« Index | Home | கண்ணே ரம்பா... » | நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும் - I'm tagged » | ஒரு பக்தர் » | காலமெல்லாம்... காதல் வாழ்க... » | சகலகலா வல்லவன் » | உலக நீதி » | ஐயகோ... Blogger » | நடைபாதையில் ஞானோபதேசம் » | இரண்டு காதல் கடிதங்கள் » | ஒரு சர்க்கஸ் கூடாரமும் சில கோமாளிகளும் - circus » 

03 March 2006 

காக்கா - Crow



வேப்பமரத்திற்குக் குடிக்கூலி

வீட்டுக் கொல்லையில் ஒரு காக்கா
வேப்ப மரத்தில் தன் மூக்கால்
கூட்டைக் கட்டித் தீர்த்தவுடன்
குப்பன் அதையே பார்த்தவுடன்
கூட்டைக் கலைக்க வேண்டினான்
குடியைக் கெடுக்கத் தூண்டினான்
வீட்டுக் காரர் சீறினார்
வேண்டாம் என்று கூறினார்.

அரிதாய் முட்டை இட்டது
அப்புறம் குஞ்சு பொறித்தது
பெரிதாய்க் குஞ்சு பறந்தது
பிறந்த இடத்தை மறந்தது.
சுருக்காய்க் கூட்டைக் கலைத்தார்கள்
சுள்ளிகள் பஞ்சுகள் எடுத்தார்கள்
சரியாய் நூறு ரூபாயின்
தாளும் கண்டு மகிழ்ந்தார்கள்!




காக்கை எறும்பு

எருமைக் கொம்பில் ஒருகாக்கா
ஏறிக் கொண்டதாம்.
எறும்பை அது கூவிப் பெருமை
காட்டிச் சிரித்ததாம்.

எருமைக் காதில் அந்த எறும்பு
புகுந்து கொண்டதாம்.
எருமை காது வலியால் தன்
தலையை அசைத்ததாம்.

இருந்த காக்கா விரைவாகப்
பறந்து விட்டதாம்.
எறும்பதனைக் கண்டு விழுந்து
விழுந்து சிரித்ததாம்.

பெருமை பேசித் திரிந்திடுவார்
அது சரியில்லை.
பின்னால் சிறுமை யடையக் கூடும்
அது பெருந் தொல்லை.

- புரட்சி கவிஞர் பாரதிதாசனின் இளைஞர் இலக்கியம்

நூறு ரூபாய் வேப்பமரத்தில்க் கூடு கட்டியதற்கு குடிக்கூலி தந்ததொரு காக்கா,

எருமை மாட்டு மேல் அமர்ந்து கொண்டு சிறு எறும்பைப் பார்த்துப் பெருமை காட்டிச் சிரித்ததொரு காக்கா,

என்று காக்கைகளின் இரண்டு குணங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது!!


பெருமை பேசித் திரிந்திடுவார்
அது சரியில்லை.
பின்னால் சிறுமை யடையக் கூடும்
அது பெருந் தொல்லை.

yes, correct.


Post a comment Home Index