« Index | Home | நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும் - I'm tagged » | ஒரு பக்தர் » | காலமெல்லாம்... காதல் வாழ்க... » | சகலகலா வல்லவன் » | உலக நீதி » | ஐயகோ... Blogger » | நடைபாதையில் ஞானோபதேசம் » | இரண்டு காதல் கடிதங்கள் » | ஒரு சர்க்கஸ் கூடாரமும் சில கோமாளிகளும் - circus » | காப்பி - coffee » 

24 February 2006 

கண்ணே ரம்பா...

என்ற ஊரு கோயம்புத்தூருங்க. நாம் பொறந்தப்போ எனக்கு சாமி கண்ண கொடுக்கலீங்க. எங்கய்யன் ரொம்ப வெசனப்பட்டு கோயிலுக்கு போயி, சாமிகிட்ட, என்ற பொண்ணுக்கு கண்ணக்குடுக்காம இப்டி பண்ணுப்புட்டியே, ஒனக்கு வேணுமின்னாக்க என்ற கண்ண எடுத்துக்கிட்டு ஒன்ற கண்ண குடுத்துருன்னு வேண்டிக்கிட்டாருங்க. சாமி போனாப்போவுதுன்னு எங்கய்யனோட கண்ண எடுக்காமயே எனக்கு கண்ணு குடுத்துடுச்சுங்க!

அட, என்னங்க அப்டி பாக்றீங்க!, நாங்கதாங்கனுங்க கோயம்புத்தூருகாரங்க, அந்த சாமி இல்லீங்க! அதுனாலதாங்க எங்கய்யன் ஒன்ற கண்ண குடுன்னு கேட்டத தப்பா புரிஞ்சிக்கிட்டு 1.5 கண்ண குடுத்துடுச்சுங்க!!

அதுனாலங்க, நீங்ககூட எதுனா சாமிகிட்ட கேக்றதுக்கு முன்னாடிங்க, அது எந்த ஊரு சாமின்னு பாத்துட்டு, பொறவு கேளுங்க ஒங்களுக்கு வேணுங்கறத, இல்லாட்டி ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிப்போயிடுங்க, ஆமா!!

இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்கணா..!!


சாமி செஞ்ச தப்புக்கு ரம்பா என்ன பண்ணுங்க, பாவம் ரம்பா!

என்ற Blog கலருக்கு மேச்சா கொளத்து தண்ணியும், ரம்பாவும் டிரெஸ் பண்ணிருக்குதுங்கோவ்!!


என்னங்க இது உங்க காலத்து ஆளுங்க படத்தையெல்லாம் போட்டுகிட்டு. பளிச்சுனு ஒரு ஜோ படம் போடுங்க.


யப்பா இலவசம்... எந்த "ஜோ" படம் போடச்சொல்றீக? கண்டிப்பா இணைய ஜோவா இருக்காதுன்னு நெனைச்சா...

ஓஹோ... சூரியஒளி ஜோவா? அவங்க இந்த ஜெனரேஷனா? ரவுசு உடுறீங்களே... இந்த அஸின், காம்னா இவங்களை வுட்டுப் போட்டீங்களே... :-)

ஞான்ஸ்,

வாஸ்து பாத்து புது மாடல் போட்டீரான்னு கேட்டதுக்குப் பதில் கெடைச்சிப்போச்சுங்ணாவ். ஒன்ற படத்தைப் (முகமூடி) பாத்தோன்ன மோதல்ல புரியாமப் போச்சே... ;-)


நம்மளாம் டவுசர் போட்டு "உள்ளத்தை அள்ளி த(ந்த)" காலத்துக்கே கூட்டிகிட்டு போய்டிங்க தல.

இ.கொ ,

உங்க ஜோ க்கு சாமி ரொம்ப குடுத்துடார்.மொத்தம் 3 கண்ணு.
1.1/2 each :-)


அ) இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒருவரின் புறத்தோற்றத்தை கிண்டல் செய்கிறீர். அதற்கு நான்கு பேர் பின்னூட்டம் வேறு போடுகிறார்கள்.

ஆ) இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ரம்பா பெண் என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாமல் ஆண்வர்க்க மேலாதிக்கத்தில் இப்படி சிந்தித்து அதையும் வெளியில் சொல்லி நீரும் MCP கூட்டத்தில் ஒருவர் என்ற உமது உண்மையான முகத்தை தோலுரிந்து வெளியுலகிற்கு உமது அழுகிய... இதற்கு மேல் உணர்ச்சி பெருக்கில் வார்த்தைகள் வரவில்லை. நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

- முகமூடி (செக்கூலரிஸ்ட்/பெண்ணியவாதி)

யோவ் ஞானபீடம், நான் மூணாப்பு படிக்கிறப்போ (அப்போ நீர் காலேஜ்) வெளியான ஜோக்கையெல்லாம் இப்ப பதிவா போடுறீர்? இதுல அம்பிகா பதிவுக்கு லிங்க் வேற. வயசான காலத்துல இது தேவையா?

// பளிச்சுனு ஒரு ஜோ படம் போடுங்க // கொத்தனார், ஞாபீ கூட சேர்ந்து உமக்கும் வயசாயிடுச்சா? அஸின் பொண்ணு, ஜூனியர் சிவாஜி (சிவாஜி பார்ட் 2) படத்துல மகன் ரஜினிக்கி ஜோடியா நடிக்கிற காலத்துல ஜோ படமெல்லாம் கேட்டுகிட்டு.

- முகமூடி (சாதா/சோதா பதிவர்)

PICK THE RIGHT ME.


எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன். இந்த மாதிரி ஆளை பாக்கவே கண்ணாடியை தேட வேண்டிய பார்ட்டிங்க எல்லாம் நிக்காது. ஒரு குஷ்பு, அப்புறம் ஒரு ஜோ. அவ்வளவுதான். வுடு ஜூட்.


// ஒரு குஷ்பு, அப்புறம் ஒரு ஜோ - இ.கொ said,

1) குஷ்பு = ஜோ ?
2) அப்ப குஷ்பு கு அப்புறம் ஜோ எதுனா சொல்லுவங்கலா ?
3) குஷ்பு சொல்லுறத ஜோ சரின்னு சொல்லிடாங்கலா, இல்ல ஜோ சொல்ல நினைத்ததை குஷ்பு சொன்னாங்களா ?

- எதோ ஒரு கோயிஞ்சாமி

just kidding around :-)

முகமுடி

இந்த சரித்திர பிரச்சனையில் உங்களுக்கு 2 கருத்து தானா :-) ஏமாத்தமா இருக்கு :-(

just kidding around :-)


முதற்கண் நன்றி தெரிவிக்கிறேன்!

நன்றி,
| ராசா | குசும்பன் | கொத்தனார் | கார்திக் ஜெயந்த் | முகமூடி | அவர்களே

தற்சமயம் ஏகப்பட்ட வேலைப்பளு என் சிரசின்மேல் இருப்பதால், விரைவில் எனது மறுமொழிகளைப் பதிவு செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்!


ஞான்ஸ் வெவகாரமான பதிவுகள்....நீங்கள்ளால் பேசிக்கறதுல ஒரு துளி புரிஞ்சா கூட எங்க ஜென்மம் சாபல்யம் அடைஞ்சிருமய்யா..

சரி விடும்..அட்லீஸ்ட் உங்க பெயர் காரணத்தையாவது அர்த்தத்தையாவது சொல்லுமய்யா......


பலரோட ஆதங்கம் புரியுது ! இதனால் சகலவிதமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் அண்ணன் ஞான்ஸ்சுக்கு ஒரு ஸ்பெஷல் செமினார் எடுக்கறதுக்கு காந்தக்கட்டழகி மங்கையர் குல கொழுந்து நடிகை நமீதாவை ஒரு கெஸ்ட் லெக்சர் குடுக்க ஏற்பாடு பண்ணலாமான்னு ஜொள்ளுங்கோ !!


//என்னங்க இது உங்க காலத்து ஆளுங்க படத்தையெல்லாம் போட்டுகிட்டு. //-கொத்தனார்


ஓல்ட்_ஈஸ்_ப்ளாட்டினம்!!

-------------

//வாஸ்து பாத்து புது மாடல் போட்டீரான்னு கேட்டதுக்குப் பதில் கெடைச்சிப்போச்சுங்ணாவ்/-குசும்பன்


நான்_ஆழகை_ஆராதிக்கிறேன்
என்று_உமக்கு_இப்போதாவது_புரிந்ததே!
ஷந்தோசம்!!

;-)

-------------

//நம்மளாம் டவுசர் போட்டு "உள்ளத்தை அள்ளி த(ந்த)" காலத்துக்கே கூட்டிகிட்டு போய்டிங்க தல.//-கார்த்திக்_ஜெயந்த்


டவுசர்_போட்டுக்கிட்டு
உள்ளத்தை_அள்ளித்தாவுல
என்னத்த_பாக்கப்_போனீகளாம்!!

ஹும்...எல்லாம்_பிஞ்சிலயே
பழுத்துடுச்சுங்க!

;-)

-------------

//வயசான காலத்துல இது தேவையா?//-முகமூடி


அக்கறைக்கு_நன்றி
ஸ்பெஷல்_பதிவர்_முகமூடி_அவர்களே!

தான்_ஆடாவிட்டாலும்
தன்_முகமூடி_ஆடுதோ!!!
;-)

----------

//ஞான்ஸ் வெவகாரமான பதிவுகள்...// -முத்து (தமிழினி)


எது...வெவகாரமான_பதிவு?
என்னோடதா?
ஹும்...எது_வெவகாரம்-னு முன்னாடியே கணிச்சு சொன்னவிங்க நாங்க! எங்கள்டயேவா!

இப்டி கமெண்ட் உட்டாச்சும் இங்கன வெவகாரம் எதாச்சும் கெளம்பாதான்னு பாக்குற உம்ம நப்பாசை நெறவேறாது ஓய்!

இணைய நாரதரிடமே வீணை வாசிக்கிறீர்!
:-)))
நீகு சாபல்யம் லேதுரா!
இது ஈ ஆறாம் தம்புரானானு பறையினது!!! கேட்டோ!!!

---------

//ஞான்ஸ்சுக்கு ஒரு ஸ்பெஷல் செமினார் எடுக்கறதுக்கு காந்தக்கட்டழகி மங்கையர் குல கொழுந்து நடிகை நமீதாவை...//- ஜொள்ளுப்பாண்டி


இன்னாபா இந்தக் காலத்து ஆளுங்க நீங்க, நமீதாவுக்கு பில்டப்-கொரலு வுட்றது இப்டிதானா? நமீதாவுக்கு படா ஷேமாப் பூடும்பா!

நல்லா ஷோக்கா கொரலு வுடுங்கப்பா, வெளக்கமா வேணுமின்னாக்க நம்ப குசும்பன்/முகமூடி கையில கேட்டுக்கபா!

-------------

இன்னோரு தபா அல்லாருக்கும் தாங்க்ஸ்பா!!!

------------


அன்பு நண்பரே Agent.

http://elavasam.blogspot.com/2006/02/blog-post_28.html

இந்த வலைப் பதிவைப் பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ரோஜா அணியினருக்குத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.


ரோஜாவுக்கு ஓட்டு போட்டாச்சேய்!!!


வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.


Post a comment Home Index

Links to this post

Create a Link