29 March 2006 

Just do it

ஒரே நிலையில் நின்று விடாமல்...
சாய்ந்தும்...
வளைந்தும்...
குனிந்தும்...

நடந்தும்...
ஓடியும்....
குதித்தும்...

படுத்தும்...
எழுந்தும்...
அமர்ந்தும்...

செய்வீர்... உடற்பயிற்சி!


Caution:

Adult content.... DO NOT click on the image below.

Image hosting by Photobucket

15 March 2006 

நூலும் இல்லை... வாலும் இல்லை...

Image hosting by Photobucket
வசந்த ஊஞ்சலிலே...


அசைந்த பூங்கொடியே...


உதிர்ந்த மாயம் என்ன...


உன் இதய சோகம் என்ன...


உன்... இதய சோகம்... என்ன
Link: ரயில் பயணங்களில்

13 March 2006 

மருதமலை மாமணிகோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்தமலை ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா

(மருதமலை)

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா

(மருதமலை)

கோடிகள் கொடுத்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்..ஆ..

(மருதமலை)

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பற்றித் தணிந்திட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே... அழகிய தமிழ்மகனே...
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுபலம் உறுதுணை முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா....

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா

===== ***** ====== ***** ======

மருதமலை முருகன் கோவில் பற்றி...

===== ***** ====== ***** ======

film - Dheivam
singer - mathurai sOmu
lyrics - kaNNadasan
MD - kunnakkudi vaidyanathan

===== ***** ====== ***** ======

11 March 2006 

கலைந்து போகும் கோலங்கள்

ம்...
என்னத்த கடலுக்கு போயி...
என்னத்த மீன் புடிச்சி...

Image hosting by Photobucket

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

நேத்துவர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

முக்குளிச்சி நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வச்சேனே
வச்சதிப்பொ காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்

நான் படிக்கும் மோகனமே நான் படிக்கும் சீதனமே
தேன் வடித்த பாத்திரமே தென்மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சி கண்ணீரில் நின்னாச்சு

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

=== *** === *** === *** ===

MOVIE : VAIDEGI KAATHIRUNTHAAL
MUSIC : ILAIYARAAJA
SINGES : P JEYACHANDRAN

Audio Link

09 March 2006 

ஏலேலோ... ஐலசா...மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா

மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா

மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா

கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா

இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா

பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா

பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா

காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா

பழத்தை நம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா

மகனை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா

உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்க ஐலசா

என்னை நம்பி ஏலேலோ எமன் இருக்க ஐலசா

எமனை நம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா

காட்டை நம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா


குடும்பப் பாட்டுகள்

07 March 2006 

வீரன்அண்ணே சர்ட் போட்டா மாஸ்(க்)...
அண்ணே பேண்ட் போட்டா மாஸ்(க்)...
அண்ணே மடிச்சு விட்டா மாஸ்(க்)...
அண்ணே நடந்து வந்தா மாஸ்(க்)...

ஏ மாஸ்(க்)... அண்ணே மாஸ்(க்)...


(க்)-கன்னா மட்டும் நம்ம சேர்க்கை! மத்தபடி நாகார்ஜூனா நடிச்ச வீரன் படப் பாட்டு, லாரன்ஸ் ஆடிக்கிட்டே பாடுனது!!

06 March 2006 

கைதி கண்ணாயிரம்Image hosting by  PhotobucketImage hosting by PhotobucketImage  hosting by Photobucket


சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்
இரவில் சோளத் தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம்

நொண்டி காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம்
நுரை தவளை மேள தாள வாத்தியமாம்
தொண்டை இல்லா கோட்டானும் ஸ்ருதிய விட்டு பாடிச்சாம்
கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்

நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம்
நத்தக்கூடு தண்ணீரே பன்னீராம்
புஞ்சைக் காட்டு குருவி தழை போட்டு கொள்ள வெத்தலயாம்
வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலயாம்

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்
இரவில் சோளத் தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம் !

----------------------
படம்: கைதி கண்ணாயிரம்
singers : M.S.Rajeswari
----------------------

03 March 2006 

காக்கா - Crowவேப்பமரத்திற்குக் குடிக்கூலி

வீட்டுக் கொல்லையில் ஒரு காக்கா
வேப்ப மரத்தில் தன் மூக்கால்
கூட்டைக் கட்டித் தீர்த்தவுடன்
குப்பன் அதையே பார்த்தவுடன்
கூட்டைக் கலைக்க வேண்டினான்
குடியைக் கெடுக்கத் தூண்டினான்
வீட்டுக் காரர் சீறினார்
வேண்டாம் என்று கூறினார்.

அரிதாய் முட்டை இட்டது
அப்புறம் குஞ்சு பொறித்தது
பெரிதாய்க் குஞ்சு பறந்தது
பிறந்த இடத்தை மறந்தது.
சுருக்காய்க் கூட்டைக் கலைத்தார்கள்
சுள்ளிகள் பஞ்சுகள் எடுத்தார்கள்
சரியாய் நூறு ரூபாயின்
தாளும் கண்டு மகிழ்ந்தார்கள்!
காக்கை எறும்பு

எருமைக் கொம்பில் ஒருகாக்கா
ஏறிக் கொண்டதாம்.
எறும்பை அது கூவிப் பெருமை
காட்டிச் சிரித்ததாம்.

எருமைக் காதில் அந்த எறும்பு
புகுந்து கொண்டதாம்.
எருமை காது வலியால் தன்
தலையை அசைத்ததாம்.

இருந்த காக்கா விரைவாகப்
பறந்து விட்டதாம்.
எறும்பதனைக் கண்டு விழுந்து
விழுந்து சிரித்ததாம்.

பெருமை பேசித் திரிந்திடுவார்
அது சரியில்லை.
பின்னால் சிறுமை யடையக் கூடும்
அது பெருந் தொல்லை.

- புரட்சி கவிஞர் பாரதிதாசனின் இளைஞர் இலக்கியம்