புத்தக வாசிப்பு...
நாம கூடத்தான் நெறய புத்தகம் படிக்கிறோம்; ஆனா, இது யாருக்குமே தெரியல போல இருக்கு; தெரிஞ்சிருந்தா நம்மள ஒரு பொருட்டா மதிச்சு பேர சொல்லி கூப்ட்டு இருப்பாங்க. சரி விட்டுத்தள்ளு. அதுக்காக, நாமளும் படிக்கிறோம் அப்டீன்னு காட்டாம இருக்க முடியுமா. இந்த ஒரு தடவ நாம படிக்கிறத காட்டுவோம். அதுக்கப்புறமாவது தெரிஞ்சுக்கட்டும் நாம யாருங்கறத.
மேற்கூறியபடி புலம்பிய பலர், தாங்கள் படிப்பதை photo எடுக்கச்சொல்லி, வலைப்பதியச் சொன்னார்கள்; அவர்கள் யார் என்பது கீழே:
மேற்கூறியபடி புலம்பிய பலர், தாங்கள் படிப்பதை photo எடுக்கச்சொல்லி, வலைப்பதியச் சொன்னார்கள்; அவர்கள் யார் என்பது கீழே:
ஞானபீடம்,
இந்த தீவிர வாசகர்களின் பட்டியல்களை வாங்கிப் போடுங்கள்! அவர்களுடைய வாசிப்பனுபவமும் சுவையாக இருக்கும்.
Posted by மு. சுந்தரமூர்த்தி | Thu Jun 09, 03:02:00 pm (IST)
இது லொல்லு, நாயெல்லாம் படிக்குமா ஞானபீடம்?
Posted by Thangamani | Thu Jun 09, 03:05:00 pm (IST)
/நாயெல்லாம் படிக்குமா ஞானபீடம்?/
படிக்கிறதுக்கும் நக்குறதுக்கும் ஆறு வித்தியாசங்களைக் காட்டும்படி தோழர் தங்கமானியைக் கேட்டுக் கொல்கிறேன் ;-)
Posted by -/பெயரிலி. | Thu Jun 09, 03:11:00 pm (IST)
இப்படி சக வலைப்பதிவாளர்கள் படத்தையெல்லாம் அவர்கள் அனுமதி இல்லாமல் போட்டிருக்கும் ஞானபீடத்தை வன்மையாக கண்டிக்கிறேன்...
என்னால
பெயர் இலா எலி - மேலிருந்து 5வது,
கண்ணாடிகண்ணன் - கீழிருந்து 4வது,
மீன் விக்ஸ் - கீழிருந்து 7வது
மூக்கி - கீழிருந்து 3வது
குட்டிபுலி - கடைசி
ஆகியோரை கண்டுபிடிக்க முடியுது... மத்தவங்க எல்லாம் யாரு??
Posted by முகமூடி | Thu Jun 09, 04:03:00 pm (IST)
முதற்கண், தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு, இங்கு வந்திருந்து, வாசித்து, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். (வாடிக்கையாளரை அணுகும் முறை இது !)
M.Sundaramoorthy, அவர்களே: - அவர்களில் சிலர் படித்துக்கொண்டிருப்பது:
நாய் = "நாய் வாலை நிமிர்த்துவது எப்படி?"
பூனை = "Thousand ways for Tom to catch that Jerry"
ஓநாய் = "கழுதைப்புலி என்பது கழுதைக்கும் புலிக்கும் பிறந்ததா? - ஒரு DNA Report"
கரடி = "சிவபூஜையில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது"
----
தங்கமணி அவர்களே: - //நாயெல்லாம் படிக்குமா ஞானபீடம்?//
இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்று தெரிந்துதான், மதிப்பிற்குரிய நாய் அவர்கள், தான் படிப்பதை photo எடுத்து அனுப்பியுள்ளார். அதுவும் கண்ணாடி போட்டுக்கொண்டு படிக்கிறார். தயவு செய்து உங்கள் கண்ணாடியை துடைத்துப் போட்டு பார்க்கவும் !
----
பெயரிலி அவர்களே: - உங்களை முகமூடி அவர்கள் கீழே பின்னூட்டத்தில் சாடை பேசியிருக்கிறார். இதற்கு எப்டியாவது case போட முடியுமா என்று பாருங்கள் !
----
முகமூடி அவர்களே: - அனுமதியோடுதான் செய்துள்ளேன்.
//மேற்கூறியபடி புலம்பிய பலர், தாங்கள் படிப்பதை photo எடுக்கச்சொல்லி, வலைப்பதியச் சொன்னார்கள்; //
இருந்தாலும், நீங்கள் பயமுறுத்துவதால் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்வது பற்றி எனது வக்கீலுடன் ஆலோசித்து வருகிறேன்!.
//மத்தவங்க எல்லாம் யாரு?? கண்டுபிடிப்போரின் வலைப்பதிவில் thanks giving-காக ஒரு பின்னூட்டம் அளிக்கப்படும் !
Posted by ஏஜண்ட் NJ | Thu Jun 09, 11:06:00 pm (IST)
மத்தவங்கல்லாம் யாரா?
நாந்தான். வேற வேற வேஷம் போட்டுக்கிட்டு வரேன்.
அனானிமஸ்ங்க வேற வேற பெயருலே பின்னூட்டம் கொடுக்கறாங்களாமே, அப்படி!
Posted by துளசி கோபால் | Thu Jun 09, 11:50:00 pm (IST)
வணக்கம், துளசி கோபால் அவர்களே.
உங்களின் வேஷம் கட்டும் திறமைக்கு ஒரு ஷொட்டு !
ஆனால் எவ்வளவு தூரம் அது நிஜம் என்பதை, வேஷம் கட்டிய மற்றவர்கள் சொல்லும்வரை, காத்திருக்கவேண்டியுள்ளது !.
Posted by ஏஜண்ட் NJ | Fri Jun 10, 12:11:00 am (IST)
இதுக்கெல்லாம் கேஸ் போட்டா, ஒரு பீர் கேஸ் கூடத் தேறாது விடுங்க. முகமூடியும் பெயரிலியும் யாரு யாரு? மூஞ்சி தெரியாத பங்காளிங்க இல்லீயா? நீர் அடிச்சு நீர் விலகுவதாவது? ஆனா, அவரு சொன்னத மட்டும் முகமூடாதி சொல்லியிருந்தா நடந்திருக்கிறதே வேற. கேஸ் என்ன டீஸல் என்ன நியூக்ளியர் பாமே வெடிச்சிருக்கும்.
அந்த சிங்கம், நாயி, குட்டைத்தாராவுக்கு சுட்டி அணிலு இங்கிபிலீசு ஸொல்லிக்குடுக்கற படம் தமிழ் மொளி வரலாற்றில முக்கியமுங்க. அதப்பத்தி ஞானபீடை நீங்க தெர்ஞு வெச்சிக்ககணும். அப்புடியே மேக்குல தமிள வளக்குறாப்ப தேவப்படும்.
Posted by -/பெயரிலி. | Fri Jun 10, 01:16:00 am (IST)
To பெயரிலி:
// அந்த சிங்கம், நாயி, குட்டைத்தாராவுக்கு............... அதப்பத்தி ஞானபீடை நீங்க தெர்ஞு வெச்சிக்ககணும்.//
பெயரிலி, மேற்கண்ட உங்கள் பின்னூட்டத்தில், தட்டச்சுப்பிழை ஏதும் உள்ளதா என தெரியப்படுத்துமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.- நன்றி.
Posted by ஏஜண்ட் NJ | Fri Jun 10, 06:18:00 am (IST)
//பெயரிலி, மேற்கண்ட உங்கள் பின்னூட்டத்தில், தட்டச்சுப்பிழை ஏதும் உள்ளதா என தெரியப்படுத்துமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.-//
வழக்குபோட தயாராகிற மாதிரி தெரியுது!
Posted by மு. சுந்தரமூர்த்தி | Fri Jun 10, 06:48:00 am (IST)
To m.Sundaramoorthy
//வழக்குபோட தயாராகிற மாதிரி தெரியுது! //
அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க
என்னால முடிஞ்சது, என்னைத் தற்காத்துக்கொள்வதற்காக, வழக்காடலாமே தவிர, (அதுவும் ஒரு limit வர தான்), மற்றபடி யார்மேலயும் வழக்கு போட்டுட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நம்மலால அலைய முடியாதுங்க.
Posted by ஏஜண்ட் NJ | Fri Jun 10, 07:04:00 am (IST)
ஞானபீடத்துக்கு வந்தாலே அஃறிணை உயிர்கள் ஞாபகத்திற்கு வந்து விடும் போலும்
Posted by Ganesh Gopalasubramanian | Mon Jun 13, 01:31:00 am (IST)
to கோயிஞ்சாமி:
//...சம்பந்தப்பட்டவர்களின் ப்ளாக்குக்கு செல்லுமாறி லிங் கொடுங்களேன்...//
அவர்களில் நெறய பேர், "blog செய்வது எப்படி"-ங்கறதத்தான் படிச்சிட்டு இருக்கறதா சொல்றாங்க. எல்லாரும் blog ஆரம்பிச்சு அப்புறமா, ஒரு 'தமிழ் காடு' உருவாக்கி அதில் திரட்டி! தருவார்களாம்.
to go.ganesh:
//ஞானபீடத்துக்கு வந்தாலே அஃறிணை உயிர்கள் ஞாபகத்திற்கு வந்து விடும் போலும் //
"காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று பாடிய பாரதி எந்த பீடமோ?
ஞானபீடத்துக்கும் கூட அஃறிணை மேல் பாசம்.
என்ன இருந்தாலும் just ஒரு sense missing அவ்ளோதானே!.
Posted by ஏஜண்ட் NJ | Mon Jun 13, 07:53:00 am (IST)