« Index | Home | வந்தார்கள்; தின்றார்கள்; சென்றார்கள் » | முள்ளு. » | அதோ அந்த பறவை போல » | சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள் » | கொல், கவனி, செல். » | ஒரு நாடகமன்றோ நடக்குது ! » | உடல் இளைத்து, நிறம் மாறி » | புத்தக வாசிப்பு... » | கல்லிலே கலைவண்ணம் » | ஜின்னா... ஒயினா... விஸ்கியா? » 

23 June 2005 

குரு... சிஷ்யா...

குருவே...

சிஷ்யா...

ஒரு சந்தேகம் குருவே...

என்ன சந்தேகம் சிஷ்யா?

விபூதி என்பது என்ன குருவே?

திருநீறு என்பார்கள்; இதை நெற்றியில் இட்டுக்கொண்டு, 'தான்' என்னும் அகந்தையை அகற்றி, எல்லோரும் ஒரு நாள் சாம்பல் தான் என்பதை உணர்வதற்காக இட்டுக்கொள்கிறோம்.

அப்படியென்றால் விபூதி என்பது வெறும் சாம்பல்தானே, குருவே?

வெளிப்படையாகச் சொன்னால், அப்படித்தான் சிஷ்யா.

விபூதியை நெற்றியில் இட்டுக்கொள்கிறோம்; ஆனால் சாம்பலைக் குப்பையில் கொட்டுகிறோம். விபூதியும், சாம்பலும் ஒன்றாக இருக்க விபூதிக்கு மட்டும் ஏன் குருவே சாம்பலை விட இவ்வளவு அதிக மரியாதை?

காரணம்...

குரு என்ன பதிலைச் சொன்னார் என்று அறிய உங்களுக்கு ஆவலா?

அதற்கு முன்... இதைப் படியுங்கள்!









வாருங்கள்... படியுங்கள்..
ஞானபீடம் வலைப்பதிவிற்கு வாருங்கள்...
படியுங்கள்.










ஒரு சரித்திரக் கதை...
வந்தார்கள்; தின்றார்கள்; சென்றார்கள்





ஒரு மர்மக் கதை...

கொல், கவனி,செல்





ஒரு குடும்பக் கதை...

ஒரு நாடகமன்றோ நடக்குது !





ஒரு புராணக் கதை...

உடல் இளைத்து, நிறம் மாறி




அந்த மன்மதக் கலை...
சொல்லித் தெரிவதில்லை...




ஒரு தத்துவம்... முள்ளு





மற்றொரு தத்துவம்...

அதோ அந்த பறவை போல
...







EYES   of ICE are NICE !யாரோட பதிவுலயாது போயி, ஒரு ரெண்டு வரி comment குடுத்துட்டு, அப்டியே நாமளும் கூட அதப்பத்தி, இதப்பத்தி எழுதியிருக்கோம்; வாங்க, அப்டீன்னு சொன்னா, நாம ஏதோ பெர்சா அவுங்க கஷ்டமர லவட்டிக்கிட்டு போயிட்டமாதிரி சவுண்டு உடுறாங்க.


அதுக்குன்னு நாம எழுதுனத விளம்பரப்படுத்தலேன்னா எப்டி?

அதான்... விளம்பரத்துக்குன்னே தனியா ஒரு பதிவு போட்டாச்சு.














குரு என்ன பதிலைச் சொன்னார் தெரியுமா?

விபூதிக்கு மட்டும் ஏன் அதிக மரியாதை என்றால், "விபூதிக்கு விளம்பரம் அதிகம்; சாம்பலுக்கு விளம்பரம் இல்லை. அதுதான் காரணம்." என்றார் குரு.

இந்த சாம்பலுக்கும் (விபூதிக்கும்) ஒரே மதிப்பு தான்.. முதலில் குளித்து விட்டு வருபவர்கள் நெற்றியில், உடல் முழுக்க சாம்பலைப்பூசினால் நீர் கோர்த்துக் கொண்டு வரும் தொல்லைகள் (ஜலதோஷம் போன்றவை) , உடல் அரிப்பு போன்ற வியாதிகள் வராது என்பதால் உடல் முழுதும் அள்ளிப் போசிக்கொள்ளும் வழக்கம் வந்தது. நாகரீக வளர்ச்சியில் அது அநாகரீகமாக பட்டதால், முன்னோர் சொன்னதை விட்டால் நாகரீகம் தொலைந்துவிடும் என்று கருதி அதைத் தொடர வைப்பதற்கு ஒரு காரணம் கண்டார்கள்.

இது மட்டுமல்ல, இந்து மதத்தில் எல்லாமே ஆரம்பம் சரியாகத் தான் இருந்தது.. இடையில் அந்த காரணம் புரியதவர்கள் செய்த கூத்து தான் அதை நகைப்புக்கு இடமானதாக்கி விட்டது.. சில இடங்களில் அந்த தேவையே போன பிறகும் அதை பற்றிக்கொன்டு அழுபவர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் நாட்கள் கழித்து விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் தடவிக்கொள்ளாமல் படுத்துத் தூங்கினால் பாவம்.. என் தந்தையார் அப்படி செய்யாமல் தூங்கியதே இல்லை என்று கூட சொல்லலாம்.

இது போன்ற தவறான கருத்துக்களால் நல்ல பல கருத்துக்கள் கண்டு கொள்ளப்படுவதே இல்லை.. வெளி நாட்டுக்காரர்கள் கண்டுணர்ந்து கூறும் போது அதை வாழ்த்தி அவர்களைப் புகழ்வது நம் பண்பாகி விட்டது. அதனால் தான் மஞ்சளையும் துளசியையும் நீதி மன்றம் சென்று காப்பாற்ற வேண்டியதாகிறது.

உங்கள் பதிவில் உள்ளுடிய நகைச்சுவை புரிந்தது. நன்றாக இருந்தது.

அன்புடன் விச்சு


விச்சு,

என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி!!!

என்றும் அன்புடன்,
துளசி.


//அந்த காரணம் புரியதவர்கள் செய்த கூத்து தான் அதை நகைப்புக்கு இடமானதாக்கி விட்டது.. //

நீங்கள் யாரைச்சொல்கின்றீர், ஒரு 50-60 வருடங்களுக்கு முன் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க புகுந்தனரே அவர்களை சொல்கின்றீரா? அல்லது ஒரு 2000, 3000 வருடங்களுக்கு முன் மனுதர்மத்திலிருந்து பல மூடப்பழக்கங்களை புகுத்தி தம்மை காத்துக்கொண்டார்களே அவரையா?

விஷிதகிங் உங்களது பதிவுகளை படிக்கும் போதே நீங்கள் யாரை குறிப்பிடுவீர் என எமக்கு நன்றாக தெரியும் ஆனால் மற்றவர்களுக்கும் உங்களது கருத்து புரியவேண்டுமல்லவா? அதனால் நீங்கள் யாரை எனக்கூறினீர்கள் என தெளிவாக கூறினீர் என்றால் வேத, சுலோகங்கள் வழியாகவே பதில் சொல்லப்படும், அப்போது மற்றவர்களுக்குப்புரியும், அந்த காரணம் புரியதவர்கள் செய்தது கூத்தா இல்லையா என?

//இந்து மதத்தில் எல்லாமே ஆரம்பம் சரியாகத் தான் இருந்தது.. //

ஆரம்பம் என்றால் எதை கூறுகின்றீர், சிறு தெய்வங்களை, இயற்கையை வழிபட்டார்களே அதை ஆரம்பம் என கூறுகின்றீரா அல்லது மனுதர்ம, வேத சாத்திரங்கள் உருவானதே அதை ஆரம்பம் என கூறுகின்றீரா?

ஞானபீடம் உங்கள் பதிவு அருமை... ஒரு விதமான புதிய நடையை உமது எழுத்தில் காண்கிறேன், இதே மாதிரி எழுதும் மற்ற சிலர் வீ.எம். மற்றும் தாஸீ...


குருவே சித்தி அடைய என்ன வழி?

சீக்கிரம் உங்க சித்தப்பாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லு மகனே.

டொய்ய்ய்ய்ய்க்ங்ங்ங்ங்..............


********************
ஞானபீடம் பதிலுரைப்பது:
********************
To விச்சு (vishytheking):

//...உங்கள் பதிவில் உள்ளுடிய நகைச்சுவை புரிந்தது. நன்றாக இருந்தது.//

இந்த ஒரு வரிக்காகத் தானுங்களே... இவ்ளோ கஷ்ட்டப்பட்டு! எழுதுறது! நன்றி. ஜென்ம சாபல்யம் அடைந்தேன் !
-------------

To துளசி:

விச்சு, துளசியை நீதிமன்றம் சென்று காப்பாற்றினாராமே!
என்ன தப்புத் தண்டா பண்ணாங்களோ! யாருக்குத் தெரியும்!
-----------

To மூர்த்தி:
என்னுடைய தனித்தன்மையை குறிப்பிட்டுப் பாரட்டின ஒரே ஆள் நீர்தானய்யா ! நன்றிய்யா!
ஆனா, ஒருத்தர் ரெண்டு பேர எல்லாம் நாங்க கும்பல்-னு சொல்றது இல்லீங்கோ!
-----------
To குழலி:

அய்யா... அடங்குய்யா... அடங்கு!
எங்கேயோ போற மாரியாத்தா...
எம்மேல வந்து ஏறாத்தா...
அப்டீன்னு ஊர்ப்பக்கஞ் சொல்லுவாய்ங்க!
அதுமாரி...
வேண்டாம்யா... விபரீத வெளயாட்டு....
நிறுத்து... எல்லாத்தயும் நிறுத்து.

அப்புறம்... என்னவோ இந்த கஞ்சி போட்ட காட்டன் சொக்கா மாதிரி ரொம்ப வெறப்பா எழுதுறீரு...
ஒமக்கு கல்யாணம் ஆகட்டும்யா...
சப்த நாடியும் ஒடுங்கி போயிடும் !
-----------
To அல்வாசிட்டி.விஜய்:

ஏலே... மக்கா... என்னவே இது?
யாருய்யா ஒம்ம குரு...
சிஷ்யப் பய தான் புத்தி கெட்டுப்போயி சித்திய 'அடைய' வழி கேட்டான்னா...
இந்த குருவுக்கு புத்தி ஏய்யா இப்டி போவுது..?
-----------

***************
reply by ஞானபீடம்
***************


ஞானபீடம்,

உம்ம ரவுசுக்கு அளவே இல்லாமப் பொயிட்டுது!

கலக்கல்!


//வேண்டாம்யா... விபரீத வெளயாட்டு....
நிறுத்து... எல்லாத்தயும் நிறுத்து.//

நிறுத்திடுறேன் தலை, ஆனா அங்கங்கே வாழைப்பழத்துல விட ஊசி ஏத்துற மாதிரி நஞ்சைத்தூவி எழுதறாங்களே எப்படி தலை பொறுத்துக்கிறது, சரி விடுங்க தல, எல்லாத்தையும் நிறுத்திடலாம்... நாமெல்லாம் எழுதி மாறிடுமா என்ன? அவங்கவங்களே உணர்ந்து மாறினாத்தான் உண்டு

//அப்புறம்... என்னவோ இந்த கஞ்சி போட்ட காட்டன் சொக்கா மாதிரி ரொம்ப வெறப்பா எழுதுறீரு...
ஒமக்கு கல்யாணம் ஆகட்டும்யா...
சப்த நாடியும் ஒடுங்கி போயிடும் !
//
நெசமாவா தலை, என்ன எல்லோரும் இப்படி பயமுறுத்துகின்றீர்


ஞானபீடம் எழுதிக்கொள்வது:
----------------

To Gopi:
//ரவுசு, கலக்கல்.//
தாங்க்ஸ்பா.

To Kuzhali:
முதல் முதலாக தொட்டி/குடை ராட்டினத்தில் சுற்றியபோது;
முதல் முதலாக விமானப்பயணம் செய்தபோது;
.....
இப்படி சிலவற்றை முதன்முதலாக செய்தபோது
அப்படியே அடிவயிற்றில் புளிகரைப்பதுபோல,
ஏதோ ஒன்று அங்குமிங்கும் உருளுவதுபோலவும்,
கால்கள் தரையிலிருந்து நழுவி, தலை தானாக சுற்றுவது போலவும் இருந்திருந்தால்...
அப்படியான சில உணர்வுகள் கல்யாணம் ஆனவுடன் தோண்றலாம்; தோண்றாமலும் இருக்கலாம் !


- ஞானபீடம்


விளம்பரம் செய்ய சிறந்த இலவச இடம் ஞானபீடம் பின்னூட்டப்பகுதி... கலர் விளம்பரம், கறுப்பு வெள்ளை மட்டுமல்ல குத்துமதிப்பா எத்த வேணும்னாலும் விளம்பரம் செய்யலாம்... ஓகே, இப்ப நம்ம முறை

வலைப்பதிவுகளில் சிறந்தது என்று fortune, time, india today, usa today ஆகிய பத்திரிக்கைகளால் பரிந்துரைக்கப்படுவது :: முகமூடி பதிவு


ஞானபீடம்,
விளம்பரம் செய்ய நல்ல ஐடியாதான் :-).
நகைச்சுவை நன்றாய் இருக்கிறது.


ஞானபீடம் பதிலுரைப்பது:

//விளம்பரம் செய்ய நல்ல ஐடியாதான் :-).// -சொன்னவர் முத்து

நன்றி முத்து.

இப்பல்லாம் எதுக்குத்தான் விளம்பரம் இல்ல. அதான் போட்டுட்டேன்! அதும் இதுக்கு ஐஸ்வர்யாராய் கூட போஸ் குடுத்துருக்காங்கன்னா பாத்துக்கோங்களேன்!

***************
- ஞானபீடம்.
***************


ஞானபீடம், வாய்விட்டு சிரித்தேன் ..


வாய்விட்டு சிரித்த L-L-D-a-s-u--- வுக்கு நன்றி!

- ஞானபீடம்.


ரொம்ப நாளாச்சி... முகமூடி விளம்பரப்படுத்திக்கொள்வது

*******************

ஒரு உண்மை சரித்திரம் ::
என் முகமூடிக்கு பின்:: ஒரு உண்மைக்கதை


ஒரு அறிவியல் புதினா ::
மீன், மனிதன் மற்றும் பச்சோந்தி


**********************


//நம்ப ஐசுக்குட்டி இல்ல....... என்ன இப்புடிக்கெட்டுப்போயிட்டார் வியந்தவர் Garunyan.

ஞானபீடம். பதிலுரைப்பது: அய்யா, ஐசு 'கெட்டுப்போயிட்டார்' அப்டினு தப்பா பேசப்படாது!. அப்புறம் விவேக் ஓபராய் மானநஷ்ட வழக்கு போட்டுடுவார்!
நமக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம்.
இந்த ஐசு, கெட்டுப்போனா நமக்கென்னங்க ;-)
வேற ஐசு கெடக்காதா என்ன !

- ஞானபீடம்.


Post a comment Home Index