« Index | Home | உளவுத்'துரை' » | மீண்டும் ஒரு திருவிளையாடல் » | நாதந் தானது நாரதர் வீணையோ » | ஓ... ஒரு தென்றல்... புயலாகி வருதே!!! » | மாயவரத்தானுக்கு ஒரு எச்சரிக்கை! » | ஒரு பதிவும் பின்னூட்டமும்... » | இது மிஷின் யுகம் » | அ... சிங்கமொன்று புறப்பட்டதே... ! » | நான் ஒரு 'சைக்கோ' வா... » | பயங்கரத் தொடர் தாக்குதல்கள் » 

04 August 2005 

தலையெழுத்தென்ன மொழியடா... சர்வேஸா

ஜீவன் இல்லா வாழ்க்கையில் அர்த்தம் இல்லை

சரீரத்தை சுமந்துகொண்டு திரிவது மட்டும் வாழ்க்கையாகி விடாது. ஓடிக்கொண்டே இருக்கிறேன். மூச்சு வாங்கியும் ஓடுகிறேன். நின்று இளைப்பாற நேரமில்லை. மூச்சு நின்றால்தான் ஓடுவது நிற்குமோ என்னவோ. ஓடி ஓடி என்னத்தை கண்டேன் என்று சிந்தித்துப் பார்க்கவும் பயம். ஒன்றும் இல்லை என்று தெரிந்தால் ஏற்படும் விரக்தியை எதிகொள்ளும் மனோதைரியத்தைக் கற்றுக்கொள்ளவில்லை. சரி ஓடாமல் கொஞ்சம் நின்றால்தான் என்ன என்ற சிந்தனை உதிக்கவும் இல்லை. எனவே ஓடுகிறேன், ஓடுகிறேன் ஓடிக்கொண்டே இருக்கின்றேன்.

+++

பணம் பணம் பணம்

எவ்வளவு தேவை என்று ஒரு வரையறையே இல்லாதது. எவ்வளவு இருந்தாலும், வந்தாலும் இன்னும் இன்னும் இன்னும் தான் எப்போதும். எப்போதும் bank-ல் இன்னும் balance எவ்வளவு இருக்கிறது; அது இன்னும் எத்தனை நாள் சுகஜீவிதம் தரும் என்ற எண்ணம் எழாத நாளில்லை. வருமானம் ஏற, விலைவாசி ஏற, தேவைகள் ஏற, செலவுகள் ஏறிக்கொண்டே இருக்கிறது. பணம் சேர்ப்பதில் அவ்வளவு தீவிரம். காரணம் பாதுகாப்பு. பணம் இல்லாத வாழ்வை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

+++

நேரமில்லை நேரமில்லை நேரமில்லை

காலையில் அரக்கப்பரக்க breakfast செய்து, office சென்று, காலில் வெந்நீர் கொட்டியது போன்ற பரபரப்பில் வேலைகளை முடித்தும் முடிக்காமலும், உடல் சக்தி முழுவதும், வாங்குகின்ற சம்பளத்திற்காய் கொடுத்துவிட்டு தளர்வாய் late evening வீட்டுக்கு வந்து, வந்தும் நாளையதின மற்றும் அடுத்தடுத்த அலுவலக வேலைகளைப்பற்றியே நினைவுகள். ஒரு நாளின் முக்கியமான நாள்பொழுது முழுதும் office-ல். வீடு என்பதே தூங்கும் இடம் அன்றி வேறொன்றுமில்லை என்று ஆகிப்போனது. விடுமுறை நாளென்றால் நிறையபேர் வெளியில் கிளம்புகிறார்கள். கும்பல் கூட்டம் அதிகமாகிவிடுகிறது. எதற்கும் முட்டிமோதியாக வேண்டியிருப்பதால் விடுமுறையில் வெளியே செல்லவே, கூட்ட நெரிசலுக்கு பயந்தே சோம்பல்.

+++

பசி சாப்பாடு உறக்கமின்மை

சரியான நேரத்தில் சாப்பாடு என்பதெல்லாம் பழங்கதைகளாய் வழக்கொழிந்து போய்விட்டது. கிடைத்த நேரத்தில் அகப்பட்டதை ஒன்றிரண்டாய் மென்றும் மெல்லாமலும் விழுங்க வேண்டிய நிலை. எல்லாருக்கும் உடனடியாய் result வேண்டும். அதற்குத் தேவைப்படும் கால அளவைப்பற்றிக் கவலைபடுவதே இல்லை. எப்போது இது முடிக்கவேண்டும் என்பதற்கு readymade பதில் yesterday. பசிக்கவேண்டும் என்பதே உடலுக்கும் பல்க நேரங்களில் மறந்து விடுகிறது.

தூக்கமும் அப்படியே. இப்போதெல்லாம் கனவுகள் தூக்கத்தில் கூட வருவதில்லை. எங்கிருந்து கனவு வரும். நன்றாகத் தூங்கினால்தானெ கனவு வர. தூங்கப்போகுமுன் எல்லாவற்றையும் மறந்து, தெளிந்த மனதாய் படுக்கைக்குச் செல்லவேண்டும் என்பார்கள். வரிசை கட்டி நிற்கும் மறுநாள் வேலைகள் தூங்க விடுவதில்லை. நடுநிசிக்குப் பின் படுக்கைக்குச் சென்று, அதிகாலைக்கு அலாரம் வைத்து தூங்கப் போனால் எங்கிருந்து தூக்கம் வரும்; பின் எங்கிருந்து கனவு வரும்.

உடற்பயிற்சி என்பதெல்லாம் வெட்டிவேலை என்று எதுவும் செய்வதில்லை. இளமை எப்போதும் நங்கூரம் பாய்ச்சி நிற்பதில்லை. ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும். சூடான இளரத்தம் எப்போதும் அப்படியே இருந்துவிடாது. வயது ஆக ஆக வியாதிகளும் வந்து நலம் விசாரித்துவிட்டுப் போகமல், தங்கிவிடும். நினைப்பதை நினைத்த வேகத்தில் நடத்திக் கொண்டிருந்த இளமைக்காலங்கள் கண்முன் நிழலாடும்.

ஹும்...

ஜீவன் இல்லா வாழ்க்கையில் அர்த்தம் இல்லை.

* * *

Image hosted by Photobucket.com

http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_04.html


Blues, Blues, dense Blues, denser Blues, densest Blues...

This blog is just like an Adult's Only movie poster near a school compound.. have to just live with this blog...


Shift >F3<


nice one :)


Post a comment Home Index

Links to this post

Create a Link