« Index | Home | ஒரு பக்தர் » | காலமெல்லாம்... காதல் வாழ்க... » | சகலகலா வல்லவன் » | உலக நீதி » | ஐயகோ... Blogger » | நடைபாதையில் ஞானோபதேசம் » | இரண்டு காதல் கடிதங்கள் » | ஒரு சர்க்கஸ் கூடாரமும் சில கோமாளிகளும் - circus » | காப்பி - coffee » | இது அது பற்றியல்ல » 

21 February 2006 

நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும் - I'm tagged

Image hosting by Photobucket

நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா, தப்பில்ல... எதுமே தப்பில்ல- அப்டீன்னு சொன்னார் வேலு நாயக்கர்.

அஞ்சுக்குள்ள நால வையி... ஆழம்பாத்து கால வையி - அப்டீன்னு சொன்னார் சூப்பர் ஸ்டார்.

நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும்- அப்டீன்னு தொடர் எழுதுறாரு சதுர்வேதி சாமியார்.

நாலு பேரு என்னா சொல்வாங்களோன்னு தயக்கப் படுறவங்க செல பேரு.

நாலு பேருகிட்ட ஆலோசன கேட்டு செஞ்சா நல்லதுன்னு நெனக்கிறவங்க செல பேரு.

நாலு எடத்துக்குப் போய் வந்தாதானே வெளி ஒலகத்தப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு சொல்லிக்குடுக்கறவங்க செல பேரு!

அதெல்லாஞ்சரி... நா எதுக்கு இப்போ நாலு நாலுன்னு சொல்றேன்னா...

எங்கள் தங்கம்
கொங்கு நாட்டுச் சிங்கம்
காதல் கடிதம் ஸ்பெஷலிஸ்ட்,
'அவள் விகடன்' புகழ்
தல ராசா அவர்கள்
என்னையும் கூட இந்த ஆட்டத்துலே இழுத்து வுட்ருக்காரு!
Yes, I'm (too) tagged by 'கொங்கு' ராசா !Four jobs I have had:
1. காலங்காத்தல போந்தா கோழிக்குஞ்சு மேய்க்கறது
2. சாய்ங்காலமா ஆடு மேய்க்கறது (அடப்புக்குள்ளாற)
3. நகர்வலம்!
4. repeat no. 1, 2 & 3

Four movies I would watch over and over again:
1. சலங்கை ஒலி
2. China Gate (Hindi)
3. மீசை மாதவன் (மலையாளம் - திலீப், காவ்யா)
4. Independence Day (English)

Four places I have lived (for years):
1. வூடு (உள்நாடு)
2. ஆபீஸ் (உள்நாடு)
3. வூடு (வெளிநாடு)
4. ஆபீஸ் (வெளிநாடு)


Four TV shows I love to watch:
1. சன் டி.வி. - சூப்பர் 10
2. ஜெயா டீ.வி - காமெடி பஜார்
3. விஜய் டீ.வி - லொள்ளு சபா
4. Cartoon Network - all

Four places I have been on vacation:
1. ஸ்பெயின்
2. எகிப்து
3. இமயமலை
4. சொந்த ஊர்

Four of my favourite foods:
1. தயிர் சாதம் + (வடு)மாங்கா ஊறுகா
2. Garlic Naan + Alu, Gobi masaala
3. Fried Chicken (KFC)
4. Pizza (Chicken BBQ)

Four places I'd rather be now:
1. 320-யோ இல்லாட்டி செவன்ஸோ போடறதுக்கு கூட்டாளிங்க ரூமுக்கு
2. பில் கட்டறதுக்கு ATMக்கு போயிருக்கலாம்
3. வண்டிய எடுத்துக்கிட்டு ச்சும்மாவாச்சும் ஒரு ரவுண்டு போயிருக்கலாம்
4. ஷாப்பிங் மால்-ல ரவுண்ட்ஸ்! போயிருக்கலாம்

Four sites I visit daily:
1. ஜிமெயில்
2. கூகிள்
3. தமிழ்மணம்
4. தேன்கூடு

Four bloggers I am tagging: *
1. நாமக்கல் சிபி
2. துபாய்வாசி
3. ஜொள்ளுப்பாண்டி
4. கோகுல் குமார்* சங்கிலித் தொடரில் பிணைக்கப்பட்ட 'நால்வர்'களே, உங்களுக்கு விருப்பமென்றால் நீங்களும் தொடரலாம்; மற்றபடி இது ஒன்றும் கட்டாயம் கிடையாது!! எல்லாம் ச்சும்மா.. ஒரு இதுக்குத்தான்; நன்றி!!!update: 24-Feb-'06

நாலு பேருக்கு நன்றி! - by நாமக்கல் சிபி

நாலு பேருக்கு நன்றி! - by துபாய்வாசி

நறுக்குன்னு நாலு ! - by ஜொள்ளுப்பாண்டி

நாலு பத்தி நான் என்னங்க பேசறது? - by கோகுல் குமார்

ரைட்டேய்..
(அது எப்படிங்க எந்த டாபிக் போட்டாலும், அதுக்குவாகா ஒரு உள்குத்து போடரீங்க.. நான் உங்க டீ.வி ஷோ பதில சொல்றேன்..

அப்புறம் நம்ம லிஸ்ட்லயும் மீசைமாதவன் இருக்குதுங்கோ..
'என்டெ எல்லாமா..' பாட்டுஎஙூர்ல தான் எடுத்தாங்க.. திலீப் வந்திருக்காருன்னு போயி பார்த்துட்டு வந்தேன்.


//அது எப்படிங்க எந்த டாபிக் போட்டாலும், அதுக்குவாகா ஒரு உள்குத்து போடரீங்க//

ஐயோ தல,
நீங்களே இப்டி கேட்டா....
(சிவாஜி ஸ்டைலில் படிங்க) நா எங்க போயி மொறயிடுவேன் ராசா...

//மீசைமாதவன் ...//

அந்த குத்து பாட்டு, ஜோதிர்மாயி + திலீப் + குரூப் டான்ஸர்ஸ்...
சிங்க மாசம் வன்நு ச்சேந்தால்...
நின்ன ஞான் என் சொந்தமாக்கும்...
சூப்பர்!

அதுக்கப்புறம் ஜோதிர்மாயி எங்க போனாலும் 'சிங்கமாசம் பொண்ணு' அப்டீன்னு கூப்டறதா சொன்னாங்க!!


//Four sites I visit daily:
1. ஜிமெயில்
2. கூகிள்
3. தமிழ்மணம்
4. தேன்கூடு
//

குசும்பன், முகமூடி, ரேசுநாதர், அப்புறம் **** லிஸ்ட்டுல வரலியே ஏஜெண்ட்... ;-(


//குசும்பன், முகமூடி, ரேசுநாதர், அப்புறம் **** லிஸ்ட்டுல வரலியே ஏஜெண்ட்...
;-( //
- Kusumban asked.

குசும்பரே, எனக்கு 'கரகாட்டக்காரன்' பட பாட்டு ஞாபகத்துக்கு வருது!

"மறந்தா தானே நெனக்கனும் மானே!
நினைவே நீதானே ஏம் மானே!!"


Four sites I visit Hourly! -ன்னா நீர் சொன்ன லிஸ்ட் வரும் குசும்பா!

;-)


என்ன அண்ணே ,
என்னையும் இழுத்து உட்டுட்டீங்களே நம்மளோட நாலு விசயம் எல்லாம் ஏடா கூடமா இருக்குமே ! சரி இதுக்கு நீங்கதாம் பொறுப்பு சரியா !


//நம்மளோட நாலு விசயம் எல்லாம் ஏடா கூடமா இருக்குமே ! சரி இதுக்கு நீங்கதாம் பொறுப்பு சரியா ! // - Jollupandi

சரி நான் பொறுப்பு,
Adults only-ன்னு ஒரு டிஸ்கி யோட போட்டுடுங்க, சரியா!!

;-)


புது விளையாட்டா இருக்கு இது
ஞான்ஸ்

முகமூடிய பாக்கவே முடியலயே


//Four sites I visit daily:
1. ஜிமெயில்
2. கூகிள்
3. தமிழ்மணம்
4. தேன்கூடு //

அடடா! அப்படின்னா http://njanapidam.blogspot.com ல ஹிட் கவுண்ட்டரு சூடு வைச்ச ஆட்டோமீட்டரு மாதிரி ஏறுறதுக்கு நீர் காரணமில்லையா?!! :)


இளவஞ்சி,

எங் கல்யாணத்துக்கு எனக்கு நானே பத்திரிக்கை வெச்சுக்கலாமா?

அதுமாதிரி,

என்னோட Blog-அ நான் விசிட் பண்றது இல்ல, அதோடயே வா.....ழ்றேன்!!!

:-)))


இதை நாலு மீம் என்று அழைக்கலாமா? உம் டாக்கர்ஸ் (taggers) லிஸ்டில் என் பெயரை சேர்க்காததற்கு உம் மீது வழக்கு போடலாமா என்று யோசிக்கிறேன்.

அப்புறம் ஞான... நீர் டாக்கிய அந்த நாலு பேர் மீது உமக்கு என்ன கோபமோ? உம்மோடு சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்ற வீண் பழியை அவர்கள் மீது நிறுவ உதவுவானேன்??

// Four sites I visit Hourly // இதில் பொருட் குற்றம் உள்ளது.

// முகமூடிய பாக்கவே முடியலயே // அதுக்குத்தானே முகமூடியே மதுமிதா...


//புது விளையாட்டா இருக்கு இது ஞான்ஸ்// - மதுமிதா

ஆமாங்க, வெளயாட்டா எடுத்துக்கிட்டா, இது வெளயாட்டு மட்டுந்தேங்!
:-)))


முகமூடிய பாக்கவே முடியலயே - - மதுமிதா asked

வந்துட்டாரு பாருங்க!!!


//லிஸ்டில் என் பெயரை சேர்க்காததற்கு உம் மீது வழக்கு போடலாமா என்று யோசிக்கிறேன்.// - மிரட்டுகிறார் முகமூடி

1. போடும்... போட்டுப் பாரும்...

2. ஐயோ.. பயமா கீது.. உட்ருங்கோ...

//உம்மோடு சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்ற வீண் பழியை அவர்கள் மீது நிறுவ உதவுவானேன்??
// - mugamoodi

யோவ்... ஒன்னு தெரிஞ்சுக்குய்யா, அந்த தில்லையம்பல நடராஜனே கூத்தாடிதான் ஆமா!

கூத்தாடிகள் எல்லாம் அவன் அடியார்களே!!

// பொருட் குற்றம்... //- mugamoodi

குறை... குற்றம்... சுற்றம்.. கூற்றம்... எல்லாம் எமக்குத் தெரியும்!!!

---------

புதுசா நாலு பேர இந்த வெளயாட்டுல இழுத்து வுட்ருகேன்.

எனக்கு நன்றி தெரிவிக்கறதுக்குன்னே ஒரு பதிவே போட்ருக்காரு ஒருத்தரு இங்க!

அதுக்காக நான் எதோ என்னோட வலைய வீசுறேன்னு சொல்வீரா!!! இல்ல

'ஆக்டோபஸ் தன் கை கால்களை எட்டுத்திக்கும் வீசுகிறது'ன்னு ஒரு பதிவு போடுவீரா!!!

நாராயண... நாராயண... நாராயண...


நானும் உங்க ஆட்டத்திலே சேர்ந்துட்டேனே?


dubaivaasi

சந்தோஷம்...!

கலக்குங்க!!!


//முகமூடிய பாக்கவே முடியலயே// -- மதுமிதா

// // முகமூடிய பாக்கவே முடியலயே // அதுக்குத்தானே முகமூடியே மதுமிதா...//முகமூடி

//வந்துட்டாரு பாருங்க!!!// Agent 8860336 ஞான்ஸ்

கோர்வையாக் கண்ணைக் கட்டுதே ஸ்ஸ்ஸ் அப்பா :-)
நாராயண... நாராயண... நாராயண...


முகமூடி...முகமூடி...முகமூடி...

யோவ்...குசும்பா...இது...எண்ட..ப்ளாக்...அயாளுக்கு...எந்தினா...பப்ளிசிட்டி...இவிட...!!!!

;-)


Post a comment Home Index

Links to this post

Create a Link