« Index | Home | எனர்ஜி இண்டிபெண்டன்ஸ் Energy Independence » | பயிற்றிப் பல கல்வி தந்து... » | சிறுகதை - பனி விழும் மலர்வனம்... » | ஆலோசனை ப்ளீஸ் » | தலையெழுத்தென்ன மொழியடா... சர்வேஸா » | உளவுத்'துரை' » | மீண்டும் ஒரு திருவிளையாடல் » | நாதந் தானது நாரதர் வீணையோ » | ஓ... ஒரு தென்றல்... புயலாகி வருதே!!! » | மாயவரத்தானுக்கு ஒரு எச்சரிக்கை! » 

19 August 2005 

சில நேரங்களில்... சில விஷயங்கள்...

நா என்ன பெர்சா தப்பு பண்ணிட்டேன்... அவன் செஞ்சதுதான் தப்பு, அதுக்கு நா பதில் செஞ்சேன் அவ்ளோதான்...

சரி, நீ செஞ்சது தப்பில்ல... ஆனா...

ஆனா.. ஊனா எல்லாம் எனக்குத்தேவயில்ல...

கூல்டவுன்... கூல்டவுன்...

நான் எப்பவும் கூல்தான்...

அப்போ நான் சொல்றதக் கொஞ்சம் கேளு...

சொல்லுங்க...

அவந்தான் தப்பு செஞ்சான்... நீ திரும்ப அதுக்கு பதில் செஞ்சே... ஒனக்கு அது சரி... அவனுக்கு நீ செஞ்சது தப்பா தோணுது...

அதுக்கு... என்னய என்ன பண்ணச் சொல்றீங்க...

அவன் அப்டித்தான்.. கொஞ்சம் அடாவடி... அவுங்கப்பாவுக்கு செல்வாக்கு அதிகம்... அதான்...

அவன் ஆட்டத்த என்கிட்ட காட்ட வேணாம்... காட்டினா... நாங் காட்றத தாங்கமாட்டான்... பணம்... எல்லாம் பணத்திமிரு...

அதான்... அவன்கிட்ட இருக்கு... ஆடுறான்... பெரிய மனுஷங்க தொடர்பு உள்ளவங்க அவுங்க... என்ன பண்றது... அவங்க தயவு நமக்கு வேணும்... ஆனா அவனுக்கு நம்ம தயவு தேவயில்ல... நாமதான் கொஞ்சம்....

என்னால அப்டி இருக்க முடியாது... சீவிடுவேன்...

சொல்றதக் கேளுப்பா... இந்த ஒருவாட்டி கேளேன்...

ம்...

சில விஷயம் நமக்கு சரின்னு பட்டாலும், சில சமயத்துல, அந்தச் சரிய, செய்யாம இருக்கறதுதான் சரி.


Image hosted by Photobucket.com

கரைப்பார் கரைச்சா கள்ளும் (கல்லும்) கரையும்


துஷ்டனைக் கண்டால் தூர விலகு!

(இந்த blog விதிவிலக்கு!!!!)

கணேஷ், நீங்கதானே திகார்-ல இருந்து சமீபத்துல வந்தது ;-)))


ரகசிய ஏஜென்ட் ஞானபீடம் என்ன நடக்குது இங்கே ஒன்னுமே புரியலை உலகத்திலே


ஆடியன்ஸை எதிர்பார்த்து குயில் கூவவில்லை; மயில் ஆடவில்லை!

யாருக்கும் புரியவைப்பதற்காய் நான் எழுதிக் கொண்டிருக்கவில்லை!!!

என் எழுத்தில் ஒரு கர்வம் தெரிகிறது என்று கூறி என்னை ஒரு பெரிய்ய்ய எழுத்தாளனாக்கி விடாதீர்கள் ;-)))


எனக்கு இந்த பதிவுக்கு கருத்து போடாம இருப்பது சரினு படுது.... ஆனா
சில விஷயம் நமக்கு சரின்னு பட்டாலும், சில சமயத்துல, அந்தச் சரிய, செய்யாம இருக்கறதுதான் சரி. ( கருத்து உதவி : ஞான்ஸ்)
அதானால இந்த கருத்தை இங்கே பதிக்கிறேன் !!

வீ எம்


to VM

பதிவுகள்....
கமெண்டுகள்...
பதில் கமெண்டுகள்...

சக்கரம் வெகுதூரம் உருண்டுவிட்டது!!


பாவம் ஞானபீடம்... இந்த மாதிரி அவருக்கு ஆகும்னு எனக்கு முன்னமே தெரியும்


ஞானபீட (அவர செல்லமா நாம அப்படித்தான் கூப்பிடறது... பொருத்தமான செல்ல பேருன்னு எல்லாம் சொல்றாங்க ஹிஹி)

நீர் சொன்னதா ஒரு பின்னூட்டம் இருக்கே... உமக்கு ஏன்யா இந்த வேலை


This comment has been removed by a blog administrator.


ஹி ஹி தமாசா ஒரு பின்னூட்டமிட்டேன் அடிதடி நடக்கக்கூடிய அபாயமிருப்பதால் அழித்துவிட்டேன்

நன்றி


சம்பவாமி யுகே யுகே!

நடக்கவேண்டியவை அந்தந்த காலங்களில் நடந்தே தீரும்!!

எல்லாம் நன்றாகவே நட {ந்தது} /{க்கிறது} / {க்கும்}!!!


குழலி நீங்கள் அழித்த பின்னூட்டத்தை எனது inbox-ல் படித்தேன்;

உங்கள் ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேறும்.


முகமூடி, நீர் சொன்ன அந்த பின்னூட்டத்தைப் பார்த்தேன்!

திருமால் பெருமைக்கு நிகரேது!!


ஒரு மண்ணும் புரியாத இந்த வெட்டி பதிவுல கிடக்கிற அழகான ஒரு சில கருத்துக்கள தொகுத்து ஒரு நல்ல பதிவா முகமூடியும், இந்த வெட்டி பதிவ சர்காஸ்டிக் முறையில கிண்டலடிச்சி சின்னவனும் தாங்க அப்படீன்னு குழலி கேட்டு இருந்தாரு...

சின்னவன் உங்க மேல குழலிக்கு அப்படி என்ன கோபமோ யாமரியோம்... என் எழுத்தை புகழ்ந்ததற்கு நன்றி குழலி...

நான் கேட்காமலேயே, குழலி அழித்த பின்னூட்டத்தை எனக்கு தனி அஞ்சலில் வெளிச்சம் போட்டு காட்டிய ஞானபீடத்துக்கு நன்றி..

நாராயண... நாராயண...


கலி முத்திவிட்டது!


பிதாவே, இவர்கள் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்; எனவே இவர்களை மன்னியும்! - இயேசு.


This comment has been removed by a blog administrator.


கலி முத்திவிட்டது என்று தத்துவம் பேசுவதன் மூலம் உண்மை எனும் முழு பரங்கிக்காயை காற்றில் மறைக்க முடியாது... எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய மின்னஞ்சலை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்ட முடியுமா என்று பகிரங்கமாக சவால் விடுகிறேன் (வெளிப்படுத்தினால், எனது கட்சி தொண்டர் ஒருவர் தனது தொண்டர் பதவியை ராஜினாமா செய்வார் என்று உறுதி கூறுகிறேன்...)


// பிதாவே, இவர்கள் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்; எனவே இவர்களை மன்னியும்! - இயேசு. //

புதிய சாப்ட்வேர் ஏற்பாடு ::

replace இவர்கள் with ஞானபீடம்


replace இவர்கள் with ஞானபீடம்

என்று நான் சென்ற முறை இட்ட பின்னூட்டத்தை ஏன் அழிக்க வேண்டும் என்று ஞானபீடத்தை பகிரங்கமாக கேட்கிறேன்


ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க

http://ramsanjay.blogspot.com/2005/08/blog-post_112441101829335762.html


Small World!


இன்னள ஞான் ஒரு சினிமா கண்டு, ஆசியாநெட் சானலிலெ. நம்மட மம்மூக்கா-விண்ட பிலிம்மானு. அ பிலிம்மில ஒரு சீனு; revenge எடுக்கான் வேண்டி, மம்மூக்கா, வில்லன் கோஷ்டிய தேடிப் போயி, அயாளு மேல பெட்ரோல ஊத்தி... அடிபொலி சீனு.

நம்மட இன்னொசண்ட் அங்கிளு மம்மூக்காவுக்கு இங்கென ஒரு அட்வைஸு செய்ததானு, இவிடெ ஞான் போட்டிருக்கின்ன பதிவு!.

பட்சே, வளர செரிய்யதாயிட்டு எண்ட பங்கு இதிலுண்டு கேட்டோ!


ஞானபீடம் அந்த பின்னூட்டத்தை மீண்டும் போட்டுவிடுங்கள், இந்த மூகமூடி இதை வைத்து ஒரு பெரிய கலவரத்தை உண்டாக்கிவிடுவார் போல


குழலி, கூலா இருங்க!
முகமூடி, ச்சொம்மா உதாரு உட்றாரு! இதெல்லாம் வெறும் ஓலப்பட்டாசு... இதுக்குப் போயி நீங்க வேற...

ஹும்... நாங்கல்லாம் அணுகுண்டையே திரியக் கடிச்சு கையில வெச்சிக்கிட்டே 8 வரக்கும் ஒன்னு ரெண்டு எண்னிப்புட்டு, அலாக்கா தூக்கி எரியற பரம்பரயாக்கும்!
எங்கள்டயேவா...!!
:-)))))

(எச்சரிக்கை: அந்த அணுகுண்டு திரியைப் பத்த வெச்சிருக்கக் கூடாது-ங்கறது ரொம்ப முக்கியம், ஆமா!)


ஞானபீடம்.... நீர் தமிழ் பேசினாலே புரிய மாட்டேங்குது... இதுல எதுக்குய்யா காஷ்மீரி எல்லாம் பேசறீரு...

குழலி சின்னவன் எழுத்தை நீங்க சர்காஸ்டிக் எழுத்து என்று சொன்னது உண்மையா இல்லையா... வேற என்னமோ வேற கேவலமா சொல்லியிருந்தீங்க... அது எனக்கு சரியா புரியல. எனக்கு என்ன புரியிலன்னா, சின்னவன் மேல உங்களுக்கு அப்படி என்ன கோவம்..

அணுகுண்டுக்கு திரியே கிடையாதுன்னு யாராவது இந்த சீனி வெடிய அணுகுண்டுன்னு நினைச்சுகிட்டு இருக்குற பசங்களுக்கு சொல்லுங்கப்பா...


நாங்கள்லாம் பல பாஷை தெரிஞ்ச ஆளுங்க!

இதத்தான் வள்ளுவர்,
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் Syrup-னு சொல்லியிருக்காரு!
எவ்ளோ சர்பத் கெடக்குது தெரியுமா!


//குழலி சின்னவன் எழுத்தை நீங்க சர்காஸ்டிக் எழுத்து என்று சொன்னது உண்மையா இல்லையா...//
யோவ் முகமூடி சர்ரியலிஸ்டிக் அப்படினு சொன்னபிறகு ஒரு எதுகை மோனைக்காக சர்காஸ்டிக்னு எழுதினேன்யா, சும்மா ஒரு தமாசுக்கு எழுதினா இந்த கிண்டு கிண்டுறியே, அய்யா ஞானபீடம் அந்த பின்னூட்டத்தை கொஞ்சம் போட்டுவிடுங்களேன் இந்த முகமூடியோட நாரதர் வேலை தாங்கமுடியலை. அப்படியே இந்த சுட்டிக்கு போய் பாருங்களேன் http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_20.html


வேண்டாம் குழலி,

அதைப்போட்டால் பிரச்சினை இன்னும் தீவிரமாகிவிடும்;

முகமூடி பற்றி நீங்கள் எழுதியதைப் படிக்க என்னாலேயே முடியவில்லை என்னும்போது....

வேண்டாம்... போட்டால் பிரச்சினை தீப்பற்றி எரியும்... எனவே போடமாட்டேன்!!!


Post a comment Home Index

Links to this post

Create a Link