கொல், கவனி, செல்.

"கொல்லத்தான் வேண்டுமா?" ஆயிரமாவது முறையாக தனக்குள் கேட்டுக்கொண்டான்.
"ஒன்னுக்கு பத்துதடவ நல்லா யோசிச்சு காரியத்துல எறங்குனா, பாதி கெணறு தாண்டுனமாரி, ஆமா" யாரோ நல்லது எதற்கோ சொன்னது, ஆனால் இவன், அறிவை ஆயுதமாக்கப் பார்க்கிறான்; திட்டம் போட்டுத் தீர்த்துக்கட்டப் போகிறான். இவன் ஒன்றும் professional killer கிடையாது; அதனால்தான் ரொம்பவும் யோசிக்கிறான். பயம் வேறு தொற்றிக்கொண்டது. நேரம் ஆக, ஆக பயம் கூடிக்கொண்டே போனது; வேர்த்துக்கொட்டினான். இதயத்துடிப்போ, யாரோ எட்டி எட்டி நெஞ்சில் உதைப்பது போலிருந்தது. "ச்சே, இதயமே நின்னு போனா தேவலாம் போல இருக்கு" உள்ளுக்குள் எரிச்சல்பட்டான்.
"கரெக்ட், இதயம் நின்று போனால் ! very good idea, அதுவா நிக்குமா என்ன, நிறுத்துறோம்." ஒரு சிகரெட்டை எடுத்து பத்தவைத்துக்கொண்டே toilet போனான். "எப்படி நிறுத்துவது? அதுவும் யாருக்கும் சந்தேகம் வராமல்; குறிப்பாக போஸ்ட்மார்ட்டதில் கூட தெரியாமல்" என்று திரும்பவும் மண்டையைக் குடைந்தான். சிகரெட்டையும்போட்டு, toilet-ஐ flush செய்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.
நாற்காலியில் உட்கார்ந்து, கைகளை சேர்த்து டேபிளின் மேல் வைத்துக்கொண்டு, துடிக்கும் இதயத்தின் அதே தாளத்தில், கால்களையும் ஆட்டினான். பதற்றம் குறைந்த மாதிரி தெரியவில்லை.
*********
யார் இவன்?.
யாருடைய இதயத்தை நிறுத்த, திட்டம் போடுகிறான்?
*************************************
அடப்போங்க, யாரோ, யாரயோ கொல்றான்; நமக்கு என்னங்க வந்துச்சு? எனக்கு பொழுது போகல, கதய ஆரம்பிச்சேன். ஒங்களுக்கும் வேற வேல இல்லாட்டி, நீங்களும் அவங்கூட ஒக்காந்து யோசிங்க.
நாம்போறேன், ஏஞ்சோலியப்பாக்க.
*************************************
இப்டி அந்தரத்துல தொங்கவிட்டா art film touch வருங்களா?
என்னாது, என்னய அப்டி தொங்கவுடனுமா?
வுடு ஜூட்.

யோவ் ஆனாலும் உமக்கு நிக்கலு ஜாஸ்திப்பா :-)
Posted by
குசும்பன் |
Thu Jun 16, 10:41:00 am (IST)
to kusumban:
என்ன இருந்தாலும், ஒங்க 'குசு' வுக்கு
sorry, குசும்புக்கு முன்னாடி, நா தூசுங்க !
----
அது என்னாபா, நிக்கலு !?, ஏதொ மெட்டலா (metal) ! இல்லே நக்கலா !
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Jun 16, 10:59:00 am (IST)
நக்கலு தாம்ப்பா நிக்கலு. என்னம் ஓ போங்க!
Posted by
குசும்பன் |
Thu Jun 16, 11:33:00 am (IST)
ராஜேஷ்குமார் இந்தக் கதையை தொடர்ந்தால்: சிகரெட்டை டாய்லெட்டில் போட்டவுடன் அந்த இடம் சிவப்பானது. தீ நாக்குகள் அவனின் அலறலை விழுங்கிக் கொண்டது. (யாரி மண்ணெண்ணெய் கொட்டியது, ஏன் கொட்டினார்கள் என்பது மிச்ச 30 கி.பைட்.)
ஜெயமோகன்: கழிவறையில் காலந்தள்ள எத்தனிக்கும் பொழுதுகளில் விடியல் பெறலாம். உணவு நச்சு. புகையும் நச்சு. நாவுக்கு உணவை ருசிப்பதை விட நாசிக்கு உகந்திருத்தல் அவசியம். புகையையும் உள்ளிழுக்கும் மூச்சு, கொஞ்சமாக மூச்சை மரணிக்கிறது. (புகையின் தீமை, உணவின் உறவாடல், கழிவறை மனக்கழிவு, தற்கொலை என்று தொடரலாம்.)
சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், ரூமி, பாரா, யூமா வாசுகி என்று விருப்பமுள்ளவர்கள் தொடரலாம் (பெட்டர், ஜெமோ/ரா.கு. முயற்சிகளை திருத்தலாம் ;-)
Posted by
Boston Bala |
Thu Jun 16, 12:15:00 pm (IST)
நன்றி, ராஜேஷ்குமார நீங்க மிஞ்சிடீங்க பாலா.
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Jun 16, 01:08:00 pm (IST)
மூர்த்தி,
'கலக்கலா' முடிச்சிட்டீங்களே!!!!!
good one!!!!
Posted by
துளசி கோபால் |
Thu Jun 16, 08:04:00 pm (IST)
:-)
Posted by
Pavals |
Thu Jun 16, 08:46:00 pm (IST)
ஹி..ஹி... செம ரவுசு பா!
Posted by
தகடூர் கோபி(Gopi) |
Thu Jun 16, 10:13:00 pm (IST)
திடுக், திடுக் திருப்பங்களோடு, தொபுக்கடீர்-னு கதையை முடித்த மூர்த்திக்கு, சபாஷ் !.
மற்றும் இங்கேவந்திருந்து, இந்த திகில் கதையை படித்துச் சிரித்த ! அன்பு நெஞ்சங்கள், 'துளசிகோபால்', கொங்கு ராசா, கோபி, மூர்த்தி ஆகியோருக்கு நன்றிகள் பலப்பல.
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Jun 16, 11:27:00 pm (IST)
ஞானபீடம் முன்பே படித்துவிட்டேன், பின்னூட்டமிடவில்லை அவ்வளவுதான் இப்போது இட்டுவிட்டேன்...
இது நன்றாக இருக்கின்றது... இது மாதிரி ரிலே ரேஸ் கதைகள் சில ஆண்டுகளுக்கு முன் பத்திரிக்கையில் வந்தது... அது போலவும் ஆர்வமுள்ளவர்கள் செய்யலாமே...
பின்னூட்டமிட்டவர் - குழலி குழலி குழலி
Posted by
குழலி / Kuzhali |
Fri Jun 17, 05:40:00 am (IST)