« Index | Home | புத்தக வாசிப்பு... » | கல்லிலே கலைவண்ணம் » | ஜின்னா... ஒயினா... விஸ்கியா? » | கல்யாண மாலை... » | கோவையில் ஜெயகாந்தனுக்குப் பாராட்டு விழா » | புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன் » | 'இசம்' பற்றிய எனது ஓரப் பார்வை ! » | உயர்ந்த இடத்தில் இருக்கும் போது... » | ரசிகர் மன்றங்கள்... வேறொரு பார்வை ! » | மரம் வெட்டிகள், blog-ல் இப்படி தார் பூசினால்.... » 

10 June 2005 

உடல் இளைத்து, நிறம் மாறி

"யுதிஷ்டிரா, பொன் பொருளுக்கு மயங்காதவன் இருக்கலாம். இனிய சொல்லுக்கு தலை வணங்காதவன் இருக்க முடியாது. இனிய சொல்லின் பெருமையையும் உயர்வையும் குறித்து ஒரு கதை சொல்கிறேன். பிறகு பொன் பொருள் தானம் பெரிதா? இனிய சொல் பெரிதா? என்பதை நீயே உணர்வாய்" என்று பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்.

எல்லா சாஸ்திரங்களையும் கற்ற ஞானதீபன் அழகாகவும் அன்புடனும் பேசக்கூடியவன். சாமர்த்தியம் நிரம்பியவன். அத்துடன் துணிவும் உள்ளவன். ஒருநாள் அவன், அடுத்த நகரத்துக்குப் போக நேர்ந்தது. நடுவே ஒரு பெரிய காடு. ஞானதீபன் நகரத்தை விட்டுக் காட்டில் செல்லத் தொடங்கிய சற்று தூரத்திலேயே ஒரு கொடிய அரக்கன் அவனைப் பற்றிக்கொண்டான். ஞானதீபன் கலங்கவில்லை. அவனுடன் அன்பாகப் பேசத்தொடங்கினான்.

அரக்கன், ஞானதீபனின் பேச்சில் மயங்கினான். "உயர்குலத்தவனே! உன்னிடம் ஒன்று கேட்கிறேன். சொல்கிறாயா? சரியான பதில் சொன்னால் உன்னை விடுகிறேன்" என்றான் அரக்கன்.

ஞானதீபன் அதற்குச் சம்மதித்தான்.

அரக்கன் சொன்னான்: "என் உடல் இளைத்து, நிறம் மாறியிருப்பதற்கு என்ன காரணம்? தெரிந்தால் சொல், உன்னை விட்டுவிடுகிறேன்."

ஞானதீபன் சற்றுநேரம் சிந்தித்தான். பதற்றமின்றி சொல்லத் தொடங்கினான்.

"அறிவிலும் பண்பிலும் உன்னை விடத் தாழ்ந்தவர்களை ஆதரிப்பதைக் கண்டு நீ வருத்தப்பட்டு இளைத்திருக்கலாம்."

"உன் உயர்ந்த ஆலோசனையை உன் கூட்டத்தார் ஏற்காதிருக்கலாம். அந்தக் கவலையால் உன் உடல் இளைத்திருக்கலாம்."

"உன்மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கலாம். அது உன் மனதைப் புண்படுத்தியுருக்கலாம்."

"நல்ல எண்ணத்துடன் நீ ஆதரிக்க, அவர்கள் உன் நல்ல எண்ணத்தையே தவறாகவும் கருதியிருக்கலாம்."

"அறிவாளியான நீ, முட்டாள்களுடன் வசிக்க நேர்ந்த வருத்தத்தால், உடல் மெலிந்து வெளுத்திருக்கலாம்"

"அக்கிரமக்காரர்கள் நல்ல நிலையில் சுகபோகமாய் வாழ்வதைக்கண்டு நேர்மையாளனான நீ துன்புறுவாய். அதனால் நீ இளைத்து வெளுத்திருக்கலாம்." என்றான் ஞானதீபன்.

அரக்கன் சட்டென்று பிடியை விட்டான். "உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். உனக்குப் பரிசு கொடுத்து கெளரவிக்கிரேன்" என்று கூறி, ஏராளமான பொன்னைக் கொடுத்து அனுப்பினான்.

"ஞானதீபனின் இனிமையான சொல்தான் அவனைக் காப்பாற்றியது. அரக்கனுக்கு ஏராளமான பொருளைக் கொடுத்திருந்தாலும் அரக்கன் ஞானதீபனை விட்டிருக்க மாட்டான்" என்றார் பீஷ்மர்.

இந்தக் கதை மூலம், தங்களின் விடை தெரியாத கேள்விக்கு பதில் / தெளிவு பெற்றவர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


யாசிப்பவரிடம் "உனக்கு அளிக்க என்னிடம் எதுவுமில்லையே தம்பி" என்றாராம் ஒருவர். அதற்கு யாசிப்பவர், "பரவாயில்லை,தாங்கள் என்னைத் தம்பி என்று அழைத்ததே போதும்" என்றாராம்.


நன்றி லதா அவர்களே,

இதைத்தான் திருவள்ளுவரும்,

"அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன் சொலனாகப் பெறின்." - 92.

"முகமலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையை விட நல்லதாகும்" - என்று கூறியிருக்கிறார்.


I repeat!

இந்தக் கதை மூலம், தங்களின் விடை தெரியாத கேள்விக்கு பதில் / தெளிவு பெற்றவர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Thanks :-)


Post a comment Home Index