« Index | Home | சூர்யோதயம் கிழக்கில் மட்டுமே... » | ரிட்டர்ன் ஆப் த... » | ஆடியபாதம்... » | இறைவன் கால் மாற்றி ஆடிய ஸ்தலம் » | விண்மீனா... உன் கண் மீனா ! » | வனிதாவணி... இளமோகினி... வந்தாடு... » | வேலுண்டு... வினையில்லை... » | சில நேரங்களில்... சில விஷயங்கள்... » | எனர்ஜி இண்டிபெண்டன்ஸ் Energy Independence » | பயிற்றிப் பல கல்வி தந்து... » 

14 October 2005 

உன்... நினைவு தானே...

மதிய சாப்பாட்டு முடிஞ்சப்புறமா வீட்ட சுத்தப்படுத்தி, கிச்சன்ல அடுப்ப மாத்தி, டெட்டால் கலந்த தண்ணி போட்டு வீடெல்லாம் தொடச்சு... அப்டி இப்டீன்னு அவ ரொம்பவே இன்னிக்கி வேல செஞ்சா. நானு சும்மா ரெண்டு exhaust fan மாத்திட்டு, கொழந்தய வெளயாடவுட்டு பாத்துக்கிட்டேன்;

என்னங்க,ரொம்ப டயர்டா இருக்குது, சமைக்கல; போயி நைட் சாப்பாட்டுக்கு கடையில இருந்து எதுனா சாப்ட வாங்கிட்டு வாங்கன்னு சொன்னா; நானும் சரின்னு சொல்லிட்டேன், கொஞ்சம் ருசியான சாப்பாடு சாப்டுற ஆசையில!

கெளம்புனப்ப சொன்னா, இட்லி காரச்சட்னி கெடக்கிற கடையில வாங்குங்கன்னு; போயி எனக்கு பரோட்டாவும் ச்சில்லி சிக்கனும் பார்சல் வாங்கிக்கிட்டு, அந்த காரச்சட்னி கடக்கிப் போயி அவளுக்கு இட்லி தோசை சொன்னேன்; கொஞ்சம் டைம் ஆகுது, ஒக்காந்து பேப்பர் பாருங்களேன்னு கடக்காரர் சொன்னார்.

Image hosted by Photobucket.com சரின்னு பேப்பர பாத்துக்கிட்டுந்தப்ப ஒருத்தரு வந்து, ஹலோ, எப்டி இருக்கீங்க? ன்னு கேட்டார்; யார்ரா இது, எங்கயோ பாத்தமாரி இருக்கேன்னு யோசிச்சுக்கிட்டே, நல்லாருக்கேன்; நீங்க? அப்டீன்னு கேட்டேன். நல்லாருக்கேன், "என்னய ஞாபகம் இருக்கா" அப்டீன்னு கேட்டார். ஓ... நல்லா. அப்டியா, எங்க எம்பேரச் சொல்லுங்கன்னு கேட்டோன்ன, ஆங்... வந்து... ஹாங்... சொல்லிட்டேன்!. அட கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கீங்களே அப்டீன்னாரு.

அவரு என் பிரண்டோட பிரண்டு. ஒரு வருஷமா பாக்க முடியல. அப்புறமா... என்னங்க ரொம்ப நாளா ஒங்களப் பாக்கவே முடியலேன்னு கேட்டு... அவர் விஷயங்களைச் சொல்லி... அப்டியே கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தோம். ஒங்க போன் நம்பர் அதேதானேன்னு நாங்கேக்க, இல்ல மாத்திட்டேன்னு அவர் சொல்லி, நம்பர் குடுத்தாரு. அப்பத்தான் நா என்னோட மொபைல் போன பாக்கெட்ல தேடுனப்போ, கெடக்கல. அடடா கார்லயே விட்டுட்டேன் போலருக்குங்க. சரி என்னோட நம்பர நீங்க டயல் பண்ணிடுங்கன்னு சொல்லி நம்பரச் சொன்னேன். அவரும் நம்பர போட்டுட்டு, ஒருமாதிரியா... சிரிச்சாரு. என்னங்கன்னு கேட்டப்போ, ஒன்னுமில்ல "ஒங்க பேர மறந்திட்டேன், சொல்லுங்களேன்"னாரு!!!

எனக்கு வந்த இதுக்கு.... எந்தலயில ரெண்டு கொம்பு மொளச்சு அவர முட்டனும்போல இருந்திச்சு.

ஹும்... அட்லீஸ்ட் நம்ம மொகமாச்சும் ஞாபகம் வெச்சுட்டு வந்து விசாரிச்சாரேன்னு திருப்தியாச்சு.

கொசுக்கடிச்சது, சைக்கிள் ஸ்போக்ஸ்ல இருந்த கம்பிங்கள வெறிச்சது, சால்னா கட்ன பேப்பர்ல ஈ முச்சது இதெல்லாம் எளுதாம விட்டுட்டீங்களே அது ஏன் ! ஏன் !! ஏன் !!!


இந்த பதிவுக்கு நன்றி.


இந்த பதிவுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும் சின்னவன்?


பீடம் ஏதோ ஆழமான பதிவுக்கு அடி போடறாப்புல இருக்கு? :-)


ஒலகத்தில ஒரே மாதிரி மொகம் 7 பேருக்கு இருக்குமாம் - இது பழயை கதை
அதேபோல ஒரே ஆளுடைய பல பதிவுகள் ஒரே டெம்ளேட்டில் இருக்குமாம் - இதுதான் புதுக்கதை

என்ன ஞான்ஸ் நான் சொல்லுறது சரிதானே?


முகமூடி, மிகுந்த ஆர்வத்தோடு எனது பதிவைப் படிக்கும் உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இப்பதிவிற்கு நன்றி கூறிய சின்னவனின் மனது ரொம்....ப பெருசு.

ஏன் சின்னவன் நன்றி சொன்னார் என்று கேட்கும் முகமூடி அவர்களே, நல்ல மருத்துவரைப் பார்த்து அல்சர் உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளவும்.

குசும்பரே, உம்மை விட ஒரு ஆழமான முட்டை (பதிவு) போட யாராலும் முடியாதென்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்; அதைப் படித்து, அதன் நதிமுலம் படித்து பிறகு பின்னூட்டம் போட எனக்கு குறைந்தது ஒரு ரெண்டு வருஷமாச்சும் ஆகும்; பொறுத்தருள்க!

குமரேஸா, கொஞ்சம் பொறுமய்யா, அக்டோபர்-28 வந்தா எல்லாம் வெளிச்சத்துக்கு வரப் போவுது; அதுக்குள்ள அவசரப்படுறீரே!

முகமூடி, சின்னவன், குசும்பன் மற்றும் குமரேஸ் ஆகிய மூவருக்கும் நன்றி. ;-)


- comment posted by: ஞானபீடம்.


ஞானபீடம், முகமூடி, சின்னவன், குமரேஸ், குசும்பன்,

ஒங்களோட ரவுசு தாங்க முடியல ;-)


பாலா, பொறுமை!


இட்லி கடைக்கு கூட கார்ல தான் போவீங்களா?? கார் னா.. இந்த சக்கரம் , என்ஜின் , ஸ்டியரிங்க் எல்லாம் இருக்குமே..அது தானே??? இல்ல ஒரு சந்தேகம்... கேட்டேன்

//எந்தலயில ரெண்டு கொம்பு மொளச்சு அவர முட்டனும்போல இருந்திச்சு.///

இனிமேதான் மொளைக்கனுமா ஞான்ஸ்???

அப்புறம் ஏன் முடிக்கறப்பா... அந்த கடைல ஸ்டவ் எரியுது, மின்விசிறி சுத்துது ' அப்படி இப்படினு எதுவும் எழுதல??

சரி, ஒருவழியா இவ்ளோ கதை பேசிட்டு வீட்டம்மாக்கு இட்லிய சூடா எடுத்து போயி கொடுத்தீங்களா இல்லை.. கொமட்டுல குத்து வாங்கினீங்களா...


வீ.எம்: //இட்லி கடைக்கு கூட கார்ல தான் போவீங்களா?? //

NJ: ஆமாங்க; Mitshubishi-LANCER

வீ.எம்: கொம்பு இனிமேதான் மொளைக்கனுமா ஞான்ஸ்???

NJ: அப்ப, என்னய கொம்பன்னு சொல்றீங்க, thanks.

வீ.எம்: அப்புறம் ஏன் முடிக்கறப்பா... அந்த கடைல ஸ்டவ் எரியுது, மின்விசிறி சுத்துது ' அப்படி இப்படினு எதுவும் எழுதல??

NJ: கடையில A.C தான் ஓடுச்சு.

வீ.எம்: வீட்டம்மாக்கு இட்லிய சூடா எடுத்து போயி கொடுத்தீங்களா இல்லை.. கொமட்டுல குத்து வாங்கினீங்களா...

NJ: அலுமினியம் foil-ல கட்டுன இட்லி தோசை வீட்டுக்குச் சென்றபோதும் போதுமான சூட்டிலேயே இருந்தது; குத்து வாங்கவில்லை!

என்ன வீ.எம், கேள்வியின் நாயகன் என்று பட்டம் வாங்கும் உத்தேசமா! பின்னிப் படலெடுக்கறீங்க!!

ஆழமான பின்னூட்டத்திற்கு நன்றி.


Post a comment Home Index

Links to this post

Create a Link