பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்...
பிரச்சனைகள் இல்லாத மக்களே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் பிரச்சனைகள் உள்ளன.
தீர்க்க முடிந்த பிரச்சனைகள், தீர்க்க முடியாத பிரச்சனைகள் என இரண்டு வகையான பிரச்சனைகள் உள்ளன. பிரச்சனைகளில் 95 விழுக்காடு பிரச்சனைகள் சுலபமாக தீர்த்துவிட முடியும். 5 விழுக்காடு பிரச்சனைகள் மட்டுமே தீர்க்க முடியாது. ஆனாலும் அவற்றையும்
மகான்கள், தெய்வங்கள் நினைத்தால் தீர்த்து வைத்துவிட முடியும். ஆனால் அவ்வாறு அவர்கள் தீர்ப்பார்களா என்பது சந்தேகமே! கோடியில் ஒருவருக்கு வேண்டுமானால் மகான்கள் தீர்த்து வைக்க முன் வருவார்கள். தனிமனித ஒழுக்கம், தூய சரணாகதி இவை இருந்தால் மட்டுமே முடியும்.
பிரச்சனைகள் என்னவென்பதையும், அவற்றை தீர்த்து வைக்கும் முறைகளையும் அறிந்து கொள்வதற்காகவே இறைவன் ஜோதிடக்கலையை உருவாக்கினார். எவர் ஒருவர் முறையாக ஜோதிடக்கலையைக் கற்றுக் கொள்கின்றார்களோ அவர்களால் வெகு சுலபமாக
மற்றவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முடிகின்றது. இன்றைக்குப் பெரும்பாலான
ஜோதிடர்கள் தன்னைப் பார்க்க வரும் மக்களுக்கு அவர்களது எதிர்கால பலன்களைக் கூறுகின்றார்களேத் தவிர, ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளை சொல்வதில்லை. காரணத்தையும் நானே சொல்லி விடுகின்றேன்.
ஒருவருடைய கர்மா என்னவென்று ஜாதகத்தில் நன்கு அலசி, அதற்குரிய பரிகாரங்களை எப்படி செய்ய
வேண்டுமென்று தன்னை நாடி வரும் அன்பர்களிடம் சொன்னால் அவர்களது பிரச்சனைகள் சுலபமாகத் தீர்ந்து விடும். ஆனால் பல ஜோதிடர்கள் அவ்வாறு சொல்வதில்லை. காரணம் பரிகாரத்தை சொன்னால் அவர்களது கர்மவினையைத் தாம் அனுபவிக்க வேண்டியதிருக்குமோ என்றே அச்சப்படுகின்றார்கள். ஒருவருக்கு நாம் சொல்லும் பரிகாரத்தால் அவர்களது கர்மவினை நம்மை பாதிப்பதில்லை. ஜோதிடம் பார்க்க வருபவர்களை ஏமாற்றி பணம் பறித்தால்தான்
அவர்களது கர்மா ஜோதிடரைத் தாக்குகின்றது. இதனை ஜோதிடர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில ஜோதிடர்கள் மட்டுமே பரிகாரத்தைக் கூறி மக்களது பிரச்சனைகளைப் போக்குகின்றார்கள். அப்படி சேவை செய்யும் அந்த ஜோதிடர்களை தலைவணங்குகின்றேன்.
அவர்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்க வேண்டுமாய் நான் வணங்கும் சித்தர்களைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
ஒரு சில ஜோதிடர்கள் பரிகாரங்கள் என்ற பெயரில்
மக்களை ஏமாற்றுவதாக பல புகார்கள் எழுந்து கொண்டிருக்கிறது. ஒரு சில ஜோதிடர்கள்
மட்டுமே பரிகாரங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் பெரும்பாலான
ஜோதிடர்கள் பரிகாரம் என்ற பெயரால் ஏமாற்றுவதில்லை. ஆனால் பரிகாரத்திற்கென்று பெரும்
தொகையை வசூலிக்கின்றார்கள் என்ற புகாரும் சில இடங்களில் எழுந்து கொண்டுதானிருக்கிறது. முக்கியமாக கிராமபுறங்களிலும், சிறிய நகரங்களிலும் இவ்வாறு
பரிகாரத்திற்கென்று நிறைய பணம் ஜோதிடர்கள் வாங்குகின்றார்கள் என குரல் எழுப்புகின்றார்கள். ஜோதிடர்கள் தவறு செய்கின்றார்கள் என அவர்களை நான் குறைகூற மாட்டேன். சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே ஜோதிடர்களுக்கு பொருத்தமான சன்மானத்தை வழங்குகின்றார்கள். மற்ற சிறிய நகரங்களில் ஜோதிடம் பார்ப்பதற்கு வெறும்
பத்து ரூபாயோடு வெற்றிலை பாக்கு வைத்து கொடுக்கின்றார்கள்.
ஒருவருடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வழிகாட்டும் ஜோதிட மேதைகளுக்கு வெறும் பத்துரூபாய்
சன்மானம் கொடுப்பது எந்த வகையில் நியாயப்படுத்துவது? பெரிய மருத்துவமனைகளில்
ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதற்கு பல லட்சங்கள் கட்டணம் வாங்கும்போது, ஒருவரது வாழ்க்கையைக் காப்பாற்ற வழிகாட்டும் ஜோதிடர்களுக்கு வெறும் பத்துரூபாய், நூறுரூபாயோ சன்மானம் அளிப்பது எந்த வகையில் நியாயம்?
எனவேதான் ஒரு சில ஜோதிடர்கள் பரிகாரங்களின் மூலம் கூடுதல் தொகையை வசூலித்து விடுகின்றனர். இந்த தொடரைப் படிக்கும் வாசகர்கள் தங்களது வாழ்க்கைக்கு ஒளிவிளக்கு ஏற்றும் ஜோதிடர்களுக்கு நிறைய சன்மானம் அளித்து அவர்களது மனம் குளிரவைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். காரணம் ஜோதிடர்கள் என்பவர்கள் தெய்வத்திற்கு நிகராக மதிக்கப்படுவர்கள்.
************** **************
நன்றி: ஜோதிடபூமி, ஜூலை 2005.
பிரச்சனைக்கு தீர்வு காண யாருக்குமே இஷ்டம் இல்ல போல.
ஒருத்தரயும் காணாமே, கமெண்ட் போடுறதுக்கு!
ஒருவேள, அவுங்க அவுங்க பிரச்சனைய பாக்கறதுக்கே நேரமில்லையோ என்னவோ!
இருந்தாலும், தீர்வு வேணுமின்னா, இங்க வந்து பாக்கனும் இல்லியா? என்ன நாஞ்சொல்லுறது :-)
நானே பதிவு போட்டு
நானே கமெண்டும் போட்டு
நானே கள்ள ஓட்டும் போட்டு
ச்சே...
நாய் பொழப்புடா ஒன்னது ஞானபீடம்!
- ஞானபீடம்.
Posted by ஏஜண்ட் NJ | Sat Jul 09, 01:38:00 pm (IST)