« Index | Home | ஒரு சர்க்கஸ் கூடாரமும் சில கோமாளிகளும் - circus » | காப்பி - coffee » | இது அது பற்றியல்ல » | காதலின் திருவிழா - Rain » | கிண்ணத்தில் வீசிய புயல் » | குதம்பைச் சித்தர் பாடல்கள் » | ஸம்போ... ஸிவஸம்போ... » | பொங்கல் » | பட்டை » | பக்கோடா » 

31 January 2006 

இரண்டு காதல் கடிதங்கள்

இரண்டு காதல் கடிதங்கள்


எழுதியவர்கள்: வாலி, வைரமுத்து
Image hosting by Photobucket

============
film-குழந்தையும் தெய்வமும்
song-anbulla maan
lyrics-வாலி
singers-tms,ps
music-msv


அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்ன வென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்
நலம் நலம் தான முல்லை மலரே
சுகம் சுகம் தானா முத்துச்சுடரே
நலம் நலம் தான முல்லை மலரே
சுகம் சுகம் தானா முத்துச்சுடரே
இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்ன வென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

நலம் நலம் தானே நீ இருந்தால்
சுகம் சுகம் தானே நினைவிருந்தால்
நலம் நலம் தானே நீ இருந்தால்
சுகம் சுகம் தானே நினைவிருந்தால்
இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தள்ர்ந்தது நாணம் அல்லவா
வண்ண பூங்கொடி பெண்மை அல்லவா
வாடவைத்ததும் உண்மை அல்லவா
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்

=========
song: kaadhal kadidham theettavae
voice: unni maenan, S jaanaki
lyrics: வைரமுத்து
movie: ஜோடி

ம்ம்...ம்ம்ம்...

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச்
செத்துப் போகின்றேன்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணொடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா

லலா லாலல லாலா லாலா லாலா லாலலா
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
லாலா லாலா லாலலா லாலா லாலா லாலா
ஓ... வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
ஓ... வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்

பட்டுக்கோட்டையார், மருதகாசி, கபிலன், நா. முத்துக்குமார், பா. விஜய் என்று தொடருங்களேன்....

'கண்மணி அன்போடு' என்று மலராத வரைக்கும் :-)


Boston Bala,

அத்தோடு நில்லாமல், அன்றும் இன்றும்

காதலர்களின் நிலை
காதலுக்கு கொடுக்கப்படும் விலை
காதலால் நடக்கும் கொலை
காதலுக்கு வைத்த சிலை
காதல் ஒரு ஆய கலை
ஆதாம் ஏவாள் கட்டிய இலை


வரைக்கும் கூட எழுத வேண்டும் என்று கை பரபரக்கிறது; ஆனாலும் சமயம் வாய்க்கும் போது எழுதலாம் என்று விட்டு வைத்திருக்கிறேன்!

:-)))


எனக்கும் கடிதம் போட கை துறுக்கிறது... ஆனால்....


//எனக்கும் கடிதம் போட கை துறுக்கிறது... ஆனால்....//

முகமூடி,
இப்போது பருவகாலம் சரியில்லை
திரும்பிய பக்கமெல்லாம் இடி, மின்னல்
புயல் காற்று, பனி மழை போட்டு வாங்குகிறது!

எனவே வெளியே செல்லும்போது தக்க பாதுகாப்புடன் செல்லவும்!!

;-)


Mask & Mask. :-)


Satheesh said...
//Mask & Mask. :-) //

?????

;-)


Post a comment Home Index

Links to this post

Create a Link