« Index | Home | ஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா... » | தயிர் சாதமும், தந்தூரிச் சிக்கனும் » | ராசாவுக்கு போஸ்ட்டரு ! » | குரு... சிஷ்யா... » | வந்தார்கள்; தின்றார்கள்; சென்றார்கள் » | முள்ளு. » | அதோ அந்த பறவை போல » | சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள் » | கொல், கவனி, செல். » | ஒரு நாடகமன்றோ நடக்குது ! » 

26 June 2005 

தமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ...

ச்சே... என்ன ஒரு மெஷின் வாழ்க்கடா இது. அக்கடான்னு கொஞ்ச நேரம் ஒக்காரலாம்னா, எங்கெ நம்மல விட்டாய்ங்க. வேல... வேல... வேல... ஆபீஸு, ஆபீஸு வுட்டா ஊடு. ஊட்ட வுட்டா ஆபீஸு. ஊட்டுக்கு போனா, அது இல்ல, இது இல்ல.பொண்டாட்டி, புள்ளங்க, ஆடு, மாடு, கோழி, நாயி, பன்னி எல்லாத்தயும் பஞ்சாயத்து பண்ணவே நேரஞ்சரியாப்போவுது. இந்த லெச்சனத்துல எங்கே போய்ச் சுத்தறது.

மனுஷனுக்கு பொழுது போயி பொழுது விடிஞ்சா... ஒரு மாமாங்கம் போன மாதிரில்ல இருக்கு. அவ்ளோ டென்ஷன்; அத்தன தலவலி.

கொஞ்சம் ரிலீஃப் வேணும்னா, ஒரு நாலு எடத்த சுத்திப்பாக்கனும்பாங்க.

நா.. தமிழ்நாட்ட ஒரு நாலு ரவுண்டு சுத்துனேங்க.
நீங்களும் வாங்க.


தமிழ்நாடு

Image hosted by Photobucket.com

அப்டியே எந்திருச்சு
மேல இருக்க
தமிழ்நாட்ட சுத்தி வாங்க.

அப்டி... அப்டி... அப்டிதாங்க.

அப்பாடா... என்ன ஒரு நிம்மதி. ஈஸ்வரா...!

ஸாரி, தந்தூரி சிக்கன் பதிவுல போட்ட பின்னூட்ட தொடர்ச்சியில இங்க -வ் குத்து விட்டுட்டேன்


//ஸாரி, தந்தூரி சிக்கன் பதிவுல போட்ட பின்னூட்ட தொடர்ச்சியில இங்க -வ் குத்து விட்டுட்டேன் //- சொன்னவர்: மருத்துவர். முகமூடி.

பரவால்லீங்க. ஒங்க மனசுல இருக்கறத ஒளிவு மறைவில்லாம சொல்ற நல்ல குணம் எல்லாருக்கும் வராது. நாங்கூட ஒங்களுக்கு - குத்துனா ஓப்பனா சொல்வனாங்குறது சந்தேகம்தாங்க!

நன்றி.

- ஞானபீடம்
**************


உம்ம குசும்பு உலகத்தில யாருக்கும் வராதய்யா!


நன்றி குழலி !.

பொழுதுபோகாத அம்பட்டையன் பொண்டாட்டி தலய புடிச்சு செரச்சானாம்! - அந்த கதையா நானும் எத எதயோ எழுதி போட்டுட்டு இருக்கேன்.
ம்... ஒங்கள மாரி செல நல்லவுக வந்து கமெண்ட்டு அடிச்சிட்டுப் போனாத்தாங் உண்டு.

வாழ்க வளமுடன் எல்லோரும்.

**************
- ஞானபீடம்
**************


This comment has been removed by a blog administrator.


// ஒங்கள மாரி செல நல்லவுக // ப.ம.க வில் இருந்து கொண்டே எதிரிக்கட்சிக்காரர்களை புகழ்வதன் மூலம் தமிழ்நாட்டுக்கு பழக்கமில்லா ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்க முயற்சிக்கும் ஞானபீடத்தை ப.ம.க வன்மையாக கண்டிக்கிறது.... ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளில் சவாரி செய்ய இது என்ன அந்த கட்சியா, இது .ம.க என்பதை நினைவில் கொள்க...


//எதிரிக்கட்சிக்காரர்களை புகழ்வதன் மூலம் தமிழ்நாட்டுக்கு பழக்கமில்லா ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்க முயற்சிக்கும் ஞானபீடத்தை ப.ம.க வன்மையாக கண்டிக்கிறது...//- கண்டணம் தெரிவிப்பது முகமூடி.

இடிதாங்கி மருத்துவர் முகமூடி அவர்களே,
முதலில் நான் தெளிவாக, உறுதியாகக் கூறிக்கொள்வது என்னவென்றால்...
யாம் எந்த (ஒரு) கட்சியையும் சார்ந்தவனல்ல.
யாரும் எமக்குப் பகைவரில்லை.
யாம் எவரையும் பகைத்துக்கொள்வதுமில்லை.
அப்படியிருக்க, எமக்கு எதிரி என்று ஒருவரை நீங்கள் சொல்வதைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்றுக்கொள்ளாது.

************
- ஞானபீடம்.
************


ஒருவேள, என்னோட இந்த ஐடியாவக் காப்பியடிச்சித்தான் Google Earth ஆரம்பிச்சானோ!


Post a comment Home Index

Links to this post

Create a Link