« Index | Home | இது மிஷின் யுகம் » | அ... சிங்கமொன்று புறப்பட்டதே... ! » | நான் ஒரு 'சைக்கோ' வா... » | பயங்கரத் தொடர் தாக்குதல்கள் » | ஞானும், அப்துல்கலாமும் பின்னே ஜோதிடபூமியும்! » | பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்... » | பதவி படுத்தும் பாடு... » | யாருக்கும் வெட்கமில்லை » | சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்... » | சும்மா அலேக்கா பறக்குது பாரு காரு! » 

19 July 2005 

ஒரு பதிவும் பின்னூட்டமும்...

Image hosted by Photobucket.com
திருக்குறள் பதிந்த

வள்ளுவப் பெருந்தகைக்கு

ஒளவையார் இட்ட பின்னூட்டம்:






Image hosted by Photobucket.com
"கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி
குறுகத் தரித்த குறள்"

நல்லவேளை... அந்தக் காலத்திலே போலி ஒளவையாரெல்லாம் பின்னூட்டமிட்டு திரியலை போலருக்கு! இல்லாட்டி திருவள்ளுவர் கதை கந்தலாகிருக்குமே!?!


மாயவரத்தரே,

இதுவும் ஒரு பின்னூட்டம்தான், போலி இல்லை ஆனால் ஔவையின் பின்னூட்டத்தை பார்த்தபின் எழுதியதென்பது மட்டும் புரிகிறது

"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்"

இந்த பின்னூட்டம் கொடுத்தது யாரென்பது எனக்கு மறந்து போச்சு


குமரேஸ், அந்தப் பின்னூட்டத்தைக் கொடுத்தது இடைக்காடர் என்ற புலவர். இதைப் போலி என்று சொல்ல முடியாது.


ராகவன்,

"போலி இல்லை ஆனால் ஔவையின் பின்னூட்டத்தை பார்த்தபின் எழுதியதென்பது மட்டும் புரிகிறது"

என்றுதானே சொன்னேன், போலி என்று சொல்லவில்லையே, சிக்கலில் மாட்டிவிடவேண்டாமே


போலியா, உண்மையா?

கடுகா, அணுவா?

அவ்வையாரா, இடைக்காடரா?

Google-ஆண்டவன் துணையால் கிடைத்த விவரங்கள் கீழே!

*** *** *** *** ***

''அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள் '' - Link

*** *** *** *** ***

"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி திருகத்தறித்த குறள்"
- Link

*** *** *** *** ***

"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி..." - Link

*** *** *** *** ***

"Poetess Avaiyar compares each couplet to a tiny mustard seed stuffed with seven seas of knowledge!"
"கடுகை துளைத்தேழு கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்" - Link

*** *** *** *** ***

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" - Link

*** *** *** *** ***
ஓர் அறிவிப்பு: அவ்வையாரோ, இடைக்காடரோ எங்கிருந்தாலும், உடனடியாக இந்த ஞானபீடம் பதிவிற்கு வருமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்; மீண்டும் அறிவிக்கிறோம், அவ்வையாரோ, இடைக்காடரோ எங்கிருந்தாலும், உடனடியாக இந்த ஞானபீடம் பதிவிற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்; இந்த 'கடுகு' மேட்டர் 'மலை' மாதிரி ஆவதற்கு முன் அவ்வையாரோ, இடைக்காடரோ நேரடியாக வந்து விளக்கம் அளிக்கும் படியாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நன்றி.
*** *** *** *** ***
*** *** *** *** ***

தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, இங்கு வருகை தந்த மற்றும் அதோடு இல்லாமல் இன்னும் சிறிது அதிக நேரம் ஒதுக்கி பின்னூட்டமும் அளித்த மாயவரத்தான்..., inomeno, குமரேஸ், G.Ragavan, மற்றும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் அபிமான, Agent 8860336 ஞானபீடம்.
*** *** *** *** ***
*** *** *** *** ***


அப்படின்னா திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டுக்கு பாரதி தந்த பின்னூட்டம்

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு"


ஞானபீடம் அவர்களே,

(உங்களுடைய மின்-ஓலை கிடைத்தது)

உங்கள் அறைகூவலை கேட்டு அவர்கள் இருவரும் வருவதற்குள் , 'கடுகு' மேட்டர் 'மலை' மாதிரி ஆவதற்கு முன், நான் தற்காலிக விளக்கம் அளிக்க விரும்புகிறேன். கடுகு மற்றும் அணு இரண்டையுமே ஒன்றாக வைத்துக்கொண்டு, ஒரே சூழலில், ஒரே அளவில் பயன்படுத்தி, ஒரே மாதிரியான சேதனை (வத்தக்குழம்பு அல்லது காரக்குழம்பு) செய்வதன் மூலம் நாம் கடுகு அல்லது அணு பெரியது/நல்லது என்ற முடிவினை அடையலாம், இதன்மூலம் அவ்வையாரோ அல்லது இடைக்காடரோ சொன்னது மிகமிக சரியானது என்று அறியலாம். நான் வேண்டிய அளவு கடுகு ஏற்பாடு செய்கிறேன், நீங்கள் முடிந்த அளவு அணுவினை கொண்டுவந்தீர்கள் என்றால் நாம் இச்சோதனையை செய்யலாம்.

நம்ம பிரதமரிடம் பெரியண்ணர், நல்ல விடயங்களுக்கு அணுவை பயன்படுத்துவதற்கு அனுமதியளித்ததும் எமக்கு நல்லதாகபோய்விட்டது. நமது "அணு" குழம்பிற்கு தடை வராது.

மாயவரத்தரை, அவர் மறுக்காத பட்சத்தில், இரண்டையும் ருசி பார்த்து தீர்ப்புக்கூற கேட்கலாம்.


அணுவை சட்டப்படி கொண்டுவருவதற்கு செய்யவேண்டிய formalities நிறைய இருப்பதாலும், ஏற்கனவே அரசின் திட்டங்களுக்கு தேவையான அணு பற்றாக்குறை இருப்பதாலும், நமக்கு balck market-ல் வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, என் உயிர்த்தோழன் ஒசாமா பின் லேடனுக்கு, புறாக்காலில் கட்டி கடிதம் அனுப்பினேன். வல்லூறு மூலம் பதில் வந்தது அங்கிருந்து, புறாக்கறி அருமை என்று! கூடவே ஒரு பின்குறிப்பும் இருந்தது; ரொம்பப் பசிக்குதுன்னு.!!

ஆனந்த விகடனில் கேட்கலாம் என்று இருக்கிறேன்; அவர்கள் ஏதோ அணு, அக்கா, ஆண்ட்டி புரொக்ராம் நடத்துறாங்கன்னு கேள்வி; கேட்டுப்பாக்கனும், கெடச்சா வெச்சுக்குவோம், குழம்புக்கு ;-)

- ஞானபீடம்.


to Gopi

சரிங்க, எல்லாருமே வள்ளுவருக்கே பின்னூட்டம் போட்டா எப்டி? வள்ளுவரு, யாருக்காச்சும் பின்னூட்டம் போட்றுக்காரான்னு பாத்துச் சொல்லுங்க :-)

- ஞானபீடம்.


//மாயவரத்தரை, அவர் மறுக்காத பட்சத்தில், இரண்டையும் ருசி பார்த்து தீர்ப்புக்கூற கேட்கலாம்.//

ஆஹா... கெளம்பிட்டாங்கய்யா.. கெளம்பிட்டாங்கய்யா..!

அது சரி.. நீங்க ஒரு முடிவுக்கு வந்து எல்லாத்தையும் வாங்கி குழம்பு செஞ்சு முடிச்ச அப்புறம் சொல்லி அனுப்பு(வா)ங்க.. நான் வந்து கலந்துக்குறேன்.!

(அது சரி... அது வெஜிடேரியன் குழம்பா... நாந்வெஜ்-ஜா?!)


// இடைக்காடரோ எங்கிருந்தாலும், உடனடியாக இந்த // என்னப்பா, எதுக்கு கூப்பிட்ட.. என்ன விஷயம்...


வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு அவ்வையார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். நீர் சொல்வது எந்த அவ்வையாரை.

படத்தைப் பார்த்தால் 'அவ்வையார்' சுந்தராம்பாள் படத்தை போட்டு இருக்கிறீர். பின்னூட்டவாதியை ஆள் மாறாட்டம் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். விட்ட திருக்குறளுக்கு இன்னொரு பின்னூட்டம் விட்ட பாரதியார்ன்னு ஷாயாஜி ஷிண்டே படத்தை போடுவீங்க போல :-))))

மற்றபடிக்கு இந்த பதிவின் கான்சப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு.


மாயவரத்தானுக்கு:
ஒருபுறம் பார்த்தால்... கடுகு-வெஜ் குழம்பு
மறுபுறம் பார்த்தால்... அனு!- நாந்வெஜ் ;-)!!!!

குழம்பில் ரெண்டு வகை, சைவமுண்டு.. அசைவமுண்டு..
ரெண்டில் நீ எந்த வகை கூறு!.

*** *** *** *** ***

முகமூடிக்கு:
ஆ..ங்.. ரெண்டு காட ரோஸ்ட் வேணும், கெடக்குமா?! :-)

*** *** *** *** ***

அல்வா.சிட்டி.விஜய்-க்கு:
//ஆள் மாறாட்டம்..//

கல்லைக் கண்டால் கடவுளைக் காணோம்...
கடவுளைக் கண்டால் கல்லைக் காணோம்...

அப்படித்தான்.. இதுவும்...
அவ்வையைக் கண்டால் kps காணோம்...
kps-ஐக் கண்டால் அவ்வையைக் காணோம்...!! :-)

மற்றபடிக்கு, நன்றி!
.
*** *** *** *** ***

-Agent 8860336 ஞானபீடம்


This comment has been removed by a blog administrator.


mayavaraththaan wrote:
//வெற்றிகரமான நூறாவது நாள் கொண்டாட்டும் சந்திரமுகி திரப்படத்தை..//

Please refrain from such kind of posts in the future. -nirvaaki.!


Test comment posting!
Posting test comment!!
comment testing post!!!


//நல்லவேளை... அந்தக் காலத்திலே போலி ஒளவையாரெல்லாம் பின்னூட்டமிட்டு திரியலை போலருக்கு! இல்லாட்டி திருவள்ளுவர் கதை கந்தலாகிருக்குமே!?!// -சொன்னது மாயவரத்தான் .

! ! ! ! ! ! ! !

- ஞானபீடம்.


Post a comment Home Index