« Index | Home | ஆலோசனை ப்ளீஸ் » | தலையெழுத்தென்ன மொழியடா... சர்வேஸா » | உளவுத்'துரை' » | மீண்டும் ஒரு திருவிளையாடல் » | நாதந் தானது நாரதர் வீணையோ » | ஓ... ஒரு தென்றல்... புயலாகி வருதே!!! » | மாயவரத்தானுக்கு ஒரு எச்சரிக்கை! » | ஒரு பதிவும் பின்னூட்டமும்... » | இது மிஷின் யுகம் » | அ... சிங்கமொன்று புறப்பட்டதே... ! » 

11 August 2005 

சிறுகதை - பனி விழும் மலர்வனம்...

டிர்ரிங்... டிர்ரிங்...

டிர்ர்ரிங்... டிர்ர்ரிங்...

அவன் குளித்துக்கொண்டிருந்தான்; அவள் தொலைபேசினாள்.

இருக்காரு... குளிச்சிட்ருக்காரு... விஷயத்தைக் கேட்டுக்கொண்டாள். சரி, வந்தோன்ன நா சொல்றேன்; ரிஸீவரைக் கிடத்தினாள்.

இட்லியும் பொங்கலும் செய்திருந்தாள்; டிபன் போட்டுக்கொண்டே சொன்னாள்.

அப்டியா, ம்... எப்போ போன் வந்துச்சு?

இப்பத்தான்.. நீங்க குளிச்சிட்ருந்தீங்க.

பாக்கலாம்; சொல்லிவிட்டு ஆபீஸ் கிளம்பினான்.

லிப்ட்-க்குள் அவன் செல்வதைப் பார்த்தபின், வந்து கதவைச் சாத்தினாள்; ஆட்டோ-லாக் ஆகியது கதவு.

போன் பக்கத்தில் இருந்த நோட்புக்கை எடுத்து நம்பர் தேடினாள், கிடைக்கவில்லை, அலுத்துக்கொண்டாள்.

நினைவில் இருந்த ஒரு நம்பருக்கு போன் செய்தாள்; மணி அடித்துக்கொண்டே..... இருந்தது; வைத்துவிட்டாள்.

கழுவப்போடும் பாத்திரங்களை எடுத்துவைத்தாள்; அழுக்குத் துணிகளை ஒரு ஓரமாகக் குவித்தாள்; முடியை அள்ளி முடிந்து கொண்டை போட்டாள்.

வாசல்மணி அடித்தது; பீப் ஹோல் வழியாகப் பார்த்தாள்; யாரோ ஒரு பெண், சேல்ஸ் ரெப் போல; கதவைத் திறந்தாள்; இவளுக்கு முன் அவள் பேசினாள்; எதுவும் வேண்டாமென்றாள்; அவள் சற்றே கெஞ்சும் தொனியில் கேட்க, இவள் சிலவற்றை வாங்கினாள்; பணம் எடுக்க இவள் உள்ளே செல்ல, அவள் வெளியில் இருந்தே வீட்டை, உள்ளே நோட்டம் பார்த்தாள்; புருவம் உயர்த்தினாள். இவள் வந்து பணம் கொடுக்க, வாங்கியவள் புன்னகைத்துச் சென்றாள்.

கதவைச் சாத்திவிட்டு, வாங்கியவற்றை உள்ளே கொண்டுவைக்கச் சென்றாள்; பீரோவைத் திறந்தாள்; வைத்தாள்; சாத்தினாள்.

டவல் எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்றாள்; குழாயைத் திருகி பாத்-டஃப் நிரப்பினாள்; குளித்தாள்; துவட்டிக்கொண்டே வந்தாள்; தலைக்கு டிரையர் போட்டாள்.

பொங்கல் சிறிது தட்டில் வைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிட்டாள்.

நேரம் பார்த்தாள்; வேலைக்காரி வரும் நேரம்.

கை அலம்பினாள்; டிஷு எடுத்தாள்; துடைத்தாள்.

வாசல்மணி அடிக்க, கதவு திறந்தாள்; வழக்கம்போலவே, வேலைக்காரி வந்து குவிந்திருந்த துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு, பாத்திரங்களைக் கழுவச் சென்றாள்.

இவள் டி.வி பார்த்துக்கொண்டிருந்தாள்; பாத்திரங்களை கழுவி முடித்திருந்த வேலைக்காரி வந்து என்ன மதியம் சமைக்கவேண்டுமென கேட்டாள்; சொன்னாள்; சென்றாள்.

போன் அழைத்தது; டி.வி.யை மியூட் செய்தாள்; போனில் பேசினாள்; பேசிக்கொண்டும் சிரித்தாள்; சிரித்துக்கொண்டும் பேசினாள்; பை சொன்னாள்; வைத்தாள்; டி.வி மியூட் கிளியர் செய்தாள்.

எதோ ஞாபகம் வந்தவளாய், திரும்ப காலையில் போன் செய்த நம்பருக்கு ரீடயல் செய்தாள்; மூன்றாவது ரிங்-கில் ஹலோ சொன்னது எதிர்முனை; நலம் விசாரிப்பு முடிந்தது; அவன் காலையில் குளிக்கும்போது வந்த போன் பற்றி சொன்னாள்; ஊகங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஒங்க ஆளு என்ன சொன்னாரு, எதிர்முனை கேட்டது; பாக்கலாம்-னு சொன்னாரு, இவள். பேசினார்கள், பேசினார்கள், இவள் வீட்டு வாசல் மணியடிக்கவும் முடித்தார்கள்.

கதவு திறந்தாள்; அவன் வந்தான்; கேட்டாள், என்ன சீக்கிரமா வந்துட்டீங்க, திரும்ப போகனுமா?; இல்ல, சும்மாதான் வந்துட்டேன், சொன்னான்.

என்னவா இருக்கும், இப்டி திடீர்னு வந்துட்டாரே, குழம்பினாள்; பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தாள். காபி தரவா, கேட்டாள்; சரி சொன்னான்; இவளே காபி போட்டுக்கொண்டு வந்தாள்; தந்தாள்; குடித்தான்.

ரெஸ்ட் எடுக்கறீங்களா; தலையசைத்தான்; படுக்கைக்குச் சென்றான்; படுக்கையில் விழுந்தான்.

படுக்கை அறைக்கதவைச் சாத்திவிட்டு வந்து, வேலைக்காரியிடம் சொன்னாள், அவரு ரெஸ்ட் எடுக்கறாரு, ஹால்ல மட்டும் சும்மா பெருக்கி, மோஃப் பண்ணு, வாக்கும் கிளீனர் போடாதே, அவருக்கு சத்தம் பிடிக்காது; வேலைகாரி தலையாட்டினாள்.

புத்தகம் எடுத்தாள்; புரட்டினாள்; கண் கண்டது, மனம் அலைந்தது, காரணம் தேடி.


சிறிது நேரத்திற்குப் பிறகு.....


வேலைகாரி சென்று விட்டிருந்தாள்; அவன் எழுந்தான்; முகம் கழுவினான்; சாப்பிட்டார்கள்; அவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை அவர்களே பார்த்துக் கொண்டார்கள்; வாழ்வின் சந்தோஷங்களை அனுபவித்தார்கள்.

கடிகாரம் ஓடிக்கொண்டிருந்தது; காற்று வீசிக்கொண்டிருந்தது.


====
பின் குறிப்பு: முகமூடி அவர்கள் வேண்டி விரும்பி, நான் ஒரு குறுங்கதையாவது எழுதக்கூடாதா?, என்று என்னைக் கேட்டுக்கொண்டதற்கு, மரியாதை அளிக்கும் விதமாக எழுதியது இது.

+http://mugamoodi.blogspot.com/2005/08/blog-post_07.html#112378076381782075

அருமையான கதை!

கணவன் மனைவி கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ள கதை!!

நெஞ்சைத்தொடும் உருக்கமான சென்டிமெண்ட் முடிவு கொண்ட கதை!!!

பரிசுக்கான அனைத்து அம்சங்களும் பொருந்தியது !!!!


முற்பகல் செய்யின்...

நன்றி!


ஏண்டா கேட்டோம் என்று ஏங்க வைத்த கதை...

ஆமாம் இந்த கதைய போட்டிக்கு அனுப்பற எண்ணம் எதுவும் இருக்கா ?? பாரடா பாண்டியா... இந்த தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வந்த சோதனை... இதற்குத்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தாயா...


//டிர்ர்ரிங்... டிர்ர்ரிங்// கில் ஆரம்பித்து,

//ரிஸீவரைக்//

/டிபன்/போன்/ஆபீஸ்/லிப்ட்/ஆட்டோ-லாக்/

/நோட்புக்கை/நம்பர்/

/பீப் ஹோல்/ சேல்ஸ் ரெப்/ பீப்/பீரோவைத் /

/டவல்/ பாத்ரூம்/பாத்-டஃப்/டிரையர்/

/வாஷிங் மெஷினில் /மியூட்/

/ரீடயல்/ரிங்-கில் ஹலோ/

/ரெஸ்ட்/ஹால்ல/மோஃப்/வாக்கும் கிளீனர் /

என்று அரிய பெரிய டமில் வார்த்தைகளைப்போட்டு
மூடி சொன்ன 'ரூல' 'ஸ்ட்ரிக்டா' 'ஃபாலோ' பண்ணி
நீங்க இப்படி 'ப்ரைஸ' 'விண்' பண்ணீட்டீங்களே ஞானம்?

அனாலும் முடிவு சரியா இல்ல

அது 'க்ளாக் ஓடிக்கொண்டிருந்தது விண்ட் வீசிக்கொண்டிருந்தது' ன்னு முடிச்சிருந்தா - அஹா டமில்ல இத மாதிரி ஒரு ஸ்டோரி வரவே இல்லன்னு நான ஸ்வேர் பண்ணியிருப்பேன்.


KIWI-யா கொக்கா? :-)))))


யோவ் ஞானபீடம்... கொக்கு ஆராய்ச்சி பண்றதுக்கு முன்னாடி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுய்யா.... கேட்டு எவ்வளவு நேரம் ஆகுது..


போட்டிக்கு எடுத்துக் கொள்ளலாம்!


ஞான பீடம் முயற்சியே வெற்றிக்கு அறிகுறி...


நன்றி, கங்கா(kangs).


முதல் கதையா ஞானபீடம், தொடர்ந்து நல்ல பல கதைகள் எழுத வாழ்த்துக்கள். அது சரி முதல் வந்த தொலைபேசி எதைப்பற்றி என்று சொல்லவே இல்லையே. அவர்கள் பேசாமல் இருப்பார்கள் சரி. அதை அறியாமல் எங்களால் இருக்க முடியுமா?


கயல்விழி, தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

இந்தக் கதையையும் (முடிந்தால்!) படித்துப்பாருங்கள் கொல், கவனி, செல்.

கதையென்றால், அதில் ஒரு முடிவு கட்டாயம் இருக்கவேண்டும் என்ற மரபை நான் இஷ்டப்பட்டே மீறுகிறேன்; அதில் எனக்கு சந்தோஷமே.!!!

:-)

நான் எழுதியவைகளின் complete Index


ஞான்ஸ்,
ஒரு வரியை மிஸ் பண்ணிவிட்டீர்களே. சேர்த்துள்ளேன்.

"பேசினாள்; பை சொன்னாள்; வைத்தாள்; டி.வி மியூட் கிளியர் செய்தாள். காதில் விழுந்தது;ராஜாவின் பாடல்; பனி விழும் மலர்வனம்.


தலைப்பை விட்டுடலாமா?


நன்றி தருமி அவர்களே!


Post a comment Home Index

Links to this post

Create a Link