« Index | Home | சில நேரங்களில்... சில விஷயங்கள்... » | எனர்ஜி இண்டிபெண்டன்ஸ் Energy Independence » | பயிற்றிப் பல கல்வி தந்து... » | சிறுகதை - பனி விழும் மலர்வனம்... » | ஆலோசனை ப்ளீஸ் » | தலையெழுத்தென்ன மொழியடா... சர்வேஸா » | உளவுத்'துரை' » | மீண்டும் ஒரு திருவிளையாடல் » | நாதந் தானது நாரதர் வீணையோ » | ஓ... ஒரு தென்றல்... புயலாகி வருதே!!! » 

20 August 2005 

வேலுண்டு... வினையில்லை...

Image hosted by Photobucket.comஞானப்பழம் வேண்டி, பழனிமலை கொண்டவா...
ஞானபண்டிதா...
சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று அவ்வையிடம் கேட்டவா...
அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா...
முத்தமிழ்க் கடவுளே... முத்துக் குமரா...




=== *** === *** === *** ===

அழகெல்லாம் முருகனே

அழகெல்லாம் முருகனே ...... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ...... தெய்வமும் முருகனே

பழஞானப் பசியாலே ...... பழநிக்கு வந்தவன்
பழமுதிர்ச்சோலையிலே ...... பசியாறி நின்றவன்

...... பசியாறி நின்றவன்

அழகெல்லாம் முருகனே ...... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ...... தெய்வமும் முருகனே

குன்றெல்லாம் ஆள்பவன் ...... குகனாக வாழ்பவன்
குறவள்ளிக் காந்தனவன் ...... குறிஞ்சிக்கு வேந்தனவன்
பூவாறு முகங்களிலே ...... பேரருள் ஒளிவீசும்
நாவாறப் பாடுகையில் ...... நலம்பாடும் வேலனவன்

அழகெல்லாம் முருகனே ...... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ...... தெய்வமும் முருகனே

=== *** === *** === *** === *** ====

கருணை முகங்கள்

கருணை ...... முகங்கள் ...... ஓராறு
காக்கும் கரங்களோ ...... ஈராறு
முருகன் ...... வாழும் ...... வீடாறு
முகம் பார்த்து ...... இரங்க வேறாரு

கந்தன் ......
கருணை ...... முகங்கள் ...... ஓராறு

துணை என்று ...... ஐயனின் வடிவேலை
தொழுவதன்றி வேறென்ன வேலை
வினையை ...... தீர்ப்பது ...... குகன் வேலை
வேலைப் போற்றுதல் ...... நாவின் வேலை

கருணை ...... முகங்கள் ...... ஓராறு

அடியார்கள் ...... அகமே அவன் கோயில்
அன்பே ...... ஆலயத் தலைவாயில்

குடியாய் ...... இருப்பான் ...... குறை தீர்ப்பான்
குமரன் நம் குடியை வாழவைப்பான்

கந்தன் ......
கருணை ...... முகங்கள் ...... ஓராறு
காக்கும் கரங்களோ ...... ஈராறு
முருகன் ...... வாழும் ...... வீடாறு
முகம் பார்த்து ...... இரங்க வேறாரு

=== *** === *** === *** === *** ====

Image hosted by Photobucket.com

இங்கு மைனஸ் குத்து விடுபவர்களை.... முருகா, நீ உன் வேலால் குத்தாதிருப்பாயாக! ஆமென்.


பழம் நீ யப்பா, ஞானப் பழம் நீ யப்பா


முருகா, முருகா!!

'சுப்ரமணிய சாமி' வீட்டிலேயே சலசலப்பு உண்டாக்க நினைக்கிறார்களே!!

ஹும்... கலி முத்திருச்சு!!


படங்கள் மிகவும் அருமை... நன்றி.


வருகை தந்த மற்றும் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.


வெற்றி வேல் முருகனுக்கு....
அரோகரா...


ஆபாச உடை, முருகனுக்கு வயசு போன்றவை கடவுள் நம்பிக்கை கொண்ட என் போன்றவரின் உணர்வுகளை புண்படுத்தும் பின்னூட்டங்களாகும். இந்து மதத்தை திட்டுவதை குறிக்கோளாக கொண்டவரின் பதிவுகளுக்கு நான் செல்வதில்லை. ஆனால் உங்கள் பதிவில் இது போன்றவை வருவது வருத்தற்குறியது.


This comment has been removed by a blog administrator.


கமெண்ட் இடும் முன், இந்தப் பதிவின் முதல் கமெண்டைப் படிக்கவும்!


அரசு, நம்பிக்கைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். இது போன்ற பதிவுகள் விளையாட்டுப் பேச்சுகளுக்கும் கருத்துகளுக்கும் அல்ல. இது பொது விவாதமாக இருந்தால் உங்கள் கருத்துகளை நீங்கள் இடலாம். ஆராக்கியம் மற்றும் ஆரோக்கியமுள்ளவர் வரிசையில் சேர்ந்து விடாதீர்கள்.

முகமூடி : உங்கள் பதிவும் சற்றுத் தரம் குறைந்தே இருக்கிறது என்பது எனது கருத்து.

ஜிகிடி......உங்களுக்கு இப்பொழுது தேவையானது நாகரீகம். அவ்வளவே.


ராகவன், இறை உணர்வை புண்படுத்தும் நோக்கமில்லை. வருந்துகிறேன். விளையாட்டாக எழுதியது. அழித்துவிட்டேன்.


நன்றி முகமூடி. உங்கள் பணிவை நான் மதிக்கிறேன்.


என்ன ஞான்ஸ், திடிர்னு பக்தி மார்க்கம்??? ஏதாச்சும் விசேஷ காரணம்?

வீ எம்


//திடிர்னு பக்தி மார்க்கம்??? ஏதாச்சும் விசேஷ காரணம்?//- VM asked.

விசேஷம் ஒன்றுமில்லை!
தோண்றியது, எழுதினேன்!! அவ்வளவுதான்!

முருகக் கடவுள் எனக்கு இஷ்டமானவர்!


Post a comment Home Index