« Index | Home | ராசாவுக்கு போஸ்ட்டரு ! » | குரு... சிஷ்யா... » | வந்தார்கள்; தின்றார்கள்; சென்றார்கள் » | முள்ளு. » | அதோ அந்த பறவை போல » | சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள் » | கொல், கவனி, செல். » | ஒரு நாடகமன்றோ நடக்குது ! » | உடல் இளைத்து, நிறம் மாறி » | புத்தக வாசிப்பு... » 

24 June 2005 

தயிர் சாதமும், தந்தூரிச் சிக்கனும்

Curd RiceTandoori Chicken

மல்லிப்பூ மாதிரி வடித்த சாதத்தில், கெட்டித் தயிரை விட்டு, சிறிது தண்ணீர் தெளித்து, தேவையான அளவில் உப்பு இட்டு, கிளறிய தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள தந்தூரிச் சிக்கன் மிகவும் நல்ல காம்பினேஷன்.

இதை ஒருமுறைச் சாப்பிட்டுப் பாருங்கள்;
அப்புறம் எங்கேயோ போய்விடுவீர்கள்!

பின் குறிப்பு: இந்த தயிர்சாதம், தந்தூரிச் சிக்கன்
காம்பினேஷனைத்தான், பிரபல தாதா 'அப்பு' கைது செய்யப்பட்டு ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்பட்டபோது, எஸ்.பி.பிரேம்குமாரிடம் வேண்டுமெனக் கேட்டு வாங்கி சாப்பிட்டாராம்!.

எச்சரிக்கை:
இந்த தயிசாதம், தந்தூரிச் சிக்கன் காம்பினேஷனைச் சாப்பிட்டு விட்டு, எங்கேயாவது போய் எந்த வம்பிலாவது மாட்டிக்கொண்டால் ஞானபீடம் பொறுப்பல்ல!
அவரவர் வாழ்க்கை, அவரவர் கையில்/வாயில்!

- ஞானபீடம்


அது சரி ஒரு வாக்கு + ல் குத்தியிருந்ததே நீங்களே போட்டுக்கொண்டதா ஞான பீடம்? பரவாயில்லை நானும் ஒன்று குத்திவிடுகின்றேன்

எனக்கு பிடித்தது தயிர்சாதத்தோடு முதல் நாள் வைத்த மீன் குழம்புதான் அந்த ருசியே ருசி...


வேட்பாளர் தனது + சின்னத்தில் வாக்களிப்பது அவரது உரிமை மற்றும் கடமை !
யாம் எமது கடமையிலிருந்து என்றுமே தவறியதில்லை.
கடமையை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்வதற்கு எப்போதும் தயாராக இருக்கும்படி தான் எங்களுக்கு அண்ணா மற்றும் ஜின்ன ஆகியோர் சொல்லிக்கொடுத்துள்ளார்கள்!

- ஞானபீடம்


//பி.கு தோழியரில பின்னூட்டம் கொடுத்தீங்க இல்லே, அதுக்கு பதில் மரியாதை :-)
//
ஆகா என்ன விளையாட்டு இது... யோவ் ஞானபீடம், உமது ஒவ்வொரு பதிவுக்கும் வந்து பின்னூட்டமும் வாக்கும் அளிக்கின்றேன், மரியாதையாக என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடனும் வாக்கு -ல் போட்டுறாதிங்க தல


நன்றி Ramachandranusha

முற்பகல் செய்யின், அதே பகலில் விளைகிறதே!

- ஞானபீடம்.


சிக்கன் பிரியாணிக்கு தயிர் பச்சடி., தயிர் சாதத்துக்கு தந்தூரி சிக்கனா?.


//...மரியாதையாக என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடனும் ...// - மிரட்டியது குழலி !

//...வாக்கு -ல் போட்டுறாதிங்க தல// - கெஞ்சியதும் குழலி!

"எலும்பில்லாத நாக்காம் !
என்னவேணுமின்னாலும் பேசுமாம்!"

அய்யா... ஊதுவாரே (குழலி!) விஷயம் இதுதான்,

தோழியரில் ஒரு test பதிவு இட்டார்கள்;
அதற்கு முன்பே டோண்டு ஒரு சோதனைப் பதிவு இட்டார். சரி, தமிழ்மணம் திரட்டுவதில் சிக்கல் போலிருக்கிறதென்று, நான், தோழியரில் ஒரு பின்னூட்டம் இவ்வாறு கொடுத்து,
"சோதனை மேல் சோதனை;
முதலில் டோண்டு, அப்புறம் தோழியர்".

தமிழ்மணம் திரட்டுகிறதா என்று பார்த்தேன், அவ்வளவே. புரிந்ததா இப்போது.

- ஞானபீடம்.

என்னிடம் - எவ்ளோ ஸ்டாக்கீதுன்னு பாத்துட்டு கொஞ்சூண்டு மாயவரத்தானுக்கு வெச்சிட்டு, மீதியெல்லாமே ஒமக்குத்தான் குழலியாரே!


நான் என்ன பதிவு போட்டாலும் இரண்டு - உடனே விழுதே அதுல ஒரு ஆளு நீங்க தானா??


//...சிக்கன் பிரியாணிக்கு தயிர் பச்சடி.,
தயிர் சாதத்துக்கு தந்தூரி சிக்கனா?.// - APDIPODU


எல்லாமே ஒன்னுக்குள்ள ஒன்னு!

கே: பிரிக்க முடியாதது எதுவோ?
ப : சிக்கனும், தயிரும்!

ஆனா பாருங்க apdipodu,
இந்த குழலி என்னமோ, மீன் கொழம்பு தான் தயிருக்கு ருசிக்கும்-ங்கறாரு. போயி, அவரோட சின்னம் ' - ' ல ரெண்டு ஓட்டு போட்டுட்டு வந்துடுங்க, சரியாயிடுவாரு!.

- ஞானபீடம்.


தயிசாதம், தந்தூரிச் சிக்கன் காம்பினேஷன்.. எல்லாம் ஓ.கே.. அதுக்கு முன்னாடி உள்ள போக வேண்டிய அபட்டைசர் பத்தி சொல்லாம விட்டுடீங்களே.. ;-)


ஞானபீடம்........

நான் சைவம்.... என்னுடைய விருப்பம் தயிர் சாதம் + வடு மாங்காய் ஊறுகாய்......

// எனக்கு பிடித்தது தயிர்சாதத்தோடு முதல் நாள் வைத்த மீன் குழம்புதான் அந்த ருசியே ருசி... //

குழலி !! முதல் நாள் சாதத்தில் தயிர் ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள்..... நம்ம பழைய சோறு பழைய சோறு தாங்க


குழலியும், நானும் ஒரே ஆள்தான்னு சில பேரு சொல்லிட்டு இருக்காங்க., இதுனால 'வரவு'(credit! ) எனக்குத்தான். குழலி நம்ம விட புத்திசாலி. ஒருவேளை ஒரு '-' சப் போட்டு., அவரக் காப்பாத்தி விட்டுடலாமா?.


//குழலியும், நானும் ஒரே ஆள்தான்னு சில பேரு சொல்லிட்டு இருக்காங்க., //
அப்படியா? எங்க தலை சொல்கின்றனர்?
எனக்கு இதுவரை தெரியவில்லையே.... யாராவது சொன்னதற்கு சுட்டி இருந்தால் தாருங்களேன்

//குழலி நம்ம விட புத்திசாலி//
இதெல்லாம் ரொம்ப அதிகம்.... உங்க நக்கலுக்கு அளவேயில்லை....


ஞானபீடம் சொன்னது:

// ..அதுக்கு முன்னாடி உள்ள போக வேண்டிய அபட்டைசர் ..// - - கேட்டவர் ராசா.

ராசா... சாப்பாட்டுக்கு முந்தி 'தண்ணி' ரொம்ப குடிச்சா, நெறய சாப்ட முடியாதுங்கறதுனால, சொல்லல. சிக்கன் ரொம்ப காரமா
இருந்துச்சுன்னா, தண்ணி கொஞ்சம் போட்டுக்கலாம்... i mean குடிச்சுக்கலாம். ;-)

//...நான் சைவம்.... என்னுடைய விருப்பம் தயிர் சாதம் + வடு மாங்காய் ஊறுகாய்...... நம்ம பழைய சோறு பழைய சோறு தாங்க.// - சொன்னவர் Go Ganesh.

Go.Ganesh... தொட்டுக்கறதுக்கு ஊறுகாய மிஞ்சின ஒரு காய் இல்லிங்க! அது எதுக்காக வேணும்னாலும் ;-). i mean, பழய சோறானாலும், ரொம்ப ரொம்ப பழய (சுண்ட) கஞ்சியானாலும்!.

//குழலியும், நானும்(apdipodu) ஒரே ஆள்தான்னு ....// - சொல்லிக்கொண்டவர்கள், குழலி & apdipodu.

ஒன்னா இருக்க கத்துக்கனும், இந்த
உண்மையச் சொன்னா ஒத்துக்கனும்! - ஒரு சினிமா பாட்டு.
------------
++++ எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது,
உங்கள் அபிமான ஞானபீடம்


தயிர் சாதம் ..சிக்கன்...
என்ன ஒரு சூப்பர் காம்பினேஷன்...சாப்பட்டு சமத்துவ நாயகர் பட்டம் வழங்குகிறேன் ..
"சாப்பட்டு சமத்துவ நாயகர்" ஞானபீடம் வாழ்க, வாழ்க !
வீ .எம்
பி.கு :நீங்க வந்து கருத்துப்பெட்டில நம்மள போட்டு தாக்கி சவுண்டு வுடாட்டி நமக்கு தூக்கம் வராதுனு தெரியும்ல..அப்புறம் ஏன் நம்ம பாவம் அவரை விட்டுவிடுவோம் பாகம் 2 ல ஏன் கருத்து போடலை??


ஞானபீடம் சொன்னது:

//...ஏன் நம்ம 'பாவம் அவரை விட்டுவிடுவோம்' பாகம் 2 ல கருத்து போடலை??..- கேட்டவர் வீ.எம்.

வேற ஒன்னுமில்ல...
"வீ.எம். ரொம்ப பாவம் அவரை விட்டுவிடுவோம்''- அப்டீன்னு தான்!

'சாப்பாட்டு சமத்துவ நாயகர்' - பட்டம் நல்லா பறக்குமா !!
எனக்கு பறக்குற பட்டம் தான் ரொம்ப புடிக்கும்!

யாரோ 'கோழிப்பேரவை' சார்பாக எனக்கெதிராக கண்டணப் பேரணி நடத்தப் போகிறார்கள் என மாநில உளவுத்துரையில் வேலை செய்யும் என் சகா ஒருத்தன் சொல்றான்!

உங்கள் புனே பயணம் .இனிதே வெற்றியடைய வாழ்த்துக்கள்.


++ ஞானபீடம்


குழலி! இந்தாங்க இணைப்பு., அவருக்கு தெரியாம இல்ல, சும்மா அப்படி ஒரு கலாய்ப்பு.

http://tamilkudumbam.blogspot.com/2005/06/blog-post_111886007299679008.html


// இதை ஒருமுறைச் சாப்பிட்டுப் பாருங்கள்; அப்புறம் எங்கேயோ போய்விடுவீர்கள்! // ஞானபீடம் மெஸ்: ரெண்டு தயிர் சாதம் 2 தந்தூரி சிக்கன் பார்சல்

// எனக்கு பிடித்தது தயிர்சாதத்தோடு முதல் நாள் வைத்த மீன் குழம்புதான் // எனக்கு தயிர்சாதமும் கருவாட்டு குழம்பும்.... அப்படியே யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும்னு ஒரு பட்டியல் வாசிங்கப்பு..

ஞானபீடம் அப்படியே பழைய சோறும் எருமைத்தயிரும், வறுத்த மீனும் வெங்காய ரசமும் பத்தியெல்லாம் படத்தோட செய்தி போடப்பா..

எனக்கு எப்ப -வ் குத்தனும்னாலும் நான் போகுமிடம் ஞானபீடம்... (கெடச்சிதா ராசா) நீங்களும் குத்தலாம், ஞானபீடத்துக்கு கோபம் வர அளவுக்கு சொரணை இல்ல... அதுக்கு நான் க்யாரண்டி


அடடா, இது தெரியாம சிக்கன் சாப்புடுறத விட்டுட்டேனே! (இப்பத்தான் சிக்கன் சாப்டறத விட்டு 24 வருஷமாச்சி. ச்சின்ன்ன்ன புள்ளையா இருக்கும் போது சாப்புட்டது)

அப்றம்.. தயிர் சாதத்தோட பீட்ரூட் பொரியலை கலந்தடிச்சி(வெள்ளையா சாப்பிட வேண்டிய தயிர்சாதத்தை இப்படி பிச்சைக்காரன் தட்டு மாதிரி கலந்தடிச்சி சாப்புடுறயேன்னு அம்மணிகிட்ட திட்டு/குட்டு வாங்கிட்டே) சாப்டுற சுகமே தனி...

//எனக்கு பறக்குற பட்டம் தான் ரொம்ப புடிக்கும்!//

அதான் பட்டையக் கெளப்புற பட்டம் நம் பட்டம் பதிவுல வந்து பின்னூட்டம் இட்டீங்களோ?


என் பதிவுக்கு பெரிய மனது வைத்து வந்து என்னை கௌரவப்படுத்திய தன்மான பேரரசு முகமூடிக்கு நன்றின்னு ஒரு போஸ்டர் கூட அடித்து பதில் மரியாதை செலுத்த தெரியாத தமிழ் பண்பாடு இல்லாத ஞானபீடத்தை கண்டித்து ஒரு -வ் குத்து விடுகிறேன்


ஞானபீடம் பதிவுக்கு சம்மந்தமில்லாததுதான், என்ன இருந்தாலும் விளம்பரம் செய்துக்கலாமே உங்க பதிவுலே அதான்

//என்ன இருந்தாலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைப் பத்தி இப்படியெல்லாம் சேம் சைடு கோல் போடக் கூடாது குழ இல்ல மரம்!//

ஓ... இதை சொல்கின்றீரா? சே.... இத்தனை நாள் இதை கவனிக்காமல் விட்டுவிட்டேனே....

ஆகா நம்மையும் கூட ஒரு ஆளா நினைத்து இப்படிலாம் சொல்றாங்களேனு ஒரு பக்கம் சந்தோசம் தான், நடிகைக்கு கோவில் கட்டுவது, நடிகனுக்கு பட்டம் விடுவது சே.. சே... கொடுப்பது எப்படி பிரபலமானவர்களுக்கு நடக்குமோ அதேபோல இவர் அவரா? அவர் இவரா?, நம்பெயரில் அடுத்தவர் பின்னூடமிடுவதெல்லாம் வலைப்பதிவில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகின்றோம் என அர்த்தம் (ஹி ஹி தற்பெருமை தாங்கலை...இல்லை)


*************************
reply posted by - ஞானபீடம்
**************************

to Gopi:
வெள்ளையா சாப்பிட வேண்டிய தயிர்சாதத்தை இப்படி பிச்சைக்காரன் தட்டு மாதிரி கலந்தடிச்சி சாப்புடுறயேன்னு...

அதுக்குத்தான் சொல்றேன், சிக்கனுக்கு மாறிடுங்க!

நம்ம வெளம்பர ஐடியா பிச்சிக்கிட்டு போவுது;
எப்டியோ நல்லாருந்தா சரி !

************

to Mugamoodi (.ம.க. தலைவர்) &
kuzhali (பா.ம.க. பிரச்சார பீரங்கி):

ஒங்களுக்குள்ள சண்டை வேண்டாம்;
சமாதானமாப் போயிடுங்கய்யா!

வேண்டாம்யா....
ரெண்டு ஆடு சண்டை போட்டா.... ஓநாய்க்கு சந்தோஷம்.
ஆனா... ரெண்டு ஓநாய் சண்டை போட்டா...
(சொல்றதுக்கு பழங்கதை இல்லய்யா!!!)

***************

to அல்வாசிட்டி.சம்மி:

//கோழிய தயிர் சாதத்துக்கூட வச்சி சாப்பிட கூடாது. புட் பாய்சனாக நெறைய வாய்புகள்...//

இதை யாராவது படித்து,
எதிரிகளை உபசரித்து வீழ்த்தும் உபாயமாகக் கருதவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் !!!!

******************

reply posted by - ஞானபீடம்

********************


படம் நல்லா இருக்கின்றது!!! எங்கு எடுத்தீர்கள்!!!!


//படம் நல்லா இருக்கின்றது!!! எங்கு எடுத்தீர்கள்!!!!// - கேட்டவர் NoNo.

என்னய்யா மேட்டரு,
எதாச்சும் காப்பிரைட் பிரச்சனய கெளப்பப் போறீரா?.
Google -ல போயி தேடித்தாங்கய்யா சுட்டேன்.

ஏங் கேக்கறீங்க, ஒருவேள இதெல்லாம் நீங்க எடுத்த படமா!

நன்றி.


- ஞானபீடம்.


//சந்தடி சாக்குல, ஞானபீடம் ஒரு பொழப்பத்த ஆளு-ன்னு சொல்லிப்புட்டீரய்யா ! வாழ்க நீவிர்; வளர்க உமது புகழ். !//

என் பதிவுல எங்கய்யா அப்படி சொன்னேன், இப்படி கோத்து வாங்குறிங்களே, எழுதும்போது ஒரு "," குறி முன்னாள் விழுந்துவிட்டது அது தான் உங்களை தவறாக எடுத்துக்கொள்ள வைத்துவிட்டதா?? ஆனாலும் நான் சொன்னது சரியா தவறா னு வேண்டுமென்றால் ஒரு பதிவு போட்டுவிடலாமா??


"ஏங் கேக்கறீங்க, ஒருவேள இதெல்லாம் நீங்க எடுத்த படமா!"

hehe!!!பயப்பிடாதீங்க..... ஏதோ சொந்த தயாரிப்பு என நினைத்தேன் அவ்வளவுதான்!!!!


//பயப்பிடாதீங்க..... ஏதோ சொந்த தயாரிப்பு என நினைத்தேன்// - NoNo.

அப்பாடா... தப்பிச்சேன் !

- ஞானபீடம்.


Post a comment Home Index