குருபகவானும் கொண்டக் கடலயும்
_+_
அவிங்க வெக்கிற அந்த சில்லிசிக்கன் + சால்னா இருக்கே, அதுல அப்டி என்ன மாயம் மந்த்ரம் பண்றாங்களோ தெரியல, எனக்கு ரொம்...ப புடிக்கும்; சரின்னு லான்சர கெளப்பிட்டு போனா எல்லா பார்க்கிங்கும் ஃபுல்லா இருக்குது; ஒரு ரெண்டு ரவுண்டு அடிச்சு பாத்தப்புறமா, இன்னிக்கு கொடுப்பின இல்லேன்னு மனச தேத்திக்கிட்டு வேற ஒரு கடக்கி போயி, அங்கியும் பார்க்கிங் ப்ராப்ளம் ஆயி, ஒரு வழியா ஒரு 45 நிமிஷம் கார்லயே சுத்தி சுத்தி வந்து வேற ஒரு டுபாக்கூர் கட பக்கத்துல பார்க்கிங் கெடச்சு வண்டிய போட்டுட்டேன்.
உள்ள போயி, என்னா ஸ்பெஷல்னு கேட்டப்போ, ச்சென்னா பட்டூரா, அடை அவியல் தான் இன்னிக்கு ஸ்பெஷல்னு சொன்னாரு. அந்த அவியல் மேல தேங்கா எண்ண வாட கொஞ்சம் தூக்கலா இருக்கறது எனக்கு அவ்ளோக்கா புடிக்காததுனால, சென்னா பட்டூரா சொல்லிட்டேன். சாலட்+தயிர் வெங்காயம் கொண்டாந்து வெச்சிட்டு உள்ள போயிட்டாரு. அத கடிச்சிக்கிட்டு இருந்தப்போ friend ஒருத்தர் வந்தாரு; எதுத்தாப்ல ஒக்காந்தாரு; சகஜமா பேசிக்கிட்டோம்; அவரும் அயிட்டம் ஆர்டர் பண்ணிட்டாரு.
ரெண்டு பேருக்கும் அயிட்டமும் வந்துச்சு. அவர்கிட்ட,
ச்சென்னா எடுத்துக்கங்க
இல்லிங்க கொண்டக் கடல நாஞ் சாப்டுறது இல்ல
ஏங்க, கொண்டக் கடல புடிக்காதா
அது இல்லீங்க, இப்ப நாஞ் சாப்டக் கூடாது
அப்டியா... என்னங்க விஷயம்
இப்போ எனக்கு குரு திச நடக்குது; குரு திச நடக்குறவங்க கொண்டக் கடல சாப்டக்கூடாது; சாப்ட்டா, குருவோட அருள் கெடக்காது.
அடக் கடவுளே!
'இந்த மேட்டரு குரு பகவானுக்குத் தெரியுமான்னு தெரியலயே' அப்டீன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டு, மத்த ஆபீஸ் மேட்டரான எவ்ளோ புராஜக்ட் இருக்கு, எது எப்ப முடியும்-னு கேட்டு பேசிக்கிட்டே சாப்டு முடிச்சுட்டு, ரெண்டு பேரும் கெளம்பிட்டோம்.

'இந்த மேட்டரு குரு பகவானுக்குத் தெரியுமான்னு தெரியலயே' :-)),Good one!
..aadhi
Posted by Anonymous | Tue Jun 06, 08:10:00 am (IST)
//இப்போ எனக்கு குரு திச நடக்குது; குரு திச நடக்குறவங்க கொண்டக் கடல சாப்டக்கூடாது; சாப்ட்டா, குருவோட அருள் கெடக்காது.
ஓ அப்படியா ? சரி நடக்கட்டும் நாடகம் !
Posted by Karthik Jayanth | Tue Jun 06, 02:17:00 pm (IST)
குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலையெல்லாம் போடறப்ப,
அதைச் சாப்புட்டாத்தான் புடிக்குமாம்.
இப்படித்தான் ஒவ்வொருத்தரும் ஒண்ணைச் சொல்லி வச்சுட்டுப் போயிடரது.
இன்னிக்குக் கொண்டைக்கடலை சமைக்கலாமுன்னு ஊறவச்சுட்டு இங்கே வந்து பார்த்தா
இந்தப் பதிவு.
இப்ப நான் சமைக்கிறதா? வேணாமா?
Posted by துளசி கோபால் | Tue Jun 06, 02:17:00 pm (IST)
//சரி நடக்கட்டும் நாடகம் !// - karthik
பேராசிரியரே,
இது நாடகமா தெரியுதா?
No, உண்மைச் சம்பவம்!!!
Posted by ஏஜண்ட் NJ | Tue Jun 06, 09:24:00 pm (IST)
//இப்ப நான் சமைக்கிறதா? வேணாமா?// - Thulasi
ஒங்களுக்கு குரு திச நடக்குதா, இல்ல வடமேற்கு திச நடக்குதாங்கறதப் பொறுத்தது!!
:-)
Posted by ஏஜண்ட் NJ | Tue Jun 06, 09:25:00 pm (IST)
//இப்போ எனக்கு குரு திச நடக்குது//
(அட எனக்குக் கூட!?)புரியுதுங்க ஞான்ஸ்!
கல்யாணம் ஆகப் போகுதுன்னு சொல்லுங்க!
:-)
Posted by நாமக்கல் சிபி | Wed Jun 07, 01:11:00 am (IST)
என்ற வூட்டுக்காரியும் புள்ளயும் சரின்னு சொன்னாக்கூட நா ரெடி இல்லீங்கோ இன்னோரு கல்யாணத்துக்கு!
நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு சொன்னத கெட்டியா புடிச்சுக்குட்டேனுங்க!
;-)
Posted by ஏஜண்ட் NJ | Wed Jun 07, 03:17:00 am (IST)
ஐயகோ, நான் காண்பது கனவா இல்லை நனவா? ஒவ்வொரு வரிகளும் தெளிவாய் புரிகிறதே!!! அவ்விதம் எம் தமிழ் புலமை விருத்தியடைந்துவிட்டதா? முருகா, முத்தமிழ் தந்த தலைவா! நீயே செப்புவாயாக!
துளசி! வீட்டில் துளசி செடியிருந்தால், இண்டு இலைகளைக் கிள்ளி எடுத்து, தூய நீரில் இட்டு, தீர்த்தம் தயாரித்து, அதை சென்னா மீது மேல் தெளித்துவிட்டு, குருபகவானை மனதில் தியானிக்கொண்டே சென்னா பட்டுராவை வெட்டுக.
Posted by ramachandranusha(உஷா) | Wed Jun 07, 03:31:00 am (IST)
//ஒவ்வொரு வரிகளும் தெளிவாய் புரிகிறதே!!! அவ்விதம் எம் தமிழ் புலமை விருத்தியடைந்துவிட்டதா? முருகா//
முதலைப் படம் மாற்றி குதிரைப் படம் போட்டால்
புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியதது எல்லாம் தெளிவாகத் தெரியும் என்று ஞானபீடானந்தா சொல்லிருக்கார்!
துளசிச் செடியைக் கிள்ளினால், வாத பித்த கப தோஷம் வரும் என்று கபடானந்தா சொல்லிருக்கார்!
:-)
Posted by ஏஜண்ட் NJ | Wed Jun 07, 03:51:00 am (IST)
என்னங்க இப்படி திடீர்னு...quite Un-Njaans like???
எல்லாம் சரி...உமக்கு சிக்கன் ஏன் கெடக்கலை? ஒங்களுக்கு எந்த தெசை நடக்குது
:)
Posted by கைப்புள்ள | Wed Jun 07, 04:02:00 am (IST)
//ஐயகோ, நான் காண்பது கனவா இல்லை நனவா? ஒவ்வொரு வரிகளும் தெளிவாய் புரிகிறதே!!! அவ்விதம் எம் தமிழ் புலமை விருத்தியடைந்துவிட்டதா? முருகா, முத்தமிழ் தந்த தலைவா! நீயே செப்புவாயாக!//
அதானே! ;-D
Posted by இலவசக்கொத்தனார் | Wed Jun 07, 04:16:00 am (IST)
Kaippu,
சிக்கனுக்கு சுக்ரதிச நடந்திருக்கலாம், அதான் எனக்கு சிக்கன் கெடக்கலே!
Posted by ஏஜண்ட் NJ | Wed Jun 07, 04:56:00 am (IST)
முருகா,
இத்தனிநாள் புரியாதவர்களுக்கும்,
எம்பதிவை புரியவைத்ததற்காக,
உனக்கு ஒரு
ஆரோகரா!!
Posted by ஏஜண்ட் NJ | Wed Jun 07, 05:00:00 am (IST)