« Index | Home | தமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ... » | ஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா... » | தயிர் சாதமும், தந்தூரிச் சிக்கனும் » | ராசாவுக்கு போஸ்ட்டரு ! » | குரு... சிஷ்யா... » | வந்தார்கள்; தின்றார்கள்; சென்றார்கள் » | முள்ளு. » | அதோ அந்த பறவை போல » | சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள் » | கொல், கவனி, செல். » 

01 July 2005 

இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே

அலைபாயாதே!

'மனம் ஒரு குரங்கு' என்று சரியாகத்தான் சொன்னார்கள்; ஒரு நிலையில் தங்காமல், எங்கெங்கும் சுற்றி, அலைபாய்வதே அதன் முழுநேரப் பணியாயிருக்கிறது.

'மனோ வேகம், வாயு வேகம்' என்று சும்மாவா சொன்னார்கள். சில நேரங்களில், நான் இப்படிக் கூட எண்ணுவது உண்டு. அதாவது, 'மனம் ஒரு குரங்கு அல்ல; அது ஆயிரம் குரங்குக்குச் சமானம்'. ஏனெனில், ஒரு குரங்கு, ஒரு நேரத்தில், ஒரு கிளை விட்டு, அடுத்த கிளைக்குத் தாவும். ஆனால் மனமோ, ஒரே நேரத்தில் ஓராயிரம் எண்ணங்களால் அலைபாய்கிறதே.

அதனால்தானோ என்னவோ, மனதைக் கட்டுப் படுத்தத் தெரிந்தவன், உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைக்கத் தெரிந்தவன் என்று சொல்லி வைத்தார்கள். சத்தியமான உண்மை அது. மனதை ஒருமுகப்படுத்தத் தானே 'தியானம்' பயிற்றுவிக்கிறார்கள்.

சிந்தனைய ஒருமுகப் படுத்தி, நன்றாக மூச்சை உள்ளே இழுத்து, சிறிது நேரம் அடக்கி, பிறகு மெதுவாக மெதுவாக, மூச்சை வெளியே விட்டால், சுவாசம் சீரடைகிறது; இரத்த ஓட்டம் சமநிலையடைகிறது. தெளிவான சிந்தனை, ஒளி போல் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது.

இதோ, குளித்து முடித்து விட்டு வந்து, புத்துணர்வோடு அமர்கிறேன்; சிந்தனை ஒரே நிலையில் வைக்கிறேன்; மனதில் எழும் எல்லாவற்றையும், ஒரு பார்வையாளனாக மட்டுமே பார்க்கிறேன்; அவற்றில் என்னை நான் சம்மந்தப் படுத்திக் கொள்ளவில்லை. நான் தனி, என் மனம் தனியாக உணர்கிறேன். ஒரே புள்ளியில் பார்வையை குவிக்கிறேன். பார்வை அங்கேயே நிலை கொள்கிறது. மனமும் பலவித சிந்தனைகளிலிருந்து, ஒவ்வொன்றாக விடுபட்டு, விடுபட்டு தெளிந்த நீரோடை போல சலனமற்றுப் போகிறது. இதோ வந்துவிட்டது. ஆம், அதிகாலை பனி போன்ற வெண்மையில், மல்லிகைப் போன்ற மென்மையில்,
ஆஹா... அற்புதம்;

நான்கு இட்லிகள் !; கூடவே, தேங்காய் சட்னி, கொத்துமல்லிச் சட்னி, தக்காளிச் சட்னி !. பிரமாதம்;

இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே !. அனுபவி !!!

ஆரம்பத்தில படிக்கறப்ப அட! ஞானபோகானந்தா நு நெனைச்சேன்.. கடைசில இப்படி..
அதென்ன ஞான்ஸ், கடந்த 2 பதிவும் சாப்பாடு பற்றியே.. தயிர் சாதம் , தந்தூரி ..இப்போஇட்லி.. சட்னி
நான் தந்த "சாப்பாட்டு சமத்துவ நாயகர்" பட்டத்தை காப்பாத்திகறீங்க.. குட்
நல்ல பதிவு ! :)
வீ எம்


சிறுகதை மாதிரி திடுக் முடிவு


//..அதென்ன ஞான்ஸ், கடந்த 2 பதிவும் சாப்பாடு பற்றியே.. // - கேட்டவர் வீ.எம்.

ஞானபீடம். சொல்வது:

அப்டீன்னா... தயிர்சாத-தந்தூரி சிக்கனுக்கப்புறம், நீங்கள் பார்க்க விட்டுபோனவை,
தமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ...

ஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா...

எண்சாண் உடம்புக்கு, ஒருசாண் வயிரே பிரதானம்!

வீ.எம். வருகைக்கு நன்றி; புனே எப்படியுள்ளது.

- ஞானபீடம்.


//சிறுகதை மாதிரி திடுக் முடிவு // - திடுக்கிட்டவர் குழலி!.

ஞானபீடம் சொல்வது:

இது முடிவல்ல, ஆ....ரம்பம் ! இனியும் தொட...ரும் !!


நன்றி குழலி.

- ஞானபீடம்.


ஞானம் வர வர எங்கியோ போயிட்டீங்கண்ணா!


//ஞானம் வர வர எங்கியோ போயிட்டீங்கண்ணா!// - Moorthi.

அப்டியா.. மெய்யாலுமா... !

தாங்ஸ்பா..

- ஞானபீடம்.


Post a comment Home Index

Links to this post

Create a Link