« Index | Home | வேலுண்டு... வினையில்லை... » | சில நேரங்களில்... சில விஷயங்கள்... » | எனர்ஜி இண்டிபெண்டன்ஸ் Energy Independence » | பயிற்றிப் பல கல்வி தந்து... » | சிறுகதை - பனி விழும் மலர்வனம்... » | ஆலோசனை ப்ளீஸ் » | தலையெழுத்தென்ன மொழியடா... சர்வேஸா » | உளவுத்'துரை' » | மீண்டும் ஒரு திருவிளையாடல் » | நாதந் தானது நாரதர் வீணையோ » 

21 August 2005 

வனிதாவணி... இளமோகினி... வந்தாடு...

Image hosted by Photobucket.com



மாமா......

என்ன புள்ள......

அது....... வந்து.....

ச்ச... சொல்லு புள்ள......

ஒன்னுமில்ல....... வந்து......

அட நீட்டி நெளிக்காம, சும்மா சொல்லு புள்ளன்னா......

சொன்னா நீ திட்டுவ......

யே, ஒன்னய எதுக்கு புள்ள நாந் திட்டப்போறேங்......

சரி சொல்லவா......

ம்... சொல்லு......

சொன்னா...... வந்து......

இப்ப சொல்லப்போறயா இல்லயா புள்ள......

பாத்தியா பாத்தியா...... கோவப்படுற......

பின்ன இப்டியே ஜவ்வுமுட்டாய் மாரி இழுத்தாக்க... டக்குன்னு சொல்லு புள்ள.....

நாளக்கி வெடக்கோழி அடிச்சு கொழம்பு வெக்கப்போறேங்..... மறக்காம எங்கய்யங்கூட சாப்பாட்டு நேரத்துக்கு வூட்டுக்கு எப்பவும் வர்றமாரி நாளக்கும் வந்துடாத ஆமா..... சொல்லிப்புட்டேன்!

போடிங்......க!

என் இளவயது கனவுக்கன்னி அம்பிகாவின் மேலும் பல படங்கள் கிடைக்குமா?


//என் இளவயது கனவுக்கன்னி அம்பிகாவின் மேலும் பல படங்கள் கிடைக்குமா?//
பெரிசு முகமூடி மாட்டிக்கிட்டயா? வடிவேலு வயசா உங்களுக்கு?


போன பின்னூட்டத்தில் நான் எழுதியது ஏன் பாதிதான் இருக்கிறது ஞானபீடம். முழுதும் இங்கே..

என் இளவயது கனவுக்கன்னி அம்பிகாவின் மேலும் பல படங்கள் கிடைக்குமா? என்று குழலி கேட்டதும்தான் இது ஒருவேளை எனக்கு ரெண்டு வயசா இருக்க சொல்லோ அம்பிகான்னு ஒரு அக்கா நடிக்கிறாங்கன்னு அப்பத்தா சொல்லுமே.. அவிங்கதான இவிங்கன்னு ரோசனை வந்திச்சி


எனக்கு அம்பிகாவைப் பிடிக்கும்தான்!
அதுக்கென்ன இப்போ!
ஒடனே வடிவேலு எனக்கு சொந்தமான்னு கேக்கப்படாது!


//வனிதாமணி...வனமோகினி ..வந்தாடு.." என்றல்லவா இருக்க வேண்டும்??? //

மயிலு மயிலு என்றால் சில சமயங்களில் என் காதில் குயிலு குயிலு என்றும் கேட்பதுண்டு!!!


பாரடா பாக்யராசா...
எல்லார் கண்களும் அம்பிகா பக்கமே சாய்வதை...
நீ உண்மையில் அபாக்யராசாடா... உன்னை யாருமே எதும் சொல்லமாட்டேன்கிறார்கள்!


//அம்பிகாவுக்கு வடிவேலு சொந்தமா!?// - அரசு.

வடிவேலன், அம்பிகையின் மைந்தன் என்ற புராணம் மட்டுமே எனக்குத் தெரியும்!

மற்றபடி, நீங்கள் கேட்கும் இவர்கள்....
கலைக் குடும்பம் என்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் சொந்தம் மாதிரி தானே!

வெளி உலகில் நேரடித் தொடர்பு அதிகமில்லாத அவர்களுக்கு
வேறு யார் சொந்தம்?!!


//நாளக்கி வெடக்கோழி அடிச்சு கொழம்பு //

அதானே பார்த்தேன்... ஞான்ஸ் பதிவுல சாப்பாடு மேட்டரு இல்லாமாயா??
என்னய்யா சமையல் பன்னீங்க வூட்ல இன்னைக்கு?? :)

படத்துல இருகறவுக அந்த காலத்து சினிமா நடிகருங்களா..எங்க தாத்தா சொல்லுவாரு.. நாம பார்த்ததில்ல...

வீ எம்


//படத்துல இருகறவுக அந்த காலத்து சினிமா நடிகருங்களா..எங்க தாத்தா சொல்லுவாரு.. நாம பார்த்ததில்ல...
வீ எம் //


சின்ன வயசா காட்டிக்கறதுல கூட Bloggers இவ்ளோ போட்டி போடறீங்க!

ஹும்... நாங்கல்லாம் அந்த காலத்துல.....

இப்ப திருப்தியா வீ.எம்.!!!!

======
கொசுறு:

இந்தப் படத்துல இருக்கற, பாக்யராசோட மகள் இப்ப சினிமாவுல கதாநாயகியா வேஷம் கட்றாங்களாம்!!

+=+==


Post a comment Home Index