« Index | Home | வனிதாவணி... இளமோகினி... வந்தாடு... » | வேலுண்டு... வினையில்லை... » | சில நேரங்களில்... சில விஷயங்கள்... » | எனர்ஜி இண்டிபெண்டன்ஸ் Energy Independence » | பயிற்றிப் பல கல்வி தந்து... » | சிறுகதை - பனி விழும் மலர்வனம்... » | ஆலோசனை ப்ளீஸ் » | தலையெழுத்தென்ன மொழியடா... சர்வேஸா » | உளவுத்'துரை' » | மீண்டும் ஒரு திருவிளையாடல் » 

25 August 2005 

விண்மீனா... உன் கண் மீனா !

என்னங்க,எல்லாரும் செளக்கியமா இருக்கீங்களா?

Image hosted by Photobucket.com

எனக்கு இந்தமாதிரி கருப்புகலர் புடவை கட்டி,தல நெறய மல்லிப்பூ வெச்சுக்கறதுன்னா ரொம்ப இஷ்டம்ங்க!

Image hosted by Photobucket.com

அதுமட்டுமில்லீங்க, தாவணி கட்டிக்கிட்டு,ரெட்ட ஜடய போட்டுக்கிட்டு அப்டியே ஊரெல்லாம் சுத்தி வர்றதுன்னா எனக்கு ஆசையோ ஆசைங்க!

Image hosted by Photobucket.com

குடும்பப் பொண்ணு கேரக்டரு எனக்கு நல்லா ஒத்துப் போறதா இண்டஸ்ட்ரில எல்லாருமே சொல்றாங்க; நீங்க என்ன சொல்றீங்க!

Image hosted by Photobucket.com

எனக்கு மாடர்ன் டிரெஸ் சூட் ஆகாதுன்னு யாரும் சொல்லிறக் கூடாதுல்ல; அதுக்குதாங்க இந்த டிரெஸ்! எப்டி இருக்கேன் நான், இந்த மாடர்ன் டிரெஸ்ல!ம்.. எனக்கு இந்த டிரெஸ் அழகா! இல்ல... இந்த டிரெஸ்க்கு நான் அழகா!

Image hosted by Photobucket.com

சினிமால கவர்ச்சிங்கறது தவிர்க்க முடியாததுங்க; அதுக்காக சும்மா உடம்ப காட்றது எனக்கு இஷ்டம் கெடயாதுங்க! கதைக்கு தேவைப்பட்டா கொஞ்சம் கிளாமரா நடிக்கறதுல தப்பில்லன்னு நான் நெனக்கிறேங்க!

Image hosted by Photobucket.com

ஹ.. அவுங்கள்லாம் இப்ப புதுசா வந்தவங்க! அவுங்க யாரு மேலயும் எனக்கு பொறாம கெடயாது! நான் யாரயும் எனக்கு போட்டியாவும் நெனக்கல!

Image hosted by Photobucket.com

நான் பரதநாட்டியம் ஆடுவேங்க! அட நெஜம்தாங்க, சின்ன வயசில கத்துக்கிட்டது, இப்ப அவ்ளோக்கா ஞாபகம் இல்லாட்டி கூட ஓரளவுக்கு தெரியும்ங்க... ஆனா என்ன ஒன்னு, "பஞ்ச பூதங்களும் முகவடிவாக" அப்டீன்னு பாடறப்போ, பூதம்-னா பிசாசு அப்டீங்கற அர்த்தத்துல அபிநயம் பிடிச்சுருவேங்க :-(

Image hosted by Photobucket.com

பரதம் மட்டும் ஆடுனா சினிமாவுல நெலச்சு நிக்க முடியுமாங்க!அதாங்க செல சமயம்...சரக்கு வெச்சிருக்கேன்... ம்.. எறக்கி வெச்சிருக்கேன்... வறுத்த கோழி மொளகு போட்டு பொறிச்சு வெச்சிருக்கேன்...! அப்டீன்னு குத்தாட்டம் போடுறது!

Image hosted by Photobucket.com

அம்பிகா ஆண்ட்டி எனக்கு ரொம்ப பிடிச்சவங்க! ரொம்ப அழகா இருக்காங்க! இப்பவும்... அட நெஜம்தாங்க!நீங்களே இந்த போட்டோவுல பாருங்க, எப்டி இருக்காங்க, சொல்லுங்க!

Image hosted by Photobucket.com

இந்த போட்டோவ ஒரு காப்பி எடுத்து வெச்சுக்கங்க, ஒங்களுக்குத் தெரிஞ்ச நல்ல குணமுள்ள, வசதியான பிசினஸ் பண்ற மாப்பிள்ள இருந்தா, என்னோட இந்த போட்டோவ குடுத்து, மம்மி கிட்ட பேசச் சொல்லுங்க!

Image hosted by Photobucket.com

சரிங்க, நேரமாச்சு... கோயிலுக்கு போவனும்,ஒங்களுக்கும் சேத்துதாங்க நா சாமிகிட்ட வேண்டிக்கப் போறேன்... பின்ன நீங்கதான எங்கள மாதிரி சினிமா நடிகர்களுக்கு ஆதரவு தந்து ரசிகர் மன்றம் எல்லாம் வெச்சுக்கிட்டு..... நாங்க எங்க பொழப்ப பாக்குறோம், வருமானம் வருது... நீங்க...!

Image hosted by Photobucket.com

//சரக்கு வெச்சிருக்கேன்... ம்.. எறக்கி வெச்சிருக்கேன்... வறுத்த கோழி மொளகு போட்டு பொறிச்சு வெச்சிருக்கேன்...! அப்டீன்னு குத்தாட்டம் போடுறது!//

ஹூம் அந்தக் காலத்தில் நான் ஆடாத ஆட்டமா..பார்க்காத மேடையா??


கமெண்ட் இட ஓடோடி வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள்!


என்ன ஜில்லு சௌக்கியமா??

என்ன தான் மீனா,அசினுன்னு வந்தாலும் நம்ம பப்பி மாதிரி வருமா??

பப்பீம்மா..எப்டி இருக்க.பார்த்து நாளாச்சே...சௌக்கியமா??


அசின் முடிந்து இப்போ மீனாவா?? ஹ்ம்ம்.. ஞான்ஸ்..ரொம்ப லேட்... இதெல்லாம் 1998 - 2000த்துல போட்டிருக்கனும்..
அம்மனி அவுட் ஆ·ப் தீ ரேஸ் :)
போட்டோ சூப்பர் அதைவிட ஞான்ஸ் கமென்ட்ஸ் சூப்பர்..


நன்றி ஜில் ஜில்! சிக்கல்!! VM!!!

//அம்மனி அவுட் ஆ·ப் தீ ரேஸ்//-VM

அட, அதான் மாப்பிள்ள பாருங்கன்னு சொல்லிருக்குல்ல மீனா!


ஞானபீடம் என்கிற பெரியவரே, முதலில் அம்பிகா தற்போது மீனாவா? வாழ்க நீவீர், எனக்கு தெரிஞ்ச ஒரு பெரிசு இப்போ கூட சரோஜாதேவி சாவித்திரினு பொலம்பும்.


//எனக்கு தெரிஞ்ச ஒரு பெரிசு இப்போ கூட சரோஜாதேவி சாவித்திரினு பொலம்பும். //-குழலி

அந்த பெரிசு இப்போல்லாம் ICE சாப்டுதாமே!!! அது தெரியுமா குழலி!


ரஜினி அங்கிள் கிட்ட சொல்ல சொல்லுங்க !! எதாவது உதவி செய்வாரு !!!!


// இதெல்லாம் 1998 - 2000த்துல // ;-))

என்ன போற போக்க பாத்தா சினிமா xப்ரஸ் ரேஞ்சுல போகுது உங்க பதிவு. அப்படியே உங்க கால நடிகைகளான சுஜாதா, சரிதா ஆகியோரின் படங்களையும் போட்டு எங்க தலைமுறை ஆளுங்களுக்கு அறியப்படுத்தவும்..

// அந்த பெரிசு இப்போல்லாம் ICE சாப்டுதாமே!!! // ஆரு அது ?


நன்றி ஜெகதீஸ்வரன்!
நன்றி முகமூடி!

// அந்த பெரிசு இப்போல்லாம் ICE சாப்டுதாமே!!! ஆரு அது ? // - asked Mugamoodi

இவ்ளோ ஆர்வமா கேக்கறீரு... சமீபத்துல கூட ICE (வர்யா... வரல்லயா!) அப்டீன்னு பதிவு ஒன்னு கூட போட்டரே ஒருத்தர்... அவரே!!!


//ரஜினி அங்கிள் கிட்ட சொல்ல சொல்லுங்க !! எதாவது உதவி செய்வாரு !!!!// - ஜெகதீஸ்வரன்

ரஜினி சார் ஹீரோ!
அவர அங்கிள்-னு கூப்டக் கூடாது தெரியுமா!!


//ரஜினி சார் ஹீரோ!
அவர அங்கிள்-னு கூப்டக் கூடாது தெரியுமா!!//


ஒரு காலத்தில மீனா அப்பிடித்தானே கூப்பிட்டாங்கோ. அதத்தான் மீனாவோட நிலையில இருந்து அப்பிடிச் சொல்லியிருப்பாரு.
ஆமா, வீராவில எப்பிடிக் கூப்பிட்டாங்க?


வடிவேலு சொல்கிறார்!

அது போன வருஷம்...

இது இந்த வருஷம்....!


"இந்தமாதிரி கருப்புகலர் புடவை கட்டி,தல நெறய மல்லிப்பூ வெச்சுக்கறதுன்னா ரொம்ப இஷ்டம்ங்க!
" - வச்சுக்கங்க, ஞானபீடம். உங்களை அப்டி பாத்தா எப்டி இருக்கும்னு நினைச்சுப்பார்த்தேன்!!!!!!!!!!!!


எங்க 4 பேருக்கு மட்டுந்த்தான் லொள்ளு ஜாஸ்தின்னு சொன்னீங்களே, தருமி!

நீங்க எங்களயே தூக்கி சாப்டுருவீங்க போல இருக்கு!!!


Post a comment Home Index

Links to this post

Create a Link