யாருக்கும் வெட்கமில்லை
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்;
குருடர்கள் உலகில் கண்களிருந்தால் அதுதான் தொல்லையடா;
அத்தனை பழமும் சொத்தைகள் தானே ஆண்டவன் படைப்பினிலே;
அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை;
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் எமனுக்கும் வெட்கமில்லை.
*********************
படம் : யாருக்கும் வெட்கமில்லை
இசை : V.குமார்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : K.J.ஜேசுதாஸ்
*********************
ஊருக்கும் வெட்கமில்லை - இந்த
உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை - இதிலே
அவளுக்கு வெட்கமென்ன
ஏ சமுதாயமே
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்களிருந்தால்
அதுதான் தொல்லையடா
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
அத்தனை பழமும் சொத்தைகள் தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப் பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உங்கள்
மார்பினைக் காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
அப்பன் தவறு பிள்ளைக்குத் தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே - அந்த
சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை
****** ****** ****** ******
குருடர்கள் உலகில் கண்களிருந்தால் அதுதான் தொல்லையடா;
அத்தனை பழமும் சொத்தைகள் தானே ஆண்டவன் படைப்பினிலே;
அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை;
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் எமனுக்கும் வெட்கமில்லை.
*********************
படம் : யாருக்கும் வெட்கமில்லை
இசை : V.குமார்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : K.J.ஜேசுதாஸ்
*********************
ஊருக்கும் வெட்கமில்லை - இந்த
உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை - இதிலே
அவளுக்கு வெட்கமென்ன
ஏ சமுதாயமே
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்களிருந்தால்
அதுதான் தொல்லையடா
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
அத்தனை பழமும் சொத்தைகள் தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப் பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உங்கள்
மார்பினைக் காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
அப்பன் தவறு பிள்ளைக்குத் தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே - அந்த
சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை
****** ****** ****** ******
ஓ... இத முழு அளவுல ஆரம்பிச்சிட்டீங்களா... ஒரு காலத்துல பஸ்ஸ்டாண்டு பக்கத்துல நாலணாவுக்கு கிடைச்ச சினிமா பாடல் சமாச்சாரம் இப்ப இண்டர்நெட் அளவுல வந்துடுச்சி... என்னே ஒரு விஞ்ஞான முன்னேற்றம்.. எல்லாம் பிரமை... எல்லாம் மாயை...
முகமூடி { நீங்கள் காலமெல்லாம் தேடி அலைந்த லிங்க் கைக்கெட்டும் தூரத்தில்}
Posted by முகமூடி | Sun Jul 03, 11:06:00 am (IST)