« Index | Home | முள்ளு. » | அதோ அந்த பறவை போல » | சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள் » | கொல், கவனி, செல். » | ஒரு நாடகமன்றோ நடக்குது ! » | உடல் இளைத்து, நிறம் மாறி » | புத்தக வாசிப்பு... » | கல்லிலே கலைவண்ணம் » | ஜின்னா... ஒயினா... விஸ்கியா? » | கல்யாண மாலை... » 

21 June 2005 

வந்தார்கள்; தின்றார்கள்; சென்றார்கள்

அண்ணலும் நோக்கினான்;
அவளும் நோக்கினாள்.
அதை ............
முற்றும் துறந்த முனிவனும் நோக்கினான் !!.
- கலைஞர் மு.கருணாநிதி.



...................
"ஹையா... வேன் வருது... வேன் வருது...". வாண்டுகள் குஷியானார்கள்

"சிவகாமீ... அவுங்க எல்லாம் வந்துட்டாங்க போல இருக்கு; என்னா, எல்லாம் ரெடியா". பரமசிவம் குரல் கொடுத்தார்

"ஆச்சுங்க... நம்ம பெரிய பய எங்கேன்னு பாருங்க" இது, அவர் மனைவி சிவகாமி.

"அந்த வெளங்காத பயல உடு. எங்கயாது போயி வெட்டிப்பயலுக கூட அரட்ட அடிச்சிட்டு இருப்பான்; வீட்டுல இருந்து கூடமாட ஒத்தாச பண்ணவும் மாட்டான்; உருப்டியா ஒரு வேலக்கிப்போயி சம்பாரிக்கவும் துப்பில்ல." மகன் அழகிரி பற்றி பரமசிவம் வாசித்த பாராட்டு பத்திரம் இது!.

"சரி... சரி... ஒங்க கச்சேரிய நிப்பாட்டுங்க மொதல்ல; அவுங்க வந்துட்டாங்க பாருங்க" - சிவகாமி.

"வாங்க... வாங்க... எல்லாரும் வாங்க... ஒக்காருங்க..." - வரவேற்பு.

"அப்புறம்... பயணம் எல்லாம் செளகரியமா இருந்துச்சுங்களா" விசாரிப்புகள் மற்றும் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

சாப்பிட, குடிக்க பரிமாறப்பட்டது; சாப்பிட்டார்கள்; குடித்தார்கள்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"அப்புறம்... எல்லாம் நாம இப்போ பேசுனமாதிரியே செஞ்சுடுவோம்;"

ஒரு நாலு, அஞ்சு தடவை அப்புறம், அப்புறம் என்று இழுத்து இழுத்து, ஒருவழியாக எல்லாம் முடிந்து, விடை பெற்றார்கள்

புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது வீடு.




கடைவீதியில்,

"டே அழகிரி, ஒங்க வீட்டுக்கு விருந்தாளிக நெறய பேரு வந்துருக்காப்ல இருக்கு; நீ என்னடான்ன இங்க ஒக்காந்துட்டு இருக்க" சைக்கிளில் வந்த தங்கராசு கேட்டான்.

"ம்... போவனும்டா..." - சுரத்தில்லாமல் அழகிரி.

சற்று நேரம், தங்கள் கதை தவிர, மற்ற எல்லார் கதையையும் பேசினார்கள். பிறகு கலைந்து சென்றார்கள்.

வீட்டுக்குள் அழகிரி நுழையும்போதே, பரமசிவம் "ம்... தொர வந்துட்டாரு; சோத்தக் கொட்டு, நல்லா மூக்கப்புடிக்க தின்னுட்டு ....." எல்லா அப்பாக்களும், தங்களது வேலையில்லாத மகன் மீது பாடும் அதே பாட்டைப் பாடினார்.

தங்கையைத் தேடினான் அழகிரி.

"என்னா ஆச்சு?" சீரியசாய் கேட்டான் அழகிரி.

"gone, போயே போச்சு" சிரித்தாள் தங்கை.

"வெளயாடாத சொல்லு, என்னா ஆச்சு" - அழகிரி.

சொன்னாள்:

"வந்தார்கள் !; தின்றார்கள் !; சென்றார்கள் !"




பின்கதை:

நடந்தது ஒரு பெண் பார்க்கும் படலம். வந்த மாப்பிள்ளை வீட்டார் கேட்ட எல்லாவற்றையும் செய்யும் திராணியற்ற பரமசிவம், தன்னால் என்ன முடியும் என்பதைப் பவ்யமாய்க் கூறினார். அதற்கே கடன உடன வாங்கித்தான் செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினார். வந்த மாப்பிள்ளை வீட்டார் ஊருக்குப் போய் இரண்டு நாட்களில் லெட்டர் போடுவதாகக் கூறி
விடைபெற்றார்கள்.





புலி-மருந்து



நன்றாக உள்ளது.....


நன்றி, மூர்த்தி & குழலி.

- ஞானபீடம்.


அப்படியே நமக்கும் ஒரு நன்றி போட்டுடுங்க (அப்புறம் இலவச இணைப்பா ஒரு புலி படம் எதுக்கு)ஞானபீடம்


அருமை.


அருமையான பதிவு!!! ஆமாம், அந்தப் புலி எதுக்கு? இந்த மாதிரி வந்து 'தின்னுட்டு'
போறவங்களைக் கடிச்சுக் குதறவா?


நல்ல பதிவு திரு ஞான்ஸ்,
வந்தார்கள் , தின்றார்கள் என்பதற்கு பதில், வந்தார்கள், மேய்ந்தார்கள் .... என்று போட்டிருக்கலாம்..

அப்புறம் புலி எதுக்கு?? இப்படி வரவங்களுக்கும் மிருகங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லைனு சொல்லவா???
வீ எம்


ஞானபீடம் சொன்னது:

நன்றி,
முகமூடி,
விஜயகுமார் ஜவகர்லால்
துளசி கோபால்
வீ.எம்.
ஆகிய எல்லோருக்கும்.
--------------

புலி படம் எதற்கு என்ற கேள்விக்கு என்னுடைய பதில்:

புலி மருத்துவக் குணம் கொண்டது என்று விளக்குவதற்குத்தானே ஒழிய வேறு எதற்காகவுமில்லை.. இல்லை... இல்லை.

துளசி, வீ.எம் ஆகியோர் சொன்னதை மறுக்கவும் இல்லை !

- ஞானபீடம்


இன்னுமொரு விஷயம் மறந்திட்டேன்... (போற இடத்துல எல்லாம் விளம்பரம் பண்ணனும்னு - ஐடியா உதவி ஞானபீடம்)

*********************
விளம்பரம்

தூங்கிக்கிடக்கும் தமிழனை தட்டி எழுப்பி ஒப்பாரி sorry வீரப்பாடல் பாடி இன்று முதல் தமிழகத்தை நாசமாக்க... ச்சே...

முன்னேற்ற உதயம்: பச்சோந்தி மக்கள் கட்சி

********************


Post a comment Home Index