« Index | Home | நெஞ்சு நிமிர்த்திச் சொல்! » | சோதனை ரெண்டு - தள மேம்படுத்தல் » | சோதனை - ஒன்று » | ஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும் » | நந்தவனத்தில் ஓர் ஆண்டி » | இலக்கணம் மாறுதோ » | பருப்பு சாதம் நெய் விட்டு... » | தண்ணி Donkey ? » | உன்... நினைவு தானே... » | சூர்யோதயம் கிழக்கில் மட்டுமே... » 

29 November 2005 

கேப்பை

முருங்கைக் கீரை செய்திருந்தாள்; பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கீரை எல்லாமே பச்சை நிறத்தில்! கூடுமானவரை பிரித்து எடுத்து சாப்பிட்டேன்; இருந்த போதும் ஒரு பச்சை மிளகாய்த் துண்டு கடிபட்டது; கண்கலங்கி தும்மல் வந்தது.

ஆபீஸில் 'வேக்யூம்' spelling கேட்கப்பட்டது; சிலர் Vacuum என்றும் மற்றும் சிலர் Vaccum என்றும் சொன்னார்கள்; Dictionary பார்த்து VACUUM தான் சரி என்று அறியப்பட்டது.

கேப்பை மாவு வாங்கி வந்தேன்; தண்ணீரில் சிறிது மாவைக் கரைத்து வைத்துக்கொண்டு, அடுப்பில் சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்தேன். கொதிக்கும் தண்ணீரில் மாவு கரைத்த மாவை ஊற்றி கிண்டினேன்; சிறிது நேரத்தில் இறக்கி வைத்தேன்; இறக்கும் போது கையை சுட்டுக் கொண்டேன். சிறிது கேப்பைக் களியை தட்டில் போட்டுக் கொண்டு, குழி செய்து நல்லெண்ணை ஊற்றி உடைத்த மண்டை வெல்லத்தைப் போட்டு சூடாக இருந்தபோதே கொஞ்சம் சாப்பிட்டேன். மீதி இருந்த கேப்பைக் களியை மோரில் உருட்டிப் போட்டேன்; மறுநாள் கேப்பைக் கூழ் பிசைந்து, சின்ன வெங்காயம் கடித்துக் கொண்டு சாப்பிட்டேன்; சாப்பிட்ட அன்று இரவே தும்மல் கொஞ்சம் அதிகம் வந்தது; மறுநாள் சளி நிறைய பிடித்துக் கொண்டது; அவள் சொன்னாள், "கேப்பை ரொம்ப குளிர்ச்சி, கூடவே வெங்காயம், மோர்; எல்லாமே குளிர்ச்சி; ஒங்க ஒடம்பு சூட்டு ஒடம்பு; அதான் ஒத்துக்கல; இனிமே இந்த கேப்ப, கீப்ப செஞ்சீங்க...". அதற்கப்புறம் கேப்பை செய்வதில்லை. ஆனாலும் இந்த அனுபவமே போதும், இந்த ஜென்மம் முழுவதுக்கும்!

Image hosted by Photobucket.com



| | | | | |

இந்த பதிவுக்கும் இதில் இருக்கும் தகவல்களுக்கும் நன்றி.


சிறுசு சொன்னத வழிமொழிஞ்சிக்கிறேன்..


---
அதே சிறுசா? இல்ல புதுசா?


பயன் உள்ள தகவல்கள்! நன்னி!!!


கேப்பைக் களியா? :-)))))


ஒரு வார்த்தை சொல்லி அனுமதி வாங்கி இருக்கலாம்.

பரவாயில்லை இருக்கட்டும்.:-))


கேப்பை ரொம்ப நல்லதுங்க. கேப்பை சாப்பிட்டதால தும்முனீங்கன்னா நம்ப முடியலை. மோர் மேலதான் எனக்குச் சந்தேகம். புளிச்சிருக்கும். கேப்பைக்கு மோரை விடத் தயிர் நல்லாயிருக்கும். பச்ச வெங்காயமா கடிக்காம, நறுக்கி, லேசா எண்ணெய்யில் போட்டு உப்பு மொளகாப்பொடி போட்டு வதக்கிட்டா நல்லாயிருக்கும்.

நல்லெண்ணய் மண்டவெல்லம் காம்பினேஷனும் சூப்பர். பேசாம கேப்பை மாவை புளிச்ச மோரில் கரைச்சு, ரெண்டு கருவேப்பிலை சீரகம் மொளகு பொடிச்சுப் போட்டு தோசை சுட்டுருங்க. பிரமாதமா இருக்கும்.

இன்னும் நல்லாயிருக்கனுமுன்னு நெனச்சா, உளுந்து ஊற வெச்சு ஆட்டிக்கிருங்க. அதுல கேப்ப மாவைக் கலந்து ராத்திரி புளிக்க வெச்சுருங்க. அதுல தோசை சுட்டாலும் சூப்பர்.


நன்றி சொன்ன சிறுசு, ராமநாதன், anonymous ஆகியோருக்கு வணக்கம்!

//...ஒரு வார்த்தை சொல்லி அனுமதி வாங்கி இருக்கலாம்.//- துளசி

கேப்பைக் களி செய்முறையின் ஏகபோக உரிமையை யார், எப்போது யாருக்குக் கொடுத்தார்கள் என்று ஆதாரத்துடன் விளக்கினால், ஒருவேளை அனுமதி கேட்பது பற்றி யோசிக்கலாம்!!!
:-)

**** **** ****

ராகவன், என்ன கைவசம் இவ்ளோ கேப்பைக் குறிப்பு வெச்சிருக்கீங்க!
நீங்க Ragavan -ஆ இல்ல RAGIvan -ஆ!
;-)


இந்த பதிவுக்கும் இதில் இருக்கும் தகவல்களுக்கும் -- சிறுசு
---------------------
அதே சிறுசா? இல்ல புதுசா? --
இராமநாதன்
---------------------
பயன் உள்ள தகவல்கள் -- Anonymous
---------------------
பரவாயில்லை இருக்கட்டும்.:-)) -- துளசி கோபால்
---------------------
அதுல தோசை சுட்டாலும் சூப்பர் -- G.Ragavan
---------------------
இல்ல RAGIvan -ஆ! -- Agent 8860336 ஞானபீடம்

ஆஹா!

இளவஞ்சி


// ராகவன், என்ன கைவசம் இவ்ளோ கேப்பைக் குறிப்பு வெச்சிருக்கீங்க!
நீங்க Ragavan -ஆ இல்ல RAGIvan -ஆ!
;-) //

ஹி ஹி இதெல்லாம் அப்படியே வர்ரதுதான..........


ஆஹா! // - இளவஞ்சி

என்ன ஓய் நக்கலா!
தொட்டி மீன பாத்து கடல் மீன்...
;-)

*** *** *** *** ***

//ஹி ஹி இதெல்லாம் அப்படியே வர்ரதுதான.....// - G.ராகவன்

என்ன, 'சின்னத்தம்பி' பிரபு மாதிரி சொல்றீக!

:-)


Post a comment Home Index