« Index | Home | ஞானும், அப்துல்கலாமும் பின்னே ஜோதிடபூமியும்! » | பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்... » | பதவி படுத்தும் பாடு... » | யாருக்கும் வெட்கமில்லை » | சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்... » | சும்மா அலேக்கா பறக்குது பாரு காரு! » | இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே » | தமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ... » | ஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா... » | தயிர் சாதமும், தந்தூரிச் சிக்கனும் » 

09 July 2005 

பயங்கரத் தொடர் தாக்குதல்கள்

இது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியவில்லை. அதுவும் ஒரே சமயத்தில் நான்கு ஐந்து இடங்களில். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், இப்படிப்பட்ட தாக்குதல்களை சமாளிப்பது என்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை என்றே தோண்றுகிறது. எல்லா உத்திகளும் கையளப்படுகிறது.

பின்ன என்னங்க, நானும் எவ்வளவோ எச்சரிக்கையா இருந்தாலும், என்ற வூட்டுக்காரி அடிக்கிற அடி மரண அடியால்ல இருக்குது! இத சமாளிக்க ஏதுனா ஐடியா குடுங்களேன் பிளீஸ்!!!

வூட்டுக்காரி அடிக்கிற அடி
ஹும்......பகவதீ..... ரட்ஷிக்கனே!!!

ஏனுங்க,

நிஜம்மாவே இந்த தாக்குதல்களில் இருந்து தப்ப எதாவது வழியிருக்கா?

புதுசா கல்யாணம் ஆவப் போற என்னைய இப்படி பயமுறுத்தரீங்களே!


இந்த தாக்குதல்களில் இருந்து தப்ப எதாவது வழியிருக்கா- பயப்படுவது Gopi!

ஹும்..... வேற வழியில்லீங்க
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் ஆகனும் :-(

என்ன ஒன்னு ஒவ்வொருத்தருக்கும்
ஒவ்வொரு மாதிரி அமையும்.

கழுதக்கி வாக்கப்பட்டா, ஒத வாங்கித்தான் வாழனும்.
நாய்க்கி வாக்கப்பட்டா, கடி வாங்கித்தான் ஆகனும்.
பேய்க்கி வாக்கப்பட்டா, தொங்கித்தான் ஆகனும் :-(

சரி விடுங்க, குளிருக்கு பயந்தா, குளிக்க முடியுமா?
வெற்றிவேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்-னு சொல்றாங்க.
try பண்ணுங்க. All the best!

- ஞானபீடம்.


கழுதை, நாய், பேய் சந்தடிசாக்குலயே இப்புட்டு வருதே., அடி விழுகுறதுல தப்பேயில்ல., தங்கச்சி., உங்க வீட்டு பூரிக் கட்டை உடைஞ்சு போச்சுன்னா தயங்காம சொல்லு., உனக்கு உதவி செய்யறதுக்கு காத்துகிட்டு இருக்கேன். .


to Apdipodu
ஆஹா... வந்துட்டாருய்யா... பாசமலரு அண்ணாத்தே!

யோவ்... கொஞ்சம் சும்மா இருய்யா;
ஏற்கனவே என் பிராணன வாங்குறா இவ,
இதுல பூரிக்கட்டயாம் பூரிக்கட்ட. போய்யா... போ....

ஒருத்தனுக்கு அடி உழுகறது, இவிங்களுக்கு குஷியா இருக்குது.!
ஓ வீட்டு அட்ரஸ் குடுய்யா, ஒரு லாரி பூரிக்கட்ட, கரண்டி, மத்து எல்லாம் அனுப்பி வெக்கிறேன்.

- ஞானபீடம்.


ஹாஹா!! ஞானபீடம்., லாரில என்னா? சரக்கு ரயில்ல அனுப்புங்க., எனக்கு ரொம்ப உதவியா இருக்கும். அது என்ன அண்ணாத்தே?., வார்த்தைக்கு வார்த்தை அய்யா?- ஹாஹ்ஹா!!!...நேற்று உங்களுக்கு இந்த மறுமொழியை அனுப்ப முயன்றேன் உங்கள் வலைப்பூ அனுமதிக்கவில்லை.


to apdipodu

யாரோ சதி செய்றாங்க போல!


சைடுல பாருங்க!
shoutbox இருக்குது.
அங்கே போய் சவுண்டு வுடுங்க!
கவனிச்சுடலாம்!
- ஞானபீடம்


அட அப்டிபோடுங்க 'அம்மணியா'!
ஒங்க blog போயி profile பாத்ததுக்கப்புறந்தான் தெரிஞ்சுது
நீங்க 34, female-னு!

இது தெரியாம நானு 'அய்யா' வாய்யா 'போய்யா' னு...
ஹும்..... என்னவோ போங்க.

ஒங்க பேருலயே 'போடு' வெச்சுருக்கீங்க;
வீட்ல என்ன போடு போடுறீங்களோ!
பாவம் அந்த பாவப்பட்ட ஆத்மா.

- ஞானபீடம்.


Post a comment Home Index

Links to this post

Create a Link