து இறுகப் பின்னி இருக்கும் கூந்தலை அவுத்து போட்டு ஆடு!

மணிக்கட்டை இருகப் பிடித்து கடித்துக் கொண்டிருக்கும் கடிகாரத்தை அவுத்துப் போட்டு ஆடு!

காலில் மாட்டியிருக்கும் தப்பான அளவு கொண்ட ஷூ-வை அவுத்துப் போட்டு ஆடு!

இடுப்பைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு வயிற்றை அமுக்கும் பெல்ட்-டை அவுத்துப் போட்டு ஆடு!

*** **** ***

ஆடு... நன்றாக ஆடு
ஆடி ஆடிக் களைத்திடு
ஆடுவது உடலுக்கு நல்ல பயிற்சி

*** **** ***

இத வுட்டுப் போட்டு, வேற எதயாவது அவுத்துப் போட்டு ஆடுனா.... பிச்சுபுடுவேன் பிச்சு!

 

பார்வை ஒன்றே போதுமா

Photobucket - Video and Image Hostingமத்தவங்க எப்படி நம்பள பாக்குறாங்க அப்டீங்கறத விட,
நாம் எப்டி நம்பள பாக்குறோம்ங்கறது தான் ரொம்ப முக்கியம்!


.

06 June 2006 

இரு விழி வாசல்...


ஓடும் படகில்...

வாடும் மனதுடன்...

தேடும் கண்களோடு...

வந்துகொண்டே இருக்கிறேன்...


காத்திருப்பாயா...

இன்னும் நீ காத்திருப்பாயா...

நான் வருவேன் என்று நம்பி...

காத்திருப்பாயா நீ...

 

மழ பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி...

Photobucket - Video and Image Hosting

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு

ஆறோடும் ஊரா பாத்து டேரா போடு

... ... ...
... ... ...

ஆவியாகி போன நீரோ மேகமாச்சி

மேக நீரும் கீழவந்து ஏரியாச்சி

ஆறு என்ன ஏரி என்ன நீரு ஒண்ணு

வீடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு

கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது

சிப்பிக்குள் சேரும் தண்ணி முத்தாகுது

சேராத தாமரப்பூ தண்ணி போலே

மாறாத எங்கள் வாழ்வு வானம் போலே


- source

 

குருபகவானும் கொண்டக் கடலயும்

Photobucket - Video and Image Hosting_+_Photobucket - Video and Image Hosting

அவிங்க வெக்கிற அந்த சில்லிசிக்கன் + சால்னா இருக்கே, அதுல அப்டி என்ன மாயம் மந்த்ரம் பண்றாங்களோ தெரியல, எனக்கு ரொம்...ப புடிக்கும்; சரின்னு லான்சர கெளப்பிட்டு போனா எல்லா பார்க்கிங்கும் ஃபுல்லா இருக்குது; ஒரு ரெண்டு ரவுண்டு அடிச்சு பாத்தப்புறமா, இன்னிக்கு கொடுப்பின இல்லேன்னு மனச தேத்திக்கிட்டு வேற ஒரு கடக்கி போயி, அங்கியும் பார்க்கிங் ப்ராப்ளம் ஆயி, ஒரு வழியா ஒரு 45 நிமிஷம் கார்லயே சுத்தி சுத்தி வந்து வேற ஒரு டுபாக்கூர் கட பக்கத்துல பார்க்கிங் கெடச்சு வண்டிய போட்டுட்டேன்.

உள்ள போயி, என்னா ஸ்பெஷல்னு கேட்டப்போ, ச்சென்னா பட்டூரா, அடை அவியல் தான் இன்னிக்கு ஸ்பெஷல்னு சொன்னாரு. அந்த அவியல் மேல தேங்கா எண்ண வாட கொஞ்சம் தூக்கலா இருக்கறது எனக்கு அவ்ளோக்கா புடிக்காததுனால, சென்னா பட்டூரா சொல்லிட்டேன். சாலட்+தயிர் வெங்காயம் கொண்டாந்து வெச்சிட்டு உள்ள போயிட்டாரு. அத கடிச்சிக்கிட்டு இருந்தப்போ friend ஒருத்தர் வந்தாரு; எதுத்தாப்ல ஒக்காந்தாரு; சகஜமா பேசிக்கிட்டோம்; அவரும் அயிட்டம் ஆர்டர் பண்ணிட்டாரு.

ரெண்டு பேருக்கும் அயிட்டமும் வந்துச்சு. அவர்கிட்ட,

ச்சென்னா எடுத்துக்கங்க

இல்லிங்க கொண்டக் கடல நாஞ் சாப்டுறது இல்ல

ஏங்க, கொண்டக் கடல புடிக்காதா

அது இல்லீங்க, இப்ப நாஞ் சாப்டக் கூடாது

அப்டியா... என்னங்க விஷயம்

இப்போ எனக்கு குரு திச நடக்குது; குரு திச நடக்குறவங்க கொண்டக் கடல சாப்டக்கூடாது; சாப்ட்டா, குருவோட அருள் கெடக்காது.

அடக் கடவுளே!


'இந்த மேட்டரு குரு பகவானுக்குத் தெரியுமான்னு தெரியலயே' அப்டீன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டு, மத்த ஆபீஸ் மேட்டரான எவ்ளோ புராஜக்ட் இருக்கு, எது எப்ப முடியும்-னு கேட்டு பேசிக்கிட்டே சாப்டு முடிச்சுட்டு, ரெண்டு பேரும் கெளம்பிட்டோம்.

04 June 2006 

ஆடி வரும் பல்லாக்கு

Photobucket - Video and Image Hosting

நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா

இள மாலை நேரம் வந்தாள்
விழி ஓரம் ஏதோ சொன்னாள்
எதையோ நினைத்தாள்... சிரித்தாள்... ஓடினாள்..

மண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்று
நெஞ்சிலே கூடு கட்டி வாழ வந்தாய் இன்று
அந்த மலரும் நினைவு தோண்றும்
அதில் உலகம் மறந்து போகும்
அந்த உறவு தொடர வேண்டும்
இன்ப கனவு பலிக்க வேண்டும்

மின்னலோ சேலை கட்டி வீதி எங்கும் போகும்
அம்மம்மா பார்த்திருந்தால் கண்கள் பட்டு போகும்
இது பருவம் அளித்த சீரோ
உன்னை படைத்த கலைஞன் யாரோ!
அடி இரவில் மலரும் பூவே
எந்தன் இளமை பருகும் தேனே!

source

 

கரிநீலக் கண்ணழகி... கண்ணகி

Photobucket - Video and Image Hostingகரிநீலக் கண்ணழகி கண்ணகி
காவேரிக் கரையிலெத்தி
ஓ..ஓ... கண்டெங்கில் என்னு கொதிச்சு
கண்ணீர் கனகச்சிலம்பு சிலம்பி
ராஜரதேஞ்சல் ஊர்வலம் போகும்
மாமதுராபுரி நீள திரிஞ்சு
செந்தமிழ் கோவலனே பாவம்

கரிநீலக் கண்ணழகி கண்ணகி
காவேரிக் கரையிலெத்தி
ஓ... கண்டெங்கில் என்னு கொதிச்சு
கண்ணீர் கனகச்சிலம்பு சிலம்பி

ஆடம்பரஞ்சலில் அந்தப்புரஞ்சல்
அவலுடெ தெஞ்சல் கேள்காதே மயங்கி
தமிழகம் தலனுரஞ்சி
தெருவில் கேட்டொரு பாழ்கதையாய்
சிலப்பதிகாரத்தின் கரல் துடிக்கல்

கரிநீலக் கண்ணழகி கண்ணகி
காவேரிக் கரையிலெத்தி
ஓ... கண்டெங்கில் என்னு கொதிச்சு
கண்ணீர் கனகச்சிலம்பு சிலம்பி

எதிரிப் பெண்ணின் பூத்திரி கைமேல்
நக்ஷத்ர ராவின் கிலிப்பந்தமாய்
பட்டனஞ்சல் பட்டடையாய்
ஆ மாரில் நின்னும் ச்சிம்மிய நொம்பரம்
இருவஞ்சிநாடன் விரகமாய் மாரி
மன்கதன் ஸ்வர்கத்தில் நிரமாழையாய்

கரிநீலக் கண்ணழகி கண்ணகி
காவேரிக் கரையிலெத்தி
ஓ... கண்டெங்கில் என்னு கொதிச்சு
கண்ணீர் கனகச்சிலம்பு சிலம்பி

ராஜரதேஞ்சல் ஊர்வலம் போகும்
மாமதுராபுரி நீள திரிஞ்சு
செந்தமிழ் கோவலனே பாவம்

கரிநீலக் கண்ணழகி கண்ணகி
காவேரிக் கரையிலெத்தி
ஓ... கண்டெங்கில் என்னு கொதிச்சு
கண்ணீர் கனகச்சிலம்பு சிலம்பி

==== *** ==== *** ====

To listen click here - raaga.com

kannaki film review

lyrics from: pattupetty

01 June 2006 

தோழா... வேரோடு புடுங்கலாம் வாடா

Photobucket - Video and Image Hosting

About me

Tamil Blogs Portal - தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் வாசல்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Technorati Blog Finder

Powered by Blogger
Creative Commons License
This work is licensed.
Powered by Blogger
and Blogger Templates