« Index | Home | கலைந்து போகும் கோலங்கள் » | ஏலேலோ... ஐலசா... » | வீரன் » | கைதி கண்ணாயிரம் » | காக்கா - Crow » | கண்ணே ரம்பா... » | நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும் - I'm tagged » | ஒரு பக்தர் » | காலமெல்லாம்... காதல் வாழ்க... » | சகலகலா வல்லவன் » 

13 March 2006 

மருதமலை மாமணி



கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்தமலை ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா

(மருதமலை)

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா

(மருதமலை)

கோடிகள் கொடுத்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்..ஆ..

(மருதமலை)

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பற்றித் தணிந்திட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே... அழகிய தமிழ்மகனே...
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுபலம் உறுதுணை முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா....

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா

===== ***** ====== ***** ======

மருதமலை முருகன் கோவில் பற்றி...

===== ***** ====== ***** ======

film - Dheivam
singer - mathurai sOmu
lyrics - kaNNadasan
MD - kunnakkudi vaidyanathan

===== ***** ====== ***** ======

ஆகா! அப்பன் முருகனைப் பற்றிய கவின் மிகு பாடலைத் தந்தமைக்கு நன்றி ஞானபீடம்.


ஆண்டவா ஞானபீடத்துக்கு நல்ல புத்திய கொடுப்பா..


வருகைக்கு நன்றி ராகவன்.

எல்லாம் முருகன் அருள்.


எனக்காக முருகனிடம் வேண்டிக்கொண்டதற்கு நன்றி முகமூடி அவர்களே!

எல்லாம் முருகன் அருள்.


மருதமலை அனுபவங்கள்'ன்னு ஜில்லுன்னு ஒரு பதிவு போடலாம்னு நினைச்சேன், அதுகுள்ள நீங்க பக்தி பரவசமா பாட்டு போட்டுட்டீங்க, அதுனால இப்போதைக்கு அந்த பதிவை தள்ளி வச்சிருக்கேன்.. ;-)


//எனக்காக முருகனிடம் வேண்டிக்கொண்டதற்கு நன்றி முகமூடி அவர்களே!
//

கடவுளே கடவுளே :-)


//மருதமலை அனுபவங்கள்'ன்னு ஜில்லுன்னு ஒரு பதிவு // - raasaa.

ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன், தல. விரைவில் பதிக்கவும்!

எல்லாம் முருகன் அருள்.

===== *** =======

மருதமலை மாமணியே, குசும்பனுக்கும் அவரோடு சேர்ந்த எல்லாருக்கும் மன நிம்மதியைக் கொடுத்திட வேண்டுகிறேன்.


ஏஜெண்டு,
என்னப்பா ஒரே பாட்டா போட்டு தள்ளுறீரு. :(

சில்லி சிக்கன் தயிர் சாதமெல்லாம் பரிமாற இப்போதைக்கு ஐடியா இல்லியா? நீர் அந்த மாதிரி பதிவு போட ஐடியா வர நான் முருகன் கிட்ட (வாசகர்களைக் காப்பாற்ற) கேட்டுக்கறேன்.


ராம்ஸ்-க்கு சில்லி சிக்கனும் தயிர்சாதமும் (பற்றிய பதிவுகள்) கிடைக்க (எனக்கு) அருள் புரிவாய் முருகா!


முத்துகுமரனை மறவேன் நான் மறவேன்.

வியப்பு இது. என் பெயர் குமரன். என் நெருங்கிய நண்பர்கள் இருவர் பெயர் முத்து, முத்துகுமரன். எப்படி நான் மறப்பேன்?


ஞான்ஸ்,
நல்ல பாடலை பதிந்து உள்ளீர்கள்.கடவுளை நினைந்துருகி
மனமொன்றி தொழுவதும் பாடுவதும் அளப்பரிய ஒரு அனுபவமாகும்.அந்த மனநிலை அனைவருக்கும் வாய்த்து விடாது.

நீங்கள் பாடலில் ஒரு வரியை விட்டு விட்டுவிட்டீர்களோ என்று
தோன்றுகிறது.(I might be wrong)

//கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்தமலை ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை//
இந்த வரிகளை அடுத்து
"மருதமலை.... மருதமலை ....முருகா
என்று ஒரு வரி வரும் ,அது தான் பாடலிலே Highlight :-)


நல்ல பதிவு!!

நன்றி!!


Post a comment Home Index