ஆடி வரும் பல்லாக்கு
நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா
இள மாலை நேரம் வந்தாள்
விழி ஓரம் ஏதோ சொன்னாள்
எதையோ நினைத்தாள்... சிரித்தாள்... ஓடினாள்..
மண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்று
நெஞ்சிலே கூடு கட்டி வாழ வந்தாய் இன்று
அந்த மலரும் நினைவு தோண்றும்
அதில் உலகம் மறந்து போகும்
அந்த உறவு தொடர வேண்டும்
இன்ப கனவு பலிக்க வேண்டும்
மின்னலோ சேலை கட்டி வீதி எங்கும் போகும்
அம்மம்மா பார்த்திருந்தால் கண்கள் பட்டு போகும்
இது பருவம் அளித்த சீரோ
உன்னை படைத்த கலைஞன் யாரோ!
அடி இரவில் மலரும் பூவே
எந்தன் இளமை பருகும் தேனே!
source