« Index | Home | தலையெழுத்தென்ன மொழியடா... சர்வேஸா » | உளவுத்'துரை' » | மீண்டும் ஒரு திருவிளையாடல் » | நாதந் தானது நாரதர் வீணையோ » | ஓ... ஒரு தென்றல்... புயலாகி வருதே!!! » | மாயவரத்தானுக்கு ஒரு எச்சரிக்கை! » | ஒரு பதிவும் பின்னூட்டமும்... » | இது மிஷின் யுகம் » | அ... சிங்கமொன்று புறப்பட்டதே... ! » | நான் ஒரு 'சைக்கோ' வா... » 

05 August 2005 

ஆலோசனை ப்ளீஸ்

நம்ம ஃபிரண்டு ஒருத்தரு என்கிட்ட அபிப்ராயம் கேட்டாரு. என்னால ஒடனே ஒரு முடிவுக்கு வர முடியல; ஏன்னா இது கொஞ்சம் சிக்கலான மேட்டர். அதனால இத இங்க நம்ம வலைப்பதிவர்கள்கிட்ட கேட்டா என்னன்னு தோணுச்சு. முடிஞ்சவங்க ஆலோசன சொல்லுங்களேன் ப்ளீஸ்.

விஷயம் இதாங்க:

நம்ம பிரண்டோட தம்பி ஒருத்தரு வெளிநாட்ல வேலைல இருக்காரு; ஓரளவுக்கு நல்ல சம்பளம் வாங்கறாரு. மனைவி பிள்ளையோட வெளிநாட்ல இருக்காரு. லீவுல வருஷத்துக்கொரு ரெண்டு தபா ஊர்பக்கம் வருவாரு. அவரு டிப்ளமோ படிச்சவரு. இப்போ B.E. படிக்க நெனக்கிறாரு. காரணம் promotion & நெறய டப்பு கெடக்குமாம். அதுனால வெளிநாட்டு வேலய வுட்டுட்டு ஊர்ப்பக்கம் வந்து part-time B.E. படிச்சுக்கிட்டே, எதோ கெடக்கிற ஒரு வேலய செய்யலாம்னு இருக்காராம் (கைக்காசு கரஞ்சாலும் கவலப்படலயாம்!). அத முடிச்சுட்டு அப்புறமா போயி வெளிநாட்ல வேல பாக்றதா முடிவு பண்ணி, அண்ணன்கிட்ட சொல்லிருக்காரு.

அண்ணன் நம்மலாண்ட கேட்டாரு. என்னாபா இவன் இப்டி கேக்கறான், நாமெல்லாம் எதோ இருக்கறத வெச்சு பொழப்ப ஓட்றோம்; இவன் என்னடான்னா இருக்கறத வுட்டு பறக்கறத புடிக்கப்போறேங்கறான்; குடும்பம் குட்டி ஆச்சேன்னு கவல இல்லாம திரும்பி காலேஜ் போறானாம். இருக்கற காசயும் உட்டுப்புட்டு, வேலயும் இல்லாம நடுத்தெருவுக்கு வந்தா, நாம தானே தாங்கனும். இப்ப இவன என்ன செய்யச் சொல்றது. பேசாம் கெடக்கிற கூலிய வெச்சு பொழப்ப பாக்கச்சொல்றதா, இல்லே, சரிப்பா ஒன்னோட இஷ்டம்னு வந்து காலேஜ் போகச்சொல்றதா?. எப்டியும் ஒரு 4 வருஷமாச்சும் படிக்க ஆவுமே. அப்பால இவனுக்கு இதே மாதிரி வேல ஒடனே கெடக்குமா, சம்பளம் வருமா. பொட்டப்புள்ளய வேர பெத்துருக்கான். நாலு காச சேக்கரத வுட்டுப்புட்டு, ஏம்பா இவன் இப்டி இருக்கான்- அப்டீன்னு நம்ம கையில கேட்டாரு அண்ணங்காரு.

(ஊருக்கு வர்றப்ப எல்லாம் நமக்கு ஒரு டி-சர்ட் கொண்டு வருவாப்ல அந்த தம்பி).யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு, இதப் பதிஞ்சிருக்கேன்; கொஞ்சம் பொறுமையா பதில் சொன்னாக்கூட போதும்; ஒன்னும் அவசரமில்ல. முடிஞ்சவங்க ஆலோசன சொல்லுங்களேன் ப்ளீஸ்.

வேல கெடக்கிறதே குதிரக் கொம்பா இருக்கற காலத்துல போயி இந்தத் தம்பி, நல்ல வேலய உடுதேன்னு எனக்கு ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும், படிக்கனும்-ங்கற புள்ளக்கி தட சொல்ல மனசும் வரமாட்டேங்குது.


there will be part time courses and other courses at the universities.he may try for them.


thanks Anonymous,
ya, he could join ptbe, but the thing is, he has to leave his overseas job and return india, for studies. how soon he would get a job in india is uncertain and the salary in rupees!

something like,
to eat the cake and have it too !


அய்யா ராசா,

ரொம்ப பய, சென்னை ராயபுரத்துல சர்டிபிகேட்டு அடிச்சி வாங்கி போயிதான் வேலை பாக்குறாய்ங்கெ. அது மேரி நெறய நடக்குது. ஆனா நான் அத ஆதரிக்கலை. அவர் இருக்கும் நாட்டிலே கூட பி.இ அஞ்சலில் படிக்குமாறு அண்ணாமலை
பல்கலை திறந்திருக்கலாம். அங்கு சேர்ந்து படிக்கச் சொல்லுங்கள். அல்லது தனிமடலிடுங்கள் ஆலோசனை தருகிறேன். mmoorthee at gmail dot com.


//அவர் இருக்கும் நாட்டிலே கூட பி.இ அஞ்சலில் படிக்குமாறு அண்ணாமலை
பல்கலை திறந்திருக்கலாம்//

மூர்த்தி, அண்ணாமலையில் அஞ்சல் வழி பொறியியல் இருக்கிறதா?


Shift >F8<

;-))


This comment has been removed by a blog administrator.


அவர் எண்ணப்படியே படிக்கட்டுக்கும்!! படிக்கிறத்துக்கு வயது ஒருக்காலும் தடையாக இருக்கக் கூடாது!!
எவ்வழவுக்கு படிக்கிறோமோ அவ்வளவுக்கும் நன்மையே!! உலகம் பெரியது!! நிச்சயம் படிப்புக்கு தகுந்த வேலை கிடைத்தே தீரும்!!! அவரின் முடிவுக்கு மரியதை தெரிவுத்து அவரின் முயற்சிக்கு வாழ்து கூறுவதுடன் ஆதரவும் அளிப்பதுதான் பண்பு என நான் நினைக்கின்றேன்!!!


உங்க பிரெண்டுங்கிறது உங்க (சொந்த) அண்ணன் தானே?!


gnans,
U didnt say anything abt what is his diploma and what is he working as now and his domain.
but from what u have said, understood that he is earning good at onsite for more than 4 years. definetly would have earned well and also in terms of experience , he should be okay.

If he is in to IT industry, then 4 years of onsite experience is really good enough to get a job in a reputed concern here with good salary. Financially he might not have to struggle much.

on the other hand, if his intention is to do higher studies, not necessarily he should travel to india. he could continue in his job and study from there as well.

ask your friend to check if his intention to travel back india is just cos of his studies or some other reason which ur friend is not aware off.

V M


by the way enna photo maathiteenga?? ramki anna kitta permission vaanganeengla?


இது அவரின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம்... நல்லதோ கெட்டதோ அவர் மட்டுமே முடிவு எடுக்க வேண்டும். அவரின் குடும்பம் ஆலோசனை சொல்லலாம். இது பற்றி "யாரோ" நாம ஆலோசனை சொல்வது - அதுவும் மிகக்குறைந்த தகவலின் அடிப்படையில் - சரியில்லைன்னு அப்பீட்டு ஆகிக்கிறேன்...

நம்மாளு வூட்டுக்கு வந்திட்டு விளம்பரம் செய்யலேன்னா எப்படி....

இன்றே பங்கு பெறுங்கள்... சிறுகதைப்போட்டி


Post a comment Home Index