« Index | Home | பார்வை ஒன்றே போதுமா » | இரு விழி வாசல்... » | மழ பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி... » | குருபகவானும் கொண்டக் கடலயும் » | ஆடி வரும் பல்லாக்கு » | கரிநீலக் கண்ணழகி... கண்ணகி » | தோழா... வேரோடு புடுங்கலாம் வாடா » | பொன் ஏடுகளில் வறுக்க... NJ-info » | பாவம் செய்தால் காதல் » | கடலைத் தேடும் நதிகள் » 

07 June 2006 

அவுத்துப் போட்டு ஆடு

எச்சரிக்கை: இது ஒரு ஆபாசம் நிறைந்த பதிவு.
Photobucket - Video and Image Hosting
I repeat, எச்சரிக்கை: இது ஒரு ஆபாசம் நிறைந்த பதிவு.


ஆடு... நன்றாக ஆடு
ஆடி ஆடிக் களைத்திடு
ஆடுவது உடலுக்கு நல்ல பயிற்சி
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்... சுகம்ம்... சுகம்!

*** **** ***

ஆனால் ஆடுவதற்கு முன்...

தலையைச் சுற்றி வளைத்து இறுகப் பின்னி இருக்கும் கூந்தலை அவுத்து போட்டு ஆடு!

மணிக்கட்டை இருகப் பிடித்து கடித்துக் கொண்டிருக்கும் கடிகாரத்தை அவுத்துப் போட்டு ஆடு!

காலில் மாட்டியிருக்கும் தப்பான அளவு கொண்ட ஷூ-வை அவுத்துப் போட்டு ஆடு!

இடுப்பைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு வயிற்றை அமுக்கும் பெல்ட்-டை அவுத்துப் போட்டு ஆடு!

*** **** ***

ஆடு... நன்றாக ஆடு
ஆடி ஆடிக் களைத்திடு
ஆடுவது உடலுக்கு நல்ல பயிற்சி

*** **** ***

இத வுட்டுப் போட்டு, வேற எதயாவது அவுத்துப் போட்டு ஆடுனா.... பிச்சுபுடுவேன் பிச்சு!

//எச்சரிக்கை: இது ஒரு ஆபாசம் நிறைந்த பதிவு//
ஞான்ஸ், குசும்பு கொஞ்சம் ஒவரா போச்சு உங்களுக்கு


ஆட நினைக்கும் அம்புட்டு பேத்துக்கும் என்னமாக் கருத்துச் சொல்லுதீய..

ஏஜெண்ட்,
ஆ... பாசமான பதிவு போடும்
ஆ... பாசமான ஆளுவே நீர்..

பி.கு:கடைசி 2 வரியிலே முதல்ல ஆன்னு வர்ற இடத்துல்ல சேத்துப் படிச்சா நான் பொறுப்பு இல்ல சாமீ.


//பிச்சுபுடுவேன் பிச்சு!// நீங்க எந்த பிச்சு'வ சொல்றீங்க??


//குசும்பு கொஞ்சம் ஒவரா போச்சு // -இளா

இளா, எதிர்பார்ப்புக்கள் குறைந்து விட்டால் ஏமாற்றங்கள் இருக்காது! ஆகவே யாருடைய தூண்டுதலும் எதிர்பார்ப்பை நம்மில் உண்டு பண்ணக் கூடாது என்பது இந்தப் பதிவின் நீதி!!

:-)


//என்னமாக் கருத்துச் சொல்லுதீய...// Dev

எலே தேவு,
நாங் கேக்றேன், கருத்துச் சொல்ல நாம யாருலே! அட.. அவுக இவுக சொன்ன கருத்து எல்லாத்தயும் கேட்டாங்களாவே இவிங்க! அப்டி இருக்கரப்போ நாம யாருவே கருத்துச் சொல்ல!

சேத்து சேத்துப் படிச்சா என்ன
சோத்தத் தின்னு பட்டிச்சா என்ன
படிச்சது வேஸ்ட்... புடிச்சது ரோஸ்ட்!
அவ்வளவு தான்!
:-)


//யாருடைய தூண்டுதலும் எதிர்பார்ப்பை நம்மில் உண்டு பண்ணக் கூடாது என்பது இந்தப் பதிவின் நீதி!!
//

என்னங்க ஞான்ஸ்,
இப்படி நீதியையெல்லாம் தெளிவா சொல்றீங்க!


//எந்த பிச்சு'வ சொல்றீங்க?? // - ராசா(தி ராசா)!

ராசா, நீங்க நல்ல புள்ள(மாதிரி!)

இப்டி வெளக்கமா வேணும்னு கேட்டா நா என்னத்த சொல்றது!


//இப்படி நீதியையெல்லாம் தெளிவா சொல்றீங்க! // - சிபி

So, என்னய கொலகாரன் ஆக்காம நீரு உடமாட்டீரு! அப்டிதானே!!


//So, என்னய கொலகாரன் ஆக்காம நீரு உடமாட்டீரு! அப்டிதானே!! //

உம்ம நீதியைப் படிச்சிபோட்டு நான் விழுந்து விழுந்து சிரிச்சு, மூச்சடைச்சி செத்துப் போனா நீரு கொலைகாரன் இல்லாம வேற என்னவாம்?

:-)))))))))))))))))))))))))))))))))))


//I repeat, எச்சரிக்கை: இது ஒரு ஆபாசம் நிறைந்த பதிவு.//

அண்ணே
ஏஜெண்ட் அண்ணே இப்படி புயல் அடிகப்போவுது மழை பிச்சு உதறப்போகுதுன்னு எச்சரிக்கை விடுறீங்களேன்னு அடிச்சுப் பொரண்டு ஒதுங்கினேன் ! ஆனா ஒரு சின்னத்தூறல் கூட இல்லையே ?? இது என்ன ஞாயம்? :(


தலைப்பை பாத்துட்டு சிரிப்பே நிக்கலை.:-)))


//உம்ம நீதியைப் படிச்சிபோட்டு நான் விழுந்து விழுந்து சிரிச்சு..// - சிபி

சிரிக்கும் அளவுக்...கு எமது நீதி என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கா!?!

கைப்புள்ள, சங்கத்துல ஒரு புல்லுருவி, என்னான்னு கவனி!


இது ஒரு தரங்கெட்ட பதிவு (ஏன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.. சரி சரி சொல்றேன்.. ஏன்னா இந்த பதிவுல **** என்ற வார்த்தை(கள்) இருக்கு. ஓ, **** வார்த்தை(கள்) மீண்டும் மீண்டும் இருப்பதால் இது ஒரு மிக மிக தரங்கெட்ட பதிவு...)


//படிச்சது வேஸ்ட்... புடிச்சது ரோஸ்ட்!//
என்னா ஒரு குத்து வசனம்
(Punch டயலாக் தமிழாக்கம்)
யாருப்பா அது மறுமொழிப்புயல் "இளா"ன்னு பாராட்டுறது.


//ஒரு சின்னத்தூறல் கூட இல்லையே ?? இது என்ன ஞாயம்// - ஜொள்பாண்டி(ச்சிங்கம்)

பாண்டி, நாமல்லாம் எப்டிப்பட்ட எழுத்துக்காரங்க! அப்டி எழுதுவமா! இல்ல எழுதத்தான் மனசு வருமா! ச்சும்மா தான கேட்டீங்க, தூறல் வேணுமுன்னு!

சின்னச் சின்ன சாரல் என்ன!
என்னைக் கொஞ்சும் தூறல் என்ன!

அப்டீன்னு பாடிக்கிட்டே படுத்துத் தூங்குக!!
:-)


//தலைப்பை பாத்துட்டு சிரிப்பே நிக்கலை.:-))) // *செல்வன்*

ஆபாசமான வார்த்தைகள் நிறைந்த ஒரு தலைப்பைப் பார்த்து சிரிப்பு வருகிறதா! பொங்கி எழுந்து சூறாவளியாய் சுற்றிச் சுழன்று சின்னா பின்னமாக்க வேண்டாமா!

நான் பதிவு போட்றது வெளயாட்டா தெரியுது இல்ல!

ஓ... ஓ...
Blogging என் பாவம் என்றால்
என்னைத் தண்டிக்க வாருங்களேன்!
இந்த key boardu சாட்சி, monitor சாட்சி!
பாவத்தை நான் செய்கிறேன்!!!

:-)


நா இதை படிக்கிலைங்க


//ச்சும்மா தான கேட்டீங்க, தூறல் வேணுமுன்னு!//

ஆமாண்ணே பின்னே நெசமாலுமே கேட்பேனா ?? :))))


//என்னா ஒரு குத்து வசனம்
(Punch டயலாக் தமிழாக்கம்)
மறுமொழிப்புயல் "இளா"//

ஓ.... புயலே!
கரையை நீ கடப்பது எப்போ!
நான் குளிக்கப் போகனும்

வருவீயா.. வரமாட்டியா...
வரலேன்ன்ன ஒம் பேச்சு கா!!!!


//ஆபாசமான வார்த்தைகள் நிறைந்த ஒரு தலைப்பைப் பார்த்து சிரிப்பு வருகிறதா! பொங்கி எழுந்து சூறாவளியாய் சுற்றிச் சுழன்று சின்னா பின்னமாக்க வேண்டாமா!//

இப்பவெல்லாம் நீங்க சீரியஸா எழுதினாலும் எங்களுக்கென்னவோ காமெடியாத்தான் தெரியுது!

:-))


//இது ஒரு தரங்கெட்ட பதிவு // - முகமூடி

இதை ஒரு குறையாக பார்க்காமல்
மணம் வீசும் சந்தனக் கறையாகவே பார்க்கிறேன்!
எப்படி என்பார்வை!!


//நா இதை படிக்கிலைங்க // உஷா(ர்)!

திரும்ப வந்து, ஒங்க கமெண்டுக்கு பதில் சொல்லிருக்கேனான்னு பாப்பீங்கதானே, அப்ப படிச்சுக்கங்க!


//நாங் கேக்றேன், கருத்துச் சொல்ல நாம யாருலே!//
நாம யாருண்ணே?

//அட.. அவுக இவுக சொன்ன கருத்து எல்லாத்தயும் கேட்டாங்களாவே இவிங்க!//
கேக்கல்லயாண்ணே?

//அப்டி இருக்கரப்போ நாம யாருவே கருத்துச் சொல்ல!//
சரிங்கண்ணே


//சேத்து சேத்துப் படிச்சா என்ன
சோத்தத் தின்னு பட்டிச்சா என்ன
படிச்சது வேஸ்ட்... புடிச்சது ரோஸ்ட்!
அவ்வளவு தான்!//

அவ்வளவு தாங்கீறியளா?


//பின்னே நெசமாலுமே கேட்பேனா ?? :)))) // -ஜொள்பாண்டி

கேட்டாலும் நாம குடுத்துருவமா என்ன?!
;-)


//இப்பவெல்லாம் நீங்க சீரியஸா எழுதினாலும் எங்களுக்கென்னவோ காமெடியாத்தான் தெரியுது! // - சிபி

பார்வைகள் பலவிதம்; ஒவ்வொருவருக்கும் ஒருவிதம்!
இதில் ஒன்றும் ப்ரச்சினையில்லை!!

{சிபி இப்டியே எழுதிக்கிட்டே நீரு எதாச்சும் ஒரு கமெண்ட்ல மாட்டிக்குவீரு! அப்புறம் நா உள்குத்து தோண்டி எடுத்தா, தனி மெயில் போடுவீரு!! ஜாக்கிரத!!}

;-)


//நாம யாருண்ணே?
கேக்கல்லயாண்ணே?
சரிங்கண்ணே
அவ்வளவு தாங்கீறியளா? // - தேவ் (Dev)

ஏம்ப்பா தேவு,
பதில் சொல்லியே என் தாவு தீந்திடும் போல இருக்கு!

கழுத்து வலிக்கலியா, இவ்ளோ வேகமா தலயாட்டுறீரு!!
:-))


//{சிபி இப்டியே எழுதிக்கிட்டே நீரு எதாச்சும் ஒரு கமெண்ட்ல மாட்டிக்குவீரு! அப்புறம் நா உள்குத்து தோண்டி எடுத்தா, தனி மெயில் போடுவீரு!! ஜாக்கிரத!!}
//

ஆஹா! கெளம்பீட்டாங்கையா! கெளம்பீட்டாங்கையா!

இப்பவே சரண்டர்!
:-)


//தலயாட்டுறீரு!!//

தல ஆடுனா கழட்டிப் போட்டுட்டு ஆடணுமாண்ணே? நீங்கப் பிச்சுப்புட மாட்டீங்களாண்ணே??

விவரம் இல்லாம கேட்டிருந்தா விட்டுருங்கண்ணே


என்னய்யா இது? பதிவையே படிக்கவில்லைன்னு தெளிவா சொல்லிட்டேன். அப்படி இருக்க,
பின்னுட்டத்தையா படிக்கப் போறேன்.


அட நம்மபதிவை படிக்க ஆள்வராமபோனாலும்,பின்னுட்டம் குறைந்துபோனாலும் அதை சரிகட்ட இப்படி ஒரு வழியா? நம்ம புத்திக்கு இதல்லாம் எட்டமாட்டேங்குதே. தி. ரா. ச


ஆடுங்க ஆடுங்க... நல்லா அவுத்து போட்டு ஆடுங்கப்பா! (வாட்சை சொன்னேன்)


//விவரம் இல்லாம கேட்டிருந்தா விட்டுருங்கண்ணே // -dev

விவரத்தின் விடி வெள்ளி தேவ் வாழ்க! வாழ்க!!


//பின்னுட்டத்தையா படிக்கப் போறேன். // - உஷா

சரி, நீங்க எப்டியும் இதுக்கு மேல மூனாவது தடவயா வரமாட்டீங்க, அதுனால, பதில் போட்றத தள்ளி வெக்கிறேன்!
:-)


//ஆள்வராமபோனாலும்,பின்னுட்டம் குறைந்துபோனாலும் அதை சரிகட்ட இப்படி ஒரு வழியா? // - TRC

பாருங்க, தொழில் ரகசியத்த இப்டி பப்ளிக்கா போட்டு ஒடைக்கக் கூடாது! அப்புறம் தொழில் படுத்துரும்!!
:-)


//அவுத்து போட்டு ஆடுங்கப்பா! //- மாயி

ஹாய் மாய்,
என்ன இப்டி அசிங்கமா பேசிக்கிட்டு!
Its a decent blogging place you know!
:-))


ஹா,-ஷா!!!
நீங்க!இதெல்லாம் கட்டிக்கிட்டா??, ஆடுவீங்க!!சுத்தப் பட்டிக்காட்டானா,,, இருக்குறீங்களே!!

வதனி


//ஆடு... நன்றாக ஆடு//

இதை அந்த ஆடு படிச்சிருக்கும்னு நெனைக்கிறீங்க?
:)


கைப்பு,
நம்புங்க, ஆடு படிச்சுது; படிச்சுட்டு ஆடுச்சு! அதனால தான் அதுக்கு பேரு ஆடு!


ஞானம்ஸ்,

தலைப்பைப் பார்த்ததும், என்னடா இந்த மனுஷன் வம்பை விலைக்கு வாங்கிறார் போல இருக்கு என்று நினைத்துக் கொண்டு வந்தேன்.
நல்லவேளை, நான் நினைச்சது மாதிரி ஒன்றும் இல்லை.

நல்ல நகைச்சுவையான பதிவு. உண்மையில் படித்ததும் வாய்விட்டுச் சிரித்தேன்.

நன்றி.

அன்புடன்
வெற்றி


நல்லவேளை இப்பவாவது புரிஞ்சிக்கிட்டீங்களே :-))))


Post a comment Home Index