« Index | Home | அ... சிங்கமொன்று புறப்பட்டதே... ! » | நான் ஒரு 'சைக்கோ' வா... » | பயங்கரத் தொடர் தாக்குதல்கள் » | ஞானும், அப்துல்கலாமும் பின்னே ஜோதிடபூமியும்! » | பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்... » | பதவி படுத்தும் பாடு... » | யாருக்கும் வெட்கமில்லை » | சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்... » | சும்மா அலேக்கா பறக்குது பாரு காரு! » | இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே » 

16 July 2005 

இது மிஷின் யுகம்

நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட - ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே -ஹோட்டலுக்குச் சென்றேன். உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். 'அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா!' என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷணை; சிரிப்பு.

போய் உட்கார்ந்தேன்.

"ஸார், என்ன வேண்டும்?"

"என்ன இருக்கிறது?" என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன்.

அவ்வளவுதான்! கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன.

"சரி, சரி, ஒரு ப்ளேட் பூரி கிழங்கு!" அது அவன் பட்டியலில் இல்லாதது. முகத்தில் ஏதாவது குறி தோன்ற வேண்டுமே! உள்ளே போகிறான்.

"ஒரு ஐஸ் வாட்டர்!"

"என்னப்பா, எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?"

"என்ன கிருஷ்ணா, அவர் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?"

"இதோ வந்துவிட்டது, ஸார்!" என்று ஓர் அதிகாரக் குரல் கெஞ்சலில் முடிந்தது.

"காப்பி இரண்டு கப்!"

இவ்வளவுக்கும் இடையில் கிருஷ்ணன் ஒரு கையில் நான் கேட்டதும், மற்றதில் ஐஸ் வாட்டரும் எடுத்துவருகிறான்.

"ஸேவரி (கார பக்ஷண வகை) எதாகிலும் கொண்டா!"

"இதோ, ஸார்!"

"பில்!"

உடனே கையிலிருந்த பில் புஸ்தகத்தில் லேசாக எழுதி, மேஜையில் சிந்திய காப்பியில் ஒட்ட வைத்துவிட்டு, ஸேவரி எடுக்கப்போகிறான்.

"ஒரு கூல் டிரிங்க்!"

"ஐஸ்கிரீம்!"

பேசாமல் உள்ளே போகிறான். முகத்தில் ஒரே குறி.

அதற்குள் இன்னொரு கூட்டம் வருகிறது.

"ஹாட்டாக என்ன இருக்கிறது?"

"குஞ்சாலாடு, பாஸந்தி..."

"ஸேவரியில்?"

கொஞ்சமாவது கவலை வேண்டுமே! அதேபடி பட்டியல் ஒப்புவிக்கிறான். சிரிப்பா, பேச்சா? அதற்கு நேரம் எங்கே? அவன் மனிதனா, யந்திரமா?

"ஐஸ் வாட்டர்!"

"ஒரு கிரஷ்!"

"நாலு பிளேட் ஜாங்கிரி!"

கொஞ்சம் அதிகாரமான குரல்கள்தான். அவன் முகத்தில் அதே குறி, அதே நடை.

நான் உள்பக்கத்திற்குப் போகும் பாதையில் உட்கார்ந்திருந்தேன். என் மேஜையைக் கவனித்துக்கொண்டு உள்ளே போகிறான்.

மனதிற்குள் "ராம நீஸமாந மவரு" என்று கீர்த்தனம்! உள்ளத்தை விட்டு வெளியேயும் சற்று உலாவியது. அப்பா!

திரும்பி வருகிறான் கையில் பண்டங்களுடன். பரிமாறியாகிவிட்டது.

என்னிடம் வந்து பில் எழுதியாகிவிட்டது. எல்லாம் பழக்க வாசனை, யந்திரம் மாதிரி.

"ஸார், உங்கள் கைக்குட்டை கீழே விழுந்துவிட்டது, ஸார்!"

அவன் குனிகிறான் எடுக்க. நானே எடுத்துக்கொண்டேன்.

மனிதன் தான்!

"ஒரு ஐஸ்கிரீம்!"

திரும்பவும் மிஷினாகிவிட்டான்!


****** ******* ****** ******* ****** *******
Image hosted by Photobucket.comBlog பண்ண மேட்டர் ஒன்னும் கெடக்கலேன்னா, செல பெரிய தலங்க படம் காட்டுவாங்க; நாம வெறும் (அறுந்த)வாலு! தானே. அதாங்க, புதுமைப்பித்தன் எழுதுன ஒரு சிறுகதைய திருடி! இங்கே போட்டுட்டேன்.Image hosted by Photobucket.com
****** ******* ****** ******* ****** *******

This comment has been removed by a blog administrator.


என்னடா கதையில வர்ற வார்த்தைகள்லாம் >> குஞ்சாலாடு, ஸேவரி, பக்ஷணப் பெயர்கள் << கொஞ்சம் பழைய வாசனை வருதேன்னு நினைச்சேன்...

அப்புறம் போட்டோல ரொம்ப டயர்டா இருந்தாலும், சிகப்பு சட்டை உங்களுக்கு பொருத்தமாவே இருக்கு ஞானபீடம்...

முகமூடி சுடச்சுட : இன்று புதிதாக போட்டது

முகமூடி இது வெறும் படம் போடும் பதிவல்ல... Blog matterகளின் சாம்ராஜ்ஜியம்


//போட்டோல ரொம்ப டயர்டா இருந்தாலும், சிகப்பு சட்டை உங்களுக்கு பொருத்தமாவே இருக்கு ஞானபீடம்...// - முகமூடி சொன்னது.

அந்த செகப்புச் சட்டைக்காரர் முகத்துல எதோ ஒரு மூடி கவ்வுன மாதிரி இருக்கே!; அப்படீன்னா அது நானா? இல்ல.... !!!

இந்த பழைய (தீஞ்ச) வாடை, ஒங்க பக்கம் இருந்துதா வர்றதா குழலி கொஞ்ச நாளா சொல்லிட்டு இருந்தாரு!

"சுடச்சுட" - அதாவது சுட்டு சுட்டு பதியறீரு!!

"Blog matterகளின் சாம்ராஜ்ஜியம்" - ஜோக் நல்லாருக்கு!

- ஞானபீடம்!


என்ன இது ரெண்டு பேரும் அடிச்சுக்கிறீங்க? சின்ன புள்ளத்தனமாயில்லே இருக்கு, சரி சரி...

உண்மையான தமிழ் நம்பர் 1 வலைப்பூவுக்கு விசிட் அடிச்சீங்களா இல்லையா?! (அது எதுன்னு நான் சொல்லித்தான் எல்லாருக்கும் தெரியணுமா என்ன?)


Please stop the advertisement war as Penathalgal has already won the Number 1 position.

Penathalgal is where your mouse should go!

Penathalgal is the no-problem site!


// என்ன இது ரெண்டு பேரும் அடிச்சுக்கிறீங்க? // சிங்கத்தின் பின்னூட்டத்தை பார்த்து சிறு எலி முனகியதை அடிச்சிக்கறீங்க என்று சொன்ன மாயவரத்தானை ப.ம.க பொதுக்குழு கண்டிக்கிறது...

முகமூடி வயித்தெறிச்சல் படும் எதிரி கட்சிக்கார்கள் தீஞ்ச வாசனை பிடிக்கும் பதிவு

முகமூடி அறிவு ஜீவிகளுக்கு ஒரிஜினல், பாமரர்களுக்கு சுட்டது என்ற பன்முகம் கொண்ட பதிவு

முகமூடி ஜோக்கும் சிந்தனை தூண்டும் பதிவுகளும் நிறைந்த சாம்ராஜ்யம்

முகமூடி நம்பர் வரிசைப்படுத்த தேவையில்லாத சூப்பர் பதிவு


வெளம்பரம்.. வெளம்பரம்.. வெளம்பரம்.. !!!!

****** ****** ****** ******
இங்கே விளம்பரம் இலவசம்!!!

யார் வரவும் இல்லாத,
ஆள் அரவம் இல்லாத,
ஆகாத போகாத பதிவு வைத்துக்கொண்டு,
ஈ ஓட்டும்...... மாயவரத்தாரே, முகமூடியாரே, பெனாத்துரவரே...

வருவீர்.. வருவீர்...
ஞானபீடம் பதிவிற்கு வருவீர்

செய்வீர்.. செய்வீர்
ஞானபீடம் பதிவில் வெளம்பரம் செய்வீர்!
****** ****** ****** ******

- ஞானபீடம்.


//அவ்வளவுதான்! கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன.
//

When I encountered the above, I came to the conclusion that this was "suttathu" ONLY ;-)


//When I encountered the above, I came to the conclusion that this was "suttathu" ONLY// - Bala

that's your unbroken hyperlink, isn't it? Bala !!!

- ஞானபீடம்.


அண்ணாத்தே ஞானபீடம் கலக்குறிங்க போங்க, இப்போ நம்ம பக்கங்களில் புதுசா ஒன்னும் போடாதாதினால் விளம்பரம் செய்யவில்லை, பதிவு போடும்போது மீண்டும் விளம்பரம் செய்கின்றேன்....

விளம்பரப்பலகை ஞானபீடம் வாழ்க வாழ்க


//that's your unbroken hyperlink, isn't it? Bala !!!
//

puriyalaiyE, naNbA :-(

My earlier comment was intended to be humourous. Hope you appreciate that ! (JUST IN CASE !!!)


சுட்டால்தான் பக்க்ஷணம்...
சுடாவிட்டால் மாவு மாவா இருக்கும்-னு சொல்றீங்களா பாலா! ;-)

என்னவோ போங்க...
இந்த 'சைக்கோ'வுக்கு இவ்ளோதாங்க புரியுது :-(

**********

குழலி... என்ன திரும்பவும் blog பண்ற ஐடியா இருக்கா; ச்சும்மா இங்கன வெளம்பரத்தப் போட்டு பதிவ ஆரம்பிங்க!

**********

- ஞானபீடம்.


M = N = M

இந்த equation சரியா ஞானபீடம் ??
எனக்கு ஒரு உன்மை தெரிஞ்சாகணும்!!!


மு = ஞா = மா

இந்த சமன்பாடு சரியா, ஆனந்த்??!!??


என்ன ஆனந்த், இன்னிக்குத்தான் முதன்முதலா மனுஷன் நிலா-வில கால் வெச்ச நாள்; இன்னிக்குப் பாத்து ஒங்களோட 'புதிய ப.ம.க' ஆரம்பிக்கறதா சொன்னீங்க. எப்டி இருக்கீங்க.

- ஞானபீடம்.


ம்ம்ம்..
அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்... :)
M=N என்பது மட்டும் தான் எனக்கு தோன்றுகிறது..
M =M இல்லை என்று நான் நினக்கிறேன்...
உங்களுக்கு நிச்சயம் தெரியும்.. காதோடு சொல்லிவிடுங்களேன்...


//மனுஷன் நிலா-வில கால் வெச்ச நாள்; இன்னிக்குப் பாத்து ஒங்களோட 'புதிய ப.ம.க'
நிலாவில் கால் வெச்சதே டூப் நன்னு எல்லாரும் பேசிகினுகிறாஙக...
ஆனா அதே மாதிரி புதிய பமக டூப்ன்னு நினைக்காதீங்க..
இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா போஸ்ட் எல்லாம் நிரப்பிக்கிட்டு வருது...
வளர்ப்பு பிள்ளை மட்டும் கிடைச்சுட்டா ஸ்டார்ட் தான்...


சிந்தனை செய் மனமே... செய்தால்....
தீவினை அகன்றிடுமே...
சிவகாமி மகன் ஷண்முகன் குகனை...
சிந்தனை செய் மனமே...

(ச்சும்மா... ஒரு பாட்டு; வேற ஒன்னுமில்ல!)
- ஞானபீடம்.


காதோட சொல்லுங்கன்னா பாட்டு பாடறீங்க.
ம்ம்ம்.. Agent 8860336 நம்பர் வேற. நான் தான் 007 ஆகி கண்டுபிடிக்கணும் போல..

புதிய பமக வின் பொது கூட்டத்தில் இத பத்தி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றனும்...


ஆனந்த், உமது பொதுக்கூட்டத்தில், எமது (ரகசிய) ஏஜண்டுகள் கடமையே கண்ணாயிருப்பார்கள். அவர்கள் பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது!

- ஞானபீடம்.


உங்க njanpidam@gmail.com பாருங்க... தெஸல்கா மாதிரி சில சாட்சிங்க அனுப்பி இருக்கேன்...


This comment has been removed by a blog administrator.


உங்கள் மயில் வந்தது!

"ஊகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது" என்பதே அரசியலில் சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்லும் திருவாசகம்!; இதை, புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகும் நீர் போகப் போக புரிந்துகொள்வீர்!!!!.

- ஞானபீடம்.


No comment is a Comment !

புரிகிறது எனக்கு. :)

சரி அதெல்லாம் கிடக்கட்டும்..
உங்களுக்கு K = K என்று தெரியமா ?
SPY Vs SPY படித்து இருக்கிறீர்களா Agent 8860336 ...


இங்கிலிப்பீசுல இன்னும் கொஞ்சம் எழுத்து பாக்கி இருக்குதுய்யா ஆனந்து!; அதெயெல்லாம் கூட கொஞ்சம் பெர்ய மனசு பண்ணி கவனிங்க ! ! !.

ஹூம்...
'சிவாய நம'வென சிந்தித்திருப்போருக்கு
அபாயம் ஒருநாளும் இல்லை...

- ஞானபீடம்.


இந்த விளையாட்டு போர் அடிக்குது.. விட்டுவிடுகிறேன்...

சரி கொஞ்ச வேலை பார்க்கிறேன்.. இல்லாகாட்டி பூவா லேது....


Post a comment Home Index

Links to this post

Create a Link