« Index | Home | புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன் » | 'இசம்' பற்றிய எனது ஓரப் பார்வை ! » | உயர்ந்த இடத்தில் இருக்கும் போது... » | ரசிகர் மன்றங்கள்... வேறொரு பார்வை ! » | மரம் வெட்டிகள், blog-ல் இப்படி தார் பூசினால்.... » | புலியும் அம்புலியும்... » | Elephant » | Crack » | ராஜீவ் காந்தி... this day that year (May21,1991) » | LTTE's Kattankudi Muslim Mosque Massacre » 

06 June 2005 

கோவையில் ஜெயகாந்தனுக்குப் பாராட்டு விழா

கோவை, june 6: கோவை விஜயா பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் த.ஜெயகாந்தனுக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த பாராட்டு விழாவில் தகராறு ஏற்பட்டது.

விழாவில் ஜெயகாந்தன் பேசியது

ஜெயகாந்தன், சம்ஸ்கிருதத்தில்தான் பேச வேண்டும் என்று வற்புறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்களும் திராவிடக் கழகத்தினரும் தகராறில் ஈடுபட்டனர். சிலர் மேடை முன் நின்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டவும் செய்தனர்.

போலீஸார் வந்தும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆதலால் அவர்கள் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு அண்மையில் சென்னையில் சம்ஸ்கிருத சங்கத்தில் பாராட்டு விழா நடந்தது. அதில் அவர், தமிழைவிட சம்ஸ்கிருதம் உயர்வானது என்று பேசியதாகவும், தமிழர்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாகவும் கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்களும், திராவிடக் கழகத்தினரும் தகராறில் ஈடுபட்டனர்.

இதற்கு பின்பு நடந்த விழாவில் ஜெயகாந்தன் பேசியது:

இவர்களின் கோபத்தில் இருந்து உண்மையை அறிகிறேன். தவறுகள் தெரிந்து நடப்பதில்லை. என்னை மன்னிக்கவும். சம்ஸ்கிருதம் உயர்வானது என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். நான் கூறியதற்கு என்ன அர்த்தம் என்று என்னைப் புரிந்து கொண்டவர்களுக்குத் தெரியும்.

தமிழின் இனிமை வேறு எந்த மொழியிலும் இல்லை. மனித குலம் எங்கே தவறு செய்தாலும் மனம் புண்பட வேண்டும். அதனால்தான் மனிதனுக்கு ஜீவாத்மா என்று பெயர் வந்தது. மற்ற உயிரினங்களுக்கு ஜீவன் என்று மட்டுமே பெயர். சகல அவஸ்தைகளும் உயிரினங்களுக்கு உண்டு. ஆனால் அவைகளால் உணர முடியாது. தன்னைத்தானே அது நேசித்து கொள்ளும். மனிதன் மட்டுமே உணரும் பண்பும், நேசிக்கும் தன்மையும் உடையவன்.

தமிழில் எனக்கு அதிகப் பற்று உண்டு. மனித உடலுக்கும், உயிருக்கும் உறவு உண்டு. உலகத்தையே தமிழ் இணைக்கிறது. மனித வாழ்வு, நாகரீகம் உயர்ந்து கொண்டே போகிறது. அதனுடன் சேர்ந்து தமிழும் வளரும்.

பொருள் இல்லாததைப் பொருள் ஆக்குவதே தமிழ். சுயமரியாதை உடையவர்கள் பிறருடைய மரியாதையையும் தெரிந்திருக்க வேண்டும். தமிழனுடைய தமிழ்ப் பற்று மெய்யாக இருக்க
வேண்டும்.

புகழ்ச்சியை ஏற்றுக் கொள்வதைப் போல இகழ்ச்சியையும் எதிர்கொள்ள வேண்டும். என்னை இழிவுபடுத்தி எனது சிந்தனையை வலுப்படுத்துகிறார்கள். தமிழுக்காகத் தொண்டு செய்ய வருபவர்களை தமிழர்களே பகைத்துக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழன் என்று சொல்வதைவிட, இந்தியாவைச் சேர்ந்த தமிழன் என்று சொல்வதையே பெருமையாக நினைக்கிறேன்.

சரியான தருணத்தில் தமிழை செம்மொழியாக அறிவித்துள்ளார்கள். இதனால் தமிழ் உயர்ந்து நிற்கிறது. தமிழை வளர்க்க, ஆங்கில எழுத்துகளைத் தார்ப்பூசி அழிப்பது, முறையற்ற செயல். இந்த செயலால் தமிழ் வளராது.

எதிர்த்துவிட்டு, பதவிக்காக மண்டியிடுபவன் நான் இல்லை. சம்ஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளை உயர்வாகப் பேசி, அங்குள்ள மக்கள் மனதில் இடம் பிடித்து, அங்கு தமிழைப் பரப்புவேன் என்றார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ. வி.கே.லட்சுமணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இயக்குநர் எல்.ஜி.கீதானந்தன், மு.வேலாயுதம், பி.எஸ்.குப்புசாமி, காசு.மணியன், ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Source: Dinamani

Post a comment Home Index

Links to this post

Create a Link