« Index | Home | பாவம் செய்தால் காதல் » | கடலைத் தேடும் நதிகள் » | துரோகி... » | து... து... து... :-) » | நைல் நதியின் லீலி புஷ்பங்கள் » | புல்+இ = புலி » | வாடி... வாடி... நாட்டுக்கட்ட » | பூனைகள் மற்றும் ஆந்தைகள் » | நாயின் பேர் அப்பாய் » | வானிலை அறிவிப்பு » 

31 May 2006 

பொன் ஏடுகளில் வறுக்க... NJ-info

வலைப்பதிவர் பெயர்: Agent 8860336 ஞான்ஸ் (NJ)

வலைப்பூ பெயர் : ஞானபீடம்

சுட்டி(url) : http://njanapidam.blogspot.com

ஊர்: யாதும் ஊரே! (யார் கேட்டாலும் ஏஜெண்ட்கள் சொல்லக்கூடது என்ற விதி உள்ளது!)

நாடு: 'உலகமே உள்ளங்கையில்' So, நான் என்னோட உள்ளங்கைல தானே இருக்கனும்!

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: Blogger

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 19 March 2005

இது எத்தனையாவது பதிவு: 128 (Bit-க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னா, எல்லா பதிவுமே பிட் அடிச்சதுதான் )

இப்பதிவின் சுட்டி(url):
http://njanapidam.blogspot.com/2006/06/nj-info.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இலக்கிய உப்புமா செய்ய!

சந்தித்த அனுபவங்கள்: அது வெஜிடபிள் பிரியாணி மாதிரி, எல்லாம் கலந்தது!

பெற்ற நண்பர்கள்: எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது!

கற்றவை : Its a small world

எழுத்தில் கிடைத்த சுதந்திரம் : டிஸ்கி+ஸ்மைலி போட்டுட்டு நெறய எழுதலாம்!

இனி செய்ய நினைப்பவை : இலக்கிய உப்புமாவோடு, கேசரி மற்றும் அல்வா...!!

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு : 6 அடிக்கு 1 இன்ச் உசரம் கம்மி, ஒடிசலான தேகம், வலது கை பழக்கம்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
வாரீர்... வாரீர், ஞானபீடம் வலைப்பதிவுக்கு வாரீர்!!

//6 அடிக்கு 1 இன்ச் உசரம் கம்மி, ஒடிசலான தேகம், வலது கை பழக்கம்.//

காணாமல் போன அன்று கை இல்லாத சிகப்பு கலர் பனியனும், ஜோபி இல்லாத நீல கலர் நிக்கரும் அணிந்திருந்தார். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
காவல்துறை ஆணையர்
காவல்துறை கட்டுப்பாட்டு அறை
எழும்பூர்
தொலைபேசி எண் : 8253375

பில் இன் தி பிளாங்க்ஸ் பண்ணிட்டேன் தல - செய்வன திருந்தச் செய்.
:)


ஹைய்யா, முதல் முறையாய் வரிக்கு வரி புரிந்தது


//ஹைய்யா, முதல் முறையாய் வரிக்கு வரி புரிந்தது//

ஞான்ஸ்.. உங்க பதிவை யாரோ hack பண்ணி, எல்லாருக்கும் புரியர மாதிரி எல்லாம் பதிவு போட்டிருக்காங்க.. சீக்கிரம் ஒடியாந்து என்னன்னு கவனிங்க..


புரிதல் என்பது ஒரு ஒப்புமை பதம்.

அதில் சரியான புரிதல், அரை குறை புரிதல், தவறாக புரிதல் என வகைகள் உண்டு.

ஒரு விஷயம் நமக்குப் புரிகிறது என்று சொல்லும்போது, நமக்கு ஏற்கெனவே தெரிந்த, நன்கு பரிச்சயப்பட்ட மற்றொரு விஷயத்தோடு இந்த புதிய விஷயத்தை ஒப்புமை செய்து இரண்டு விஷயங்களுக்குமான தொடர்பை இனம் கண்டு, புரியாத விஷயத்தினைப் பற்றிய புரிதல் பெறுகிறோம். இந்த புரிதலானது எல்லா நேரங்களிலும் முழுமை அடைகிறது என்று ஊர்ஜிதப்படுத்த முடியாது.

ஏனெனில் நமக்கு முன்னமே தெரிந்த ஒரு விஷயமானது, இந்த புதிய விஷயத்தின் எல்லா பரிமாணங்களையும் எடுத்துக் காட்டி, விளக்கம் தந்து புரிதலை ஏற்படுத்தும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் உறுதிப்படுத்த முடியாதவை. புதிய விஷயம் பரிணாம வளர்ச்சி அடைந்து பல்வேறு காரணிகளைத் தன்னகத்தே கொண்டு ஒரு சிக்கலான மூலக்கூறின் அமைப்பைப் பெற்றிருக்கும் போது, புதிய விஷயத்தின் ஒரு சில பரிமாணங்களை மட்டுமே பழைய விஷயம் கொண்டிருந்தால் அரைகுறை புரிதலுக்கு வழிவகுக்கப்படும்; அது பல தவறான புரிதல்களுக்கும் வழிகோலலாம்.

இதற்கு ஒரு உதாரணமே சொல்வதுண்டு,

"பாவம், பால் குடிச்சப்போ கொழந்தக்கி பொற ஏரி, இப்ப கொழந்தய ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க" அப்டீன்னு ரெண்டு பேர் பேசிட்டிருந்தப்போ, பார்வை இல்லாத ஒருவர் அவங்கள்ட கேட்ருக்கார், என்னங்க விஷயம், குழந்த ஆஸ்பத்திரியில இருக்குன்னீங்களேன்னு. அவங்க சொன்னாங்க, ஆமாங்க கொழந்த பால் குடிக்கறப்போ பொற ஏரி இப்போ ஆஸ்பத்திரில இருக்குதுங்க. பார்வை இல்லாதவர் கேட்ருக்கார், பால் குடிச்சதுங்கறீங்களே, பால் எப்டி இருக்கும்-ங்க. அவங்க சொன்னாங்க, பால் வெள்ளயா இருக்கும்-னு. திரும்ப கேக்குறாரு பார்வை இல்லாதவரு வெள்ள-அப்டீனா எப்டி இருக்கும்-னு. இவுங்க சொன்னாங்க, வெள்ள-ன்ன கொக்கு மாதிரி இருக்கும்-னாங்க. கொக்கு எப்டி இருக்கும்-னாரு பார்வை இல்லாதவரு. இவுங்க பாத்தாங்க, இவருக்கு எப்டி கொக்கு-ங்கற புரியவைக்கிறதுன்னுட்டு, ஒரு கைய வளைச்சு கொக்கு மாதிரி ஆக்கி, அவர தடவிப்பாக்கச் சொன்னாங்க. பார்வை இல்லாதவர் தடவிப் பாத்துட்டு சொன்னாராம், "இவ்ளோ பெரிய பாலை கொழந்த குடிச்சா, பொற ஏராதா பின்ன; ஒங்கள யாரு குடுக்கச் சொன்னது"-னு கேட்டாராம்.

இப்டி பால் அப்டீங்கற ஒரு விஷயத்த, வெள்ளை , கொக்கு, வளைந்த கை இப்டின்னு ஒப்புமைப் படுத்திப் புரிய வைக்கிறதுல சிக்கல் இருக்குங்கறேன்!

அதனால,

புரிஞ்சுது-ன்னு சொன்னா புரிஞ்சுதுன்னு (அர்த்தம்) இருக்க வேண்டிய அவசியம் இல்ல!
என்ன புரிஞ்சுதுங்களா?!!!


தேவையா.. உனக்கு இது தேவையா..! (எனக்கு நானே கேட்டுக்கறேன்)


//புரிஞ்சுது-ன்னு சொன்னா புரிஞ்சுதுன்னு (அர்த்தம்) இருக்க வேண்டிய அவசியம் இல்ல!
என்ன புரிஞ்சுதுங்களா?!!!//

இந்த சின்ன விஷயம் கூட புரியலைன்னா எப்படிங்க? Crystal clear.

Give me more!


//பில் இன் தி பிளாங்க்ஸ் பண்ணிட்டேன் தல
Give me more! //

கைப்புள்ள, ஒமக்கு more, தயிர் எல்லாம் குடுக்க கட்டதுரைதான் வரனும் போல,
டாய்... கட்டதொர எங்க இருந்தாலும் வாடா... வந்து எங்க கைப்பு மேல கைய வெச்சுப் பாருடா!
கைப்பு சிங்கம்லே!!


//(எனக்கு நானே கேட்டுக்கறேன்) // - ராசா

தனக்குத் தானே கேட்டுக்கறது எல்லாம் வர்ற ஐப்பசிக்கு பொறவு சரியாப் போயிடும்!
;-)


தல,

//இலக்கிய உப்புமா செய்ய!

அனைவரும் அறிந்த ஒன்று என்றே அறிகிறேன்.

// இலக்கிய உப்புமாவோடு, கேசரி மற்றும் அல்வா...!!

இதை பரிணாமத்தின் வளர்ச்சி என்று கொள்ளலாமா ?


//இலக்கிய உப்புமாவோடு, கேசரி மற்றும் அல்வா...!! இதை பரிணாமத்தின் வளர்ச்சி என்று கொள்ளலாமா// - கார்த்திக்

இல்லை, உப்புமாவின் எழுச்சி (அ) மறுமலர்ச்சி என்று கொல்லவேண்டும்!


//டாய்... கட்டதொர எங்க இருந்தாலும் வாடா... வந்து எங்க கைப்பு மேல கைய வெச்சுப் பாருடா!
கைப்பு சிங்கம்லே!! //

யாராவது கூப்பிட்டீங்களா?

யாரு இங்க சிங்கம்னு சொல்லிகிட்டு திரியறது?


//ஹைய்யா, முதல் முறையாய் வரிக்கு வரி புரிந்தது//

//ஞான்ஸ்.. உங்க பதிவை யாரோ hack பண்ணி, எல்லாருக்கும் புரியர மாதிரி எல்லாம் பதிவு போட்டிருக்காங்க.. சீக்கிரம் ஒடியாந்து என்னன்னு கவனிங்க.. //

உம்ம பதிவை விட இது நல்ல காமெடியா இருக்கு ஞான்ஸ்!


//தேவையா.. உனக்கு இது தேவையா..! (எனக்கு நானே கேட்டுக்கறேன்) //

:-))

ஐயோ! ஐயோ.

(கைப்பு ஸ்டைலில் படிக்கவும்)


//ஹைய்யா, முதல் முறையாய் வரிக்கு வரி புரிந்தது
//

சரியான காமெடியான பின்னூட்டம் போட்டிருக்காங்க உஷாக்கா!
:-))


என்க நீங்க கண்டி பிடிங்க பார்க்கலாம்?
யாரு இப்போ பின்னூட்டம் போட்டிருக்காங்கன்னு?


மேலிருக்கும் பின்னூட்டத்தை அனுப்பியது ஒரு தமாஷ் பேர்வழி!

:-))


Post a comment Home Index

Links to this post

Create a Link