« Index | Home | தண்ணி Donkey ? » | உன்... நினைவு தானே... » | சூர்யோதயம் கிழக்கில் மட்டுமே... » | ரிட்டர்ன் ஆப் த... » | ஆடியபாதம்... » | இறைவன் கால் மாற்றி ஆடிய ஸ்தலம் » | விண்மீனா... உன் கண் மீனா ! » | வனிதாவணி... இளமோகினி... வந்தாடு... » | வேலுண்டு... வினையில்லை... » | சில நேரங்களில்... சில விஷயங்கள்... » 

17 October 2005 

பருப்பு சாதம் நெய் விட்டு...

சூடான பச்சரிசி சாதத்தில், வேகவைத்த பருப்பு போட்டு சிறிதளவு நெய் விட்டு, உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டேன்; அருமையாக இருந்தது.

Image hosted by Photobucket.com

ஐயகோ! தாங்க முடியவில்லையே!

கருத்தாழம்மிக்க சொற்களும் அதனை விளக்கும்வண்ணம் அமைந்த அற்புதமான புகைப்படங்களும் மனதைப்பிசைகின்ற வகையில் எழுதப்பட்ட அந்த "நன்றாக இருந்தது" என்ற வரிகளும் இலக்கிய உலகில் தற்போதுள்ள வெற்றிடத்தை(சாரு பிடித்தது நீங்கலாக...) நிரப்பவல்லது என்பதை எந்த முன், பின், மேல், கீழ், சைடு, கோணல் நவீனத்துவவாதிகளாலும் மறுக்க, மறைக்க, மருதலிக்கமுடியாத வகையில் அமைந்துள்ளதை நினைத்துப்பார்க்கும்போது தமிழ் இலக்கியம் வருங்காலத்தில் பீடுநடைபோட்டு "ஞானபீடத்"தில் அமரும்நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியென உணரவைக்கிறது.

உடலில் உறுதியுடன்,
நிமிர்ந்த நன்நடையுடன்,
கண்களில் நீருடன்,
கைகளில் பையுடன்,
பருப்பு மற்றும் நெய் வாங்க
கடைக்குச்செல்லும்

இளவஞ்சி...


உணர்ச்சிவேகத்தில் நடந்துவிட்ட இலக்கியபிழையை தயவுசெய்து பொருத்தருள்க..

"நன்றாக இருந்தது" இல்லை... "அருமையாக இருந்தது"


இது ஒரு நல்ல பதிவு.


(இள)வஞ்சப் புகழ்ச்சி ?!?

பருப்பிஸ்ட் அப்டீன்னு ஒரு வார்த்தயில போடுற கமெண்ட்தாங்க இதுக்கான ஒரே சூப்பர் டூப்பர் கமெண்ட்!

ஆனாலும் ரெண்டு வரி பதிவுக்கு பத்து பண்ணெண்டு வரியில பின்னூட்டம் போடுற அளவுக்கு நான் என்னங்க குறளா எழுதிட்டேன்!!! :-))))

=@-@-@-@==@-@-@-@=

கரைவேட்டி, இந்தப் பதிவு தந்த மந்தம் உங்களையும் பாதித்திருக்கிறது!

ரசம் சாப்பிடவும்; சரியாயிடும்! :-)

=@-@-@-@==@-@-@-@=

நன்றி இளவஞ்சி & கரைவேட்டி.

=@-@-@-@==@-@-@-@=


அடடா! மறுபடியும் பாருங்க!

அவனவன் தமிழ்ல இதுவரை இவ்வளவு பேரு என்னத்தை எழுதி புடிங்கியிருகீங்கன்னு கேட்டு பிரான்ஸ், ருமேனியா, ருவாண்டா, அண்டார்ட்டிகாவின் மையப்பகுதி, மூலம்கோ(செவ்வாய் கிரகத்தின் அடிப்பகுதி..) ஆகிய நாடுகளின் இலக்கியங்களை கரைத்துக்குடித்து இங்கே புரையேரி வாந்தியெடுக்கும் வேளையில், அற்புதமான இரண்டு வரிகளை எழுதிவிட்டு... //ஆனாலும் ரெண்டு வரி பதிவுக்கு // என்று கூறும் உங்கள் தன்னடக்கம் எனும் திரை தமிழிலக்கிய வெளிச்சத்தை சிறிதளவேனும் மறைத்துவிடுமோ என்று அஞ்சிநடுங்கும் வகையில் தான் அமைந்துள்ளது உங்கள் பின்னூட்டம் என்பது வருந்தத்தக்க நடந்துவிட்ட ஒரு நிகழ்வின் பிறழ்வு.. :(


அட! மீண்டும் ஒரு முறை சாப்பாட்டு சமத்துவர் வந்துட்டாருடோய்..
அது என்ன சார், நெய்க்கு பதிலா பாயாசம் போட்டோ போட்டிருக்கீங்க?? :)


to இளவஞ்சி:
//...உங்கள் தன்னடக்கம் எனும் திரை தமிழிலக்கிய வெளிச்சத்தை சிறிதளவேனும் மறைத்துவிடுமோ...//

வேணாம்... விட்ருங்க... தாங்க முடியல! ஒங்க ரெண்டு கமெண்டையும் சேத்து ஒரு தனிப் பதிவா போடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்!! ஒரு ஆழமான பதிவா இருக்குமே!!!

வீ.எம், கண் டாக்டரைப் பார்க்கவும்!


வெறுப்பு வேதம் பொய் விட்டு

வர்க்க பேத வாதத்தில், வெளிறிப்போன வர்ணம் போட்டு சிறிதளவு புரட்சி விட்டு, பொய் சேர்த்து பிசைந்து பதிவிட்டேன். வாயு வந்தது.

:-)


அப்பாடா! இப்பத்தான் நிம்மதி...

எப்படியோ... என்னையும் இந்த விளையாட்டுக்கு சேர்த்துக்கிட்டா சரி! :)


இது மாதிரி பதிவுகள பொடா செய்ய சட்டத்தில இடமில்லையா?

;-((


அட ஆண்டவா! இதென்ன கூத்து. சரி. சரி. நானும் வீட்டில் இண்டெர்நெட் கனெக்சன் அடுத்த மாசம் வாங்குறேன். அப்புறம் பாருங்க. வகை வகையா படம் காட்டுறேன். சைவை அசைவ வகைகளை.


குசும்பரே! என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது; கொஞ்சம் பொறுமை காக்கவும்!

இளவஞ்சி, யார் கண்ணு பட்டுச்சோ தெர்ல, இந்த நக்கல் நையாண்டி பதிவு போடுற ஆட்கள்ல ஒருத்தர தூக்கிட்டாக! இதுல நீங்க வேற எங்க ஜோதில (ஜோதிகா இல்லீங்க) கலக்கனும்னு சொல்றீங்க... குசும்பின் விபரீதத்தை நீங்கள் இன்னும் உணரவில்லையா?!?

//இது மாதிரி பதிவுகள பொடா செய்ய சட்டத்தில இடமில்லையா?
;-(( //
- asked முகமூடி.

முகமூடி, சுதந்திரம் என்பதன் அர்த்தம் விளங்குதா! நானும் கடந்த சில நாள்ல ரெண்டு மூணு கமெண்ட் சுதந்திரத்த வெச்சு போட்டுட்டேன்!!!

ராகவன், என்ன இது... சின்னப்புள்ளத்தனமா இருக்கு! நல்லா கருத்தோட நீங்கள்லாம் எழுதுற ஆளுங்க! நீங்களும் படம் போட்டீங்கன்னா, ஒட்டு மொத்த தமிழ் வலைப்பதிவுகளின் பிரதிநிதி.... ப்ளா... ப்ளா... வேண்டாங்க, நா எதோ சொல்லப்போயி அது எங்கயாச்சும் பொத்துக்கிட்டு... அப்புறம் ஒன்மேன் ஆர்மிய சமாளிக்கனும்! ;-)


அடுத்த ஆட்டோ யாருக்கு ??
ஏஜெண்ட கொஞ்சம் கண்டுபிடிச்சி சொல்லுங்க !


முகமூடியின் "கருத்து சுதந்திரம்" பதிவுக்கு பின்னூட்டம் இட முடியாததால் இங்கே

சினிமா விமர்சன பதிவுக்கு Trailer பதிவு போட்டிருக்கும், ஒட்டு மொத்த, அகில உலக, தமிழ் Blogger சமுதாயத்தின் ஒரே பிரதிநிதி...

முகமூடி வாழ்க! வாழ்க!

இந்தக் கமெண்டு புடிக்கலேன்னா பேசித் தீத்துக்கலாம்; சொல்லாம தூக்கிப்புட்டு, பொறவு, சொதந்திரம் மண்ணாங்கட்டி, புண்ணாக்கு அப்டீன்னு சொல்லக்கூடாது!! ஆமா!! ;-)


சின்னவரே, அடுத்த ஆட்டோ யாருக்குன்னு கேக்க என்னா தெகிரியம்யா ஒமக்கு!

டிசம்பர் வந்தா, thanks giving வரும்... thanks giving வந்தா ஸ்பெஷல் சாப்பாடு turkey fry தானாமே! தெர்யாதா!!! ;-)

---------------
அடுத்த கட்ட, மாற்று திரட்டிகள் பற்றி யோசித்து வருகிறேன்.!


ஏஜெண்ட,
Thanks giving, November லேயே வந்துவிடும். அப்ப இன்னும் கொஞ்ச நாள்தானா ?


// ராகவன், என்ன இது... சின்னப்புள்ளத்தனமா இருக்கு! நல்லா கருத்தோட நீங்கள்லாம் எழுதுற ஆளுங்க! //

ஞானபீடம் எங்கையோ பறக்குற மாதிரி இருக்கு. ஹி ஹி.

சரி. சிரிக்கவும் சிந்திக்கவும்னு போடுறேனே.

இல்லைன்னா. சமையல் குறிப்புகள் என்ற பெயரில் குறிப்பு போட்டு கூடவே படமும் போட்டுறலாம்.


//ஏஜெண்ட,
Thanks giving, November லேயே வந்துவிடும். அப்ப இன்னும் கொஞ்ச நாள்தானா ? //


சின்னவன், அக்டோபர் 28-க்கு முன்னாடியே முகமூடி கிழிஞ்சிடும் போல இருக்கே!!
;-)

* * * * *

//ஞானபீடம் எங்கையோ பறக்குற மாதிரி இருக்கு. ஹி ஹி.
//
ராகவன், நாஞ்சொல்றது வெளயாட்டுக்கு இல்லீங்க! நெஜம்ங்க!

"ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது
:-))

//... சமையல் குறிப்புகள் என்ற பெயரில் குறிப்பு போட்டு கூடவே படமும் போட்டுறலாம். //

நீங்க படம் போடாமலேயே, எழுதினீர்களே இப்படி
"எண்ணெய் கரிக்காத வடை. புளிக்காத ததியோன்னம். வரட்டாத புளியோதரை. திகட்டாத அக்காரவடிசில். பிசுபிசுப்பேயில்லாத நொய்யப்பம். எத்தனை வகைகள். அடடா! அண்டாப் பொங்கல் கிண்டினாலும் அரைப்படியில் கிண்டினாலும் சுவை மாறவே மாறது. எங்கிருந்து வந்ததோ இந்தக் கைவண்ணம்." மேலும்

என்னா எழுத்துங்க இது! எல்லாத்தயும் கண்முன்னாடி கொண்டாந்து நாக்குல எச்சில் ஊற வெச்சிட்டீங்களே!! இதுல இன்னும் படம் வேற போட்டீங்கன்னா... வேண்டாங்க எல்லாரும் ஒங்க வீடு தேடி வந்து, சாப்ட எதாச்சும் வேணும்பாங்க!!


ஞா.பீ அவர்கள் "லாண்டரி கணக்கு" ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டதற்கு வாழ்த்துக்கள்.


// என்னா எழுத்துங்க இது! எல்லாத்தயும் கண்முன்னாடி கொண்டாந்து நாக்குல எச்சில் ஊற வெச்சிட்டீங்களே!! இதுல இன்னும் படம் வேற போட்டீங்கன்னா... வேண்டாங்க எல்லாரும் ஒங்க வீடு தேடி வந்து, சாப்ட எதாச்சும் வேணும்பாங்க!! //

நன்றி ஞானபீடம். எழுதி எனக்கு நிறைவு தந்த கதைகளில் அதுவும் ஒன்று.

சாப்புடத்தான வர்ராங்க. வரட்டுமே. முடிஞ்சத செஞ்சு போடுறேன். நீங்களும் பெங்களூர் வரும்போது வாங்க.


//ஞா.பீ அவர்கள் "லாண்டரி கணக்கு" ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டதற்கு வாழ்த்துக்கள். - comment posted by Ramachandranusha.

நன்றி உஷா.
ஆனாலும் எனக்கு ஒன்றும் புரியவில்லை! :-)

==================

//..சாப்புடத்தான வர்ராங்க. வரட்டுமே. முடிஞ்சத செஞ்சு போடுறேன். நீங்களும் பெங்களூர் வரும்போது வாங்க. //

நீங்களே சமையல் செஞ்சு போடுறேன்னு சொன்னப்புறமும்
பெங்(ண்)களூர் வருவோமா என்ன?!
;-)


அடக் கடவுளே, ஒரு ரெண்டு வரி பருப்பு சோறு பத்தி எழுதி படம் போட்டதுக்கு இத்தினி கமெண்ட்டா!

ஒன்னுமே வெளங்கமாட்டேங்குதே!!

ஒருவேள இதத்தான் "லாண்டரிக் கணக்கு"ன்னு Fujairah-ல இருந்து உஷா சொல்றாங்களோ!!!


Post a comment Home Index

Links to this post

Create a Link