« Index | Home | உயர்ந்த இடத்தில் இருக்கும் போது... » | ரசிகர் மன்றங்கள்... வேறொரு பார்வை ! » | மரம் வெட்டிகள், blog-ல் இப்படி தார் பூசினால்.... » | புலியும் அம்புலியும்... » | Elephant » | Crack » | ராஜீவ் காந்தி... this day that year (May21,1991) » | LTTE's Kattankudi Muslim Mosque Massacre » | பின்னூட்டம் பற்றி... » | Silent Spectators - of fight and fighting » 

01 June 2005 

'இசம்' பற்றிய எனது ஓரப் பார்வை !

1. Modernism:

புள்ள குட்டி பெத்துக்கிட்டு, கல்யாணந்தான் கட்டிக்கலாமா என்பது Modernism.

Post Mordenism:

கல்யாணமும் கட்டாம, புள்ள குட்டியும் இல்லாம
கூடி வாழ்ந்து கோடி நன்மை பெறுவது!

2. Magical realism:

நடந்து முடிந்த காஞ்சிபுரம் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் முடிவுகள்!

அதாவது நம்பவும் முடியவில்லை,
நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை என்ற ரகம் எல்லாமே Magical realism தான் !!


3. Existentialism:

தனக்கு ஏதாவது கெடுதல் நடந்தால் அதற்கு தானே முழுவதும் காரணம் என்ற தத்துவம்;
(நல்லது நடப்பது மட்டும் ஆண்டவன் செயல்!)


4. Neo realism

புது மொந்தையில பழய கள்ளு!

அதாவது சிம்பு நடித்த 'கோவில்' படம் கார்த்திக் நடித்த 'அலைகள் ஓய்வதிலை' போல இருப்பது Neo realism.

சந்திரமுகி, மணிச்சித்திரதாளு போல இருப்பதுவோ 'பழைய மொந்தயில பழய கள்ளு'!
A sheep in the cloak of a sheep மாதிரி ;-)

6. Sadism

வேறு ஒருத்தர் பேருல, கன்னா பின்னான்னு comment-குடுத்து, அந்த நல்லவர் பேர கெடுக்கறதா நெனச்சு சந்தோஷப்பட்டா அது Sadism!


'இசம்' பற்றிய கேள்விகள் இங்கே...

ஞானபீடம் அண்ணே! இந்த மாதிரி விளக்கம் கூட ஒரே அலப்பரையா தான் இருக்குது. ரொம்ப சுலபமான புரியும் வகையிலான ஒப்பீடுகள் :-)))) நன்றி.


பின்னூட்டத்திற்கு நன்றி, அ.சி.விஜய்,

நீங்கள் தான் சரியாக 'ஞானபீடம்' என்றழைத்திருக்கிறீர்கள்;
சிலர் வேண்டுமென்றே ஞானப்பீடம் என்றழைக்கிறார்கள்; இது என்ன 'இசம்'-ஆக இருக்கும்? :-(


This comment has been removed by a blog administrator.


//சிலர் வேண்டுமென்றே ஞானப்பீடம் என்றழைக்கிறார்கள்//

ஞானப் பழம் போல, ஞானப்பீடம்.


இவ்ளொ சுலபமா விளக்குனதுதுக்கு நன்றிங்க ஞானபீடம்... (நானும் உங்க பேரை சரியா சொல்லிட்டனே!!)


வசந்தன் -> பழத்தில் 'ப்' வந்தால் இனிக்கிறது; ஆனால்...

ராசா -> நீங்க எப்போவுமே correct தானுங்களே ராசா !

கமெண்ட் கொடுத்தோருக்கும்,
கமெண்ட் கொடுத்துட்டு, திரும்ப எடுத்துக்கொண்ட புண்ணியவானுக்கும்
மற்றும் வந்திருந்து comment இடாத நண்பர்களுக்கும் நன்றிகள் பல உரித்தாகுக.


கமெண்ட் கொடுத்துட்டு, திரும்ப எடுத்துக்கொண்ட புண்ணியவான், வசந்தன் என்று நினைக்கிறேன் (comment இட்ட நேரம் காட்டுகிறது !)


Post a comment Home Index