« Index | Home | இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே » | தமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ... » | ஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா... » | தயிர் சாதமும், தந்தூரிச் சிக்கனும் » | ராசாவுக்கு போஸ்ட்டரு ! » | குரு... சிஷ்யா... » | வந்தார்கள்; தின்றார்கள்; சென்றார்கள் » | முள்ளு. » | அதோ அந்த பறவை போல » | சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள் » 

04 July 2005 

சும்மா அலேக்கா பறக்குது பாரு காரு!

பொதுவாவே எனக்கு, இந்த மீடியம் & ஸ்மால் ரேஞ்ச் ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு போயி அங்கேயே சாப்டுறதுல அவ்ளோக்கா இஷ்டம் கெடயாது. வேணும்னாக்க பார்சல் எடுத்துக்கிட்டு வீட்டுல போயி சாப்டுவேன். இல்லாட்டி கொஞ்சம் பெரிய எடத்துக்கு போயிடுறது. அதுக்குக் காரணம் சுத்தம் தான். சரியா சுத்தமாக்கமாட்டாங்க. கும்பல் ஜே ஜே-ன்னு எப்பவும் மொச்சுகிட்டே இருக்குறதுனால, சும்மா ஒப்புக்கு தொடக்கிறதோட சரி. அதுவும் கொமட்டுற வாட வேற வரும். செலபோரு சாப்டுட்டு சிகரெட்டு வேற பிடிப்பாங்க. எனக்கு அந்த வாடயே சுத்தமா புடிக்காது. இன்னுங் கொஞ்சம்பேரு இருக்காங்க, சாப்டுட்டு கைய கழுவப்போற எடத்துல வாஷ்பேசின்ல நின்னுகிட்டு ................. எல்லா கண்றாவியும் நடத்துவாய்ங்க. எனக்கு அவிங்கள கொன்னுடலாம்னு தோணும். இதுக்கு அவிங்க பேண்டு சட்ட போட்டு இன்பன்னி, டையி வேற கட்டியிருப்பாய்ங்க. சில ரெஸ்ட்டாரண்டுகள்ல எழுதியே வெச்சுருப்பாய்ங்க: இங்கே தலைசீவவோ ....... துப்பவோ கூடாது அப்டீன்னு. எங்க, அதெயெல்லாம் எவஞ்சட்ட பன்றான். எல்லாம் அவனவனுக்கு காரியம் ஆனா சரி; அடுத்தவய்ங்க ஒக்காந்து சாப்டுறாங்களே, நாம துப்புற சவுண்டு அருவருப்பா அவிங்களுக்கு இருக்குமேன்னு கொஞ்சங்கூட யோசிக்கவே மாட்டாய்ங்க.

Why Bars have car parking?
ஏங் கூட்டாளிங்க செலபேரு, வாட்டர் சர்வீஸ் பண்ரதுக்கு, ஃபாருக்கு போவய்ங்க. நம்பளயும் கூப்டுவாய்ங்க. அந்த எழவு எடத்துக்கு போகவே எனக்கு புடிக்காது. எல்லாம் ஒரே பொகயப்போட்டு நாத்தந்தாங்காது நம்மளுக்கு. எப்டிதாங்... இந்த நாத்தத்துல குடிக்கறாய்ங்களோ தெரியல. ஒருவாட்டி போனப்பதாங் அங்கே ஓவர் பொகபோடுற சமாச்சாரம் தெரிஞ்சது. கைலாசம் மாதிரிதாங் கெடக்குது அந்த எடம்பூராவும். கொஞ்ச நேரத்துலயே, நாங்கெளம்பி வந்துட்டேன். அப்புறமா எந்த ஃபாரு பக்கமும் போவுறது கெடயாது. தண்ணிலயும் நமக்கு அவ்ளோ இன்ரஸ்ட்டு கெடயாது. எப்பனாச்சும், சும்மா லீவு நாள்ல கூட்டாளிக ரூம்ல போயி, ஒன்னா ஒக்காந்து செவன்ஸு, 320 கட்டு போட்டாக்க, அவிங்க சரக்கு அடிப்பாய்ங்க. நானு வெறும் ரெண்டு ஃபோஸ்ட்டர்ஸ் கேன ஊத்துக்கிட்டு கட்டு போடுறதோட சரி. அதும் பக்கத்துல இருக்க கூட்டாளிக ரூமுக்கு பொடி நடயா போற எடத்துல மட்டுந்தாங், ஃபோஸ்ட்டர்ஸ். கொஞ்சம் தூரமா இருக்கவிங்க ரூமுக்கு, போனா வெறும் பெப்சியோட சரி. இல்லாட்டி, நம்ம கெட்ட நேரம், எவனாது வந்து நம்ம வண்டி முன்னால உழுந்தாய்ங்கன்னா, நம்ம மேல எதாச்சும் வாட அடிச்சு, சந்தேகப்பட்டுட்டான்னா, தானாக்காரன் நம்மல சும்மா வுடுவானா? டிரங்க் அண்ட் டிரைவ் கேசுல போட்டுட்டான்னாக்க. அதுனால உஷாரா இருக்குறது நம்ம வழக்கமாப்போச்சு.

Don't dringk & Fly
அப்டி இருந்துங்கூட ஒருநாளு, நாலு பேர வண்டியில போட்டுக்கிட்டு (தனியாப்போயி வண்டி எங்கயாவது மக்கர் பண்ணுச்சுன்னா, தள்றதுக்கோ, இல்லே டயரு மாத்துறதுக்கோ ஆளு வேணும்னு, லாங் டிரிப்லாம் எவனயாச்சும் சும்மாவாச்சும் வண்டியில தூக்கிப்போட்டுக்கறது நம்ம பாலிசி!) கொஞ்சம் தூரம் ஒரு எடத்துக்கு போயி, கட்டு போட்டுகிட்டே, ஒரு நாலு அஞ்சு ஃபோஸ்ட்டர்ஸ உள்ள வுட்டாச்சு. நம்ம ஒடம்புக்கு இது கொஞ்சம் ஓவராப்போச்சு. நம்ம லிமிட்டு மிஞ்சிப்போனா ரெண்டு, ரெண்டர அவ்ளோதான். சரி, தங்கிட்டு விடியகாத்தால போகலாம்னு ரெண்டு பேரு சொன்னாய்ங்க. வேற ரெண்டு பேருக்கு, ராத்திரி எதோ ஜோலி இருக்கு; போயி ஒரு ஆளப்பாக்கனும்னாய்ங்க. சரி, வுடு. லீவு டயந்தானே இப்போ. கொங்சம் டிராபிக் கம்மியா இருக்கற நேரமாப்பாத்து வண்டிய கெளப்பலாம்னு முடிவுபண்ணிட்டு வண்டியக் கெளப்பியாச்சு. ஏ... மெதுவா... பாத்து கொண்டுட்டு போய்யா-னு ரூம்ல இருந்தவிங்களும் சொன்னாய்ங்க. அட வுடுய்யா, நாம என்னா இன்னிக்கி நேத்திக்கா வண்டி ஓட்றோம், பயப்டாதீங்கய்யா-ன்னு சொல்லிப்புட்டு, வண்டிய மெயின்ரோட்டுக்கு கொண்டாந்து, டாப் கியருல போட்டு, பிரஸ்டு டூ த மெட்டல்,

Don't drink & drive
சும்மா அலேக்கா பறக்குது காரு! (அப்பாடா... தலப்பு வந்துருச்சு!)

காருங்கூட பறக்கும்னு எனக்கு அப்ப தெரிஞ்சுது!

ஒருவேள பிரம்மயா இருந்துருக்குமோ?

ஹும்...... அதெல்லாம் ஒரு காலம்!

//திங்கள், ஜூலை 04, 2005
சும்மா அலேக்கா பறக்குது பாரு காரு! //

ஐயா அது எப்படிங்க..
இன்னிக்கு ஜுலை 02 2005 தானே


//தனியாப்போயி வண்டி எங்கயாவது மக்கர் பண்ணுச்சுன்னா, தள்றதுக்கோ, இல்லே டயரு மாத்துறதுக்கோ ஆளு வேணும்னு, லாங் டிரிப்லாம் எவனயாச்சும் சும்மாவாச்சும் வண்டியில தூக்கிப்போட்டுக்கறது நம்ம பாலிசி//

அது அது....


To பரணீ:>
//திங்கள், ஜூலை 04, 2005 - ஐயா அது எப்படிங்க..
இன்னிக்கு ஜுலை 02 2005 தானே // - கேட்பவர்: பரணீ


பாராட்டுக்கள் பரணீ!

கேட்கவேண்டும்; கேள்வி கேட்கவேண்டும்;
இல்லாவிட்டால், கேட்பார் இல்லையென்று எதை வேண்டுமானலும் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள்! கேட்க, கேட்கத் தான் ஞானம் ஊற்றெடுத்துப் பெருகும்!; கேளுங்கள் கொடுக்கப்படும்-இயேசு சொன்னார்.

உங்கள் கேள்விக்கு என் பதில்: ஞானபீடம், one step ahead!

*******************

To Kuzhali:


//அது அது.... // - நம்ம கார் பாலிசியைப் புகழ்ந்தவர் குழலி.

நாங்க ரொம்.....ப உஷாராக்கும் !

- ஞானபீடம். {<<= WARNING: DONT click here!}


//- ஞானபீடம். {<<= WARNING: DONT click here!}//

என்னய்யா போட்டுத் தொலச்சிருக்கீங்க, சொடுக்கணுமுன்னு கை துறுதுறுங்குதே? :)


//<<= WARNING: DONT click here! என்னய்யா போட்டுத் தொலச்சிருக்கீங்க, சொடுக்கணுமுன்னு கை துறுதுறுங்குதே? :)// - voice on wings.

வேண்டாம், அதை( ஞானபீடம்.) தயவு செய்து கிளிக்-செய்ய வேண்டாம்; உங்களை மன்றாடிக் கேட்கிறேன். வேண்டவே வேண்டாம்; கிளிக் செய்யவே வேண்டாம். மீறி கிளிக் செய்து... வேண்டாமய்யா... அதை என் வாயால் சொல்ல முடியலய்யா. வேண்டாம்னு சொன்னா கேளுங்கய்யா... விட்டுருங்கயா.

- ஞானபீடம். {<<= Warning: Please DONT click here!}


// சொடுக்கணுமுன்னு கை துறுதுறுங்குதே? :) // - சொன்னவர் VOW

கை துறுதுறுப்பவருக்கும் பச்சை கலர் + பட்டனை அழுத்துவதற்கு மனம் துடிப்பவர்களுக்கும் ஒரு அருமருந்து :: முகமூடி மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதால் அனுமதி இலவசம்...

முகமூடி இப்போது சந்தோஷமாக ஹம் செய்யும் பாடல் :: ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.... காதலா காதலா படத்திலிருந்து


//ஒரே கல்லுல ரெண்டு மாங்கா....// - முகமூடி

குறுக்கு சால் ஓட்றதுக்குனே செலபேரு காத்துக் கெடக்காங்கய்யா !

இந்த முகமூடி யை சொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.

- ஞானபீடம். {<<= எச்சரிக்கை: இங்கே சொடுக்காதீர்கள்; பிறகு மனம் மடுக்காதீர்கள்}


இப்போது காற்றிலே வரும் கீதம்:
போயா... போயா.. புண்ணாக்கு,
போடாத தப்புக்கணக்கு!


- ஞானபீடம். {<<= CLICK here on your own risk!}


ஞானபீடம் இந்த பதிவை மிகவும் விரும்பினேன். ஆனால் பெயரில் பார்ப்பனர்களின் வாசம் வீசுகிறது. வலைப்பதிவுகள் அதிகமாக பார்பனனை விரும்புகிறது. ஆகையால் டோண்டுவின் கதி தான் உங்களுக்கும் நேரும் என்பதை அறிந்து நல்ல பிள்ளையாக பதிவை போடவும்.


நீயா !

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...
ஒரே கண்ணன் ஒன்றே ராதை வா..ராய் கண்ணா...

- ஞானபீடம். {<<= WARNING: Please DONT click here!}


Post a comment Home Index

Links to this post

Create a Link