புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன்
ஒரு 7 வருஷத்துக்கு முன்னாடி வாங்குன P-II, 333 Mhz கம்பியூட்டருதாங்க என்கிட்ட இருக்குது ! சும்மா சொல்லக்கூடாதுங்க, இன்னி வரக்கும் ரொம்ப நல்லாவே work பண்ணுது. இந்த 7 வருஷத்துல அதோட 4 GB harddisk-க தூக்கி கடாசிட்டு ஒரு 40GB போட்டேன், அதுவும் புட்டுக்கிச்சுன்னு அப்புறமா ஒரு 80GB போட்டு ஓடிக்கிட்டு இருக்கு. இருந்த 64mb ram கூட ஒரு 128mb ram சேத்தூட்டேன்., 192mb ஆச்சா. வேற, நா வாங்குன DV camcorder கூட ஒரு firewire card கொடுத்தாங்க, அதயும் போட்டு ulead video studio-வ வெச்சே video editing பண்ணி vcd போட்டேங்க. (ஒரு 30-minutes dv video-வ vcd compatible mpg1-ஆ மாத்த வெறும் 8 மணி நேரமே ஆச்சு! அதனால பகல்ல எடிட் பண்ணிட்டு ராத்திரி தூங்க போறப்ப rendering-ல போட்டுட்டா விடிஞ்சதும் CD தயார் ஆயிடும்!).
TV பாக்க தோணிச்சுன்னு, அதுக்கும் தனியா ஒரு tv tuner card வாங்கி போட்டேங்க. இதெல்லாம் பத்தாதுன்னுட்டு, cd reader கூட slave-ஆ ஒரு CD re-writer போட்டேங்க. அதுக்கப்புறமாதான் dvd writers வந்தாச்சேன்னுட்டு, அதயும் ஏன் விட்டுவெக்கனும்னுட்டு, master cd-reader-அ கழட்டி வீசிட்டு, dvd re-writer போட்டாச்சு. ஆச்சா, இப்போ எல்லாமே ரொம்ப நல்லா ஓடிட்டு இருக்குறப்போ கடேசியா இந்த keyboard-ல வந்துச்சு தகராறு. வேற ஒன்னுமில்லங்க, இந்த space bar- வந்து அடிக்கடி lock ஆயிக்கும்; அதனால புதுசா ஒரு keyboard வாங்கிபோட்டேன்ங்க. இந்த keyboard-ல ஓரு 3 keys extra-வா இருக்குதுங்க (power, sleep, wakeup-னு). problem-மே இந்த power key தானுங்க. என்னாச்சுன்னா, அடிக்கடி இந்த Home இல்ல insert key-ய தட்ட நெனச்சோ இல்லே வேற எதுக்கோ, கை போயி இந்த power key-ய தொட்டா, மங்களம் பாடுது கம்பியூட்டரு. ஒரு ரெண்டு மூனு தடவா பாத்துட்டு, சரி இது நமக்கு ஒத்து வராதுன்னுட்டு, flat screw driver எடுத்து... power key-ய புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன்.
இப்போதக்கி இந்த கம்பியூட்டர மாத்தறதா இல்லீங்க! அதுவா புட்டுக்கிட்டாதான் உண்டு !!!
ஓல்ட் ஈஸ் கோல்ட்
Posted by குழலி / Kuzhali | Fri Jun 03, 10:54:00 am (IST)
//ஓல்ட் ஈஸ் கோல்ட்//
வைரத்துக்கு மாறலாம்னு இருக்கேன் சீக்கிரத்துல,
ஏன்னா, இந்த monitor அப்டியே slow motion-ல dim ஆகி அடிக்கடி off ஆயிடுது, அப்புறமா பழய ரேடியோவ தலயில தட்டி பாடவெக்கிரமாரி கொஞ்ச நேரம் தட்டுனா தான் வெளிச்சம் வருது.
அதனால கூடிய சீக்கிரமே ஒரு புது கம்பியூட்டரு வாங்கனும்;
Posted by ஏஜண்ட் NJ | Sat Jun 04, 08:31:00 am (IST)