அதோ அந்த பறவை போல
...வாழ வேண்டும்;
உயரே வானத்தில் சிறகடித்துப் பறக்கும் பறவைகள் போல வாழவேண்டும்.
கண்ணியில் சிக்காத கானாங்குருவி போலே;
பறவைகளுக்கெல்லாம் பாஸ்போர்ட் இல்லை; கண்டங்களைத் தாண்டி பறந்திடுமே. - NRI பாடினான்.
'குருவி கொடஞ்ச கொய்யாப்பழம்' - நாட்டுப்புறத்திலும் பறவைகளுக்கு பாட்டு உண்டு.
"அந்த பறவைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; ஆனாலும் உங்கள் பரமபிதா அவைகளையும் பிழைப்பூட்டுகிறாரே". இயேசு சொன்னார்.
இராமாயணத்தில் ஒரு ஜடாயு.
திருக்கழுக்குன்றத்தில் கழுகு.
'பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான்.' - அறிவியல் சமைத்தான்.
'அந்த காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு (ஒன்னாயிருக்க) கத்துக் குடுத்தது யாருங்க'.
பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் !
காக்கைச் சிறகினிலே நந்தலாலா, நின்றன் கரிய நிறம் தோண்றுதடா நந்தலாலா.
மதுரை மீனாட்சிக்கு ஒரு கிளி.
சமாதானப் புறா.
சேவற்கொடியோன் முருகன் மயில் வாகனன்.
கொக்கு பறபற...
கோழி பறபற...
மைனா பறபற...
மயிலே பறபற...
-லேட்டஸ்ட் from சந்த்ரமுகி.
Posted by ஏஜண்ட் NJ | Fri Jun 17, 10:17:00 am (IST)
ஞானபீடத்தோட பட்டமே பற பற
Posted by சினேகிதி | Fri Jun 17, 05:08:00 pm (IST)