கைதி கண்ணாயிரம்
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்
இரவில் சோளத் தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம்
நொண்டி காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம்
நுரை தவளை மேள தாள வாத்தியமாம்
தொண்டை இல்லா கோட்டானும் ஸ்ருதிய விட்டு பாடிச்சாம்
கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்
நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம்
நத்தக்கூடு தண்ணீரே பன்னீராம்
புஞ்சைக் காட்டு குருவி தழை போட்டு கொள்ள வெத்தலயாம்
வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலயாம்
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்
இரவில் சோளத் தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம் !
----------------------
படம்: கைதி கண்ணாயிரம்
singers : M.S.Rajeswari
----------------------
அடுத்தது என்ன? "மியாவ் மியாவ்" வருமா? எலிக்கு அப்புறம் பூனை?
(என் கிட்டே, ராஜேஸ்வரியம்மா பாட்டு கேசட் இருக்கே? இந்தப்பாட்டும் தான்).
Posted by Unknown | Tue Mar 07, 02:23:00 am (IST)
||எலிக்கு அப்புறம் பூனை?//- துபாய்வாசி||
பூனை மட்டுமா? பூனைக் குடும்பத்தையே எழுதுவோமே!
;-)
Posted by ஏஜண்ட் NJ | Tue Mar 07, 07:46:00 am (IST)
டிஸ்கவரி சேனல் ரேஞ்சுல ஒரே அனிமல்ஸ் பத்தி இப்படி எழுதிட்டே இருத்தா எப்படி ?.
Posted by Karthik Jayanth | Tue Mar 07, 11:01:00 am (IST)
ஒரே அனிமல்ஸ் பத்தி இப்படி எழுதிட்டே இருத்தா எப்படி ?. -Karthik Jayanth said.
Nest Post has been published,
about MAAS(k)!
:-)
Posted by ஏஜண்ட் NJ | Tue Mar 07, 11:45:00 pm (IST)
இந்த சுண்டெலிகளின் கல்யாணப் பாட்டைத் தொடர்ந்து
மீன்களின் கல்யாணப் பாட்டு போட்டுள்ளார், 'தல' கொங்கு ராசா,
இங்கே காண்க!
"வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
ஓ..ஓ.ஓ
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்"
Posted by ஏஜண்ட் NJ | Mon Mar 13, 04:37:00 am (IST)
ஏம்பா ஏஜெண்டு! நம்ம ஹிட்லிஸ்டுல உம்ம பேரும் கீதுபா!
http://gundakkamandakka.blogspot.com/2006/03/blog-post_114226313852711072.html
Posted by வெட்டிப்பயல் | Mon Mar 13, 07:28:00 am (IST)