சூர்யோதயம் கிழக்கில் மட்டுமே...
எவ்வளவு சொல்லியும் அவள் கேட்பதாய் இல்லை
கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்டாள்
வெறுப்பின் உச்சத்தில் நான்
பிடிவாதத்தின் ஆழத்தில் அவள்
ஹும்... சக்கரம்சுழழுது சுழலுது... வண்டி ஓடுது!
கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்டாள்
வெறுப்பின் உச்சத்தில் நான்
பிடிவாதத்தின் ஆழத்தில் அவள்
ஹும்... சக்கரம்
ஒரு பொதுவான உண்மையை மையமாக வைத்து எழுதப்பட்டது!
Posted by ஏஜண்ட் NJ | Thu Oct 06, 02:57:00 am (IST)
ஆழத்துக்கும் உச்சத்துக்கும் உள்ள தூரம் வெறும் பிரம்மையே...!
புரிதலும், விட்டுக்கொடுத்தலும் வந்து விட்டால்.. ஆழமென்னா , உச்சமென்ன...
அன்பு மட்டுமே மிச்சம்
ஹ¥ம் காத்தாடி பறக்குது, அருவி கொட்டுது !
Posted by வீ. எம் | Thu Oct 06, 03:18:00 am (IST)
அர்த்தம் பொதிந்த, தத்துவப் பின்னூட்டமிட்ட வீ.எம் அவர்களுக்கு பாராட்டுடன் நன்றிகளும்!
Posted by ஏஜண்ட் NJ | Thu Oct 06, 03:51:00 am (IST)
கவிதை நல்லாத்தான் இருக்கு!
நான்கூட ஒரு கொஞ்சநாள் முன்னாடி கணவன், மனைவி சண்டைய வச்சி ஒன்னு எழுதியிருக்கிறேன். இது ஒரு வெளம்பரம்னு நினைக்காம நேரம் கிடைச்சா பாருங்க...
http://ilavanji.blogspot.com/2005/02/blog-post.html
Posted by ilavanji | Thu Oct 06, 04:25:00 am (IST)
//கவிதை நல்லாத்தான் இருக்கு! - said இளவஞ்சி.
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும்பாங்க! ஆனா நீங்க...
ஒங்களோட பதிவப் பாத்தேன்; Good!
நன்றி இளவஞ்சி.
- ஞானபீடம்.
Posted by ஏஜண்ட் NJ | Thu Oct 06, 04:46:00 am (IST)
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்
- குறள் 1327
ஞானபீடம் புரிகின்றதா?!
Posted by குழலி / Kuzhali | Thu Oct 06, 05:34:00 am (IST)
சுழழுது அல்ல சுழலுது.
கவிதையில் எழுத்துப் பிழை தவிர்க்கப்பட்டால் நல்லது.
மற்றபடி நீங்க சொல்ல வந்ததைப் பின்னூட்டம் இட்டவர்கள் புரிந்துகொண்டார்களென நம்புகிறேன்.
குழலி சொல்ல வந்தது எனக்கு விளங்கவில்லை..
விளக்குவாரா?
Posted by டிபிஆர்.ஜோசப் | Thu Oct 06, 06:01:00 am (IST)
இந்த Word Verification தேவையா?
தமிழ்ல எழுதிக்கிட்டிருக்கும்போது இங்கிலீஷ்ல மாத்தி பின்னூட்டத்த பதியறதுக்குள்ள ..
வேணாங்க. எடுத்திருங்க.
Posted by டிபிஆர்.ஜோசப் | Thu Oct 06, 06:03:00 am (IST)
ரொம்ப தெளிவாய் வழவழ கொழகொழ என்று இல்லாமல் எல்லாருக்கும் புரியும் மாதிரி எழுதியமைக்கு நன்றி.
Posted by சின்னவன் | Thu Oct 06, 06:21:00 am (IST)
//குழலி சொல்ல வந்தது எனக்கு விளங்கவில்லை..
விளக்குவாரா?
//
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார், இந்த உண்மை ஊடல் முடிந்து கூடி மகிழும் போது தான் உணரப்படும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்...
எனவே தான் ஞானபீடத்தை தோல்வியை ஒப்புக்கொள்ள சொன்னேன், அவர் தோற்றால் தான் அவர் வெற்றிபெற்றவராவார்...
Posted by குழலி / Kuzhali | Thu Oct 06, 06:28:00 am (IST)
குழலி விளக்கியதும் பளிச்சென புரிந்தது. நன்றி குழலி. :-)
எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டுள்ளது.
Word Verification நீக்கியாச்சு.
நன்றி tbrjoseph.
சின்னவனின் 'வழவழ கொழகொழ' பின்னூட்டத்திற்கு நன்றி! ;-)
Posted by ஏஜண்ட் NJ | Thu Oct 06, 06:55:00 am (IST)
//அவர் தோற்றால் தான் அவர்
//வெற்றிபெற்றவராவார்...
இல்லாட்டி வூட்டல பூவா கிடைக்காதுங்கோ !
Posted by சின்னவன் | Thu Oct 06, 07:10:00 am (IST)
// மற்றபடி நீங்க சொல்ல வந்ததைப் பின்னூட்டம் இட்டவர்கள் புரிந்துகொண்டார்களென // ஜோசப், நீங்கள் வலையுலகத்துக்கு புதியவர் என நினைக்கிறேன். பொதுவான கருத்து என்னவெனில் ஞாபீ எழுதுவது இதுவரை அவருக்கே புரிந்ததில்லை...
***
// இல்லாட்டி வூட்டல பூவா கிடைக்காதுங்கோ ! // இதை நான் வழவழ ச்சை வழி மொழிகிறேன்
Posted by முகமூடி | Thu Oct 06, 09:51:00 am (IST)
//இல்லாட்டி வூட்டல பூவா கிடைக்காதுங்கோ ! // சொன்னது: - சின்னவன் + முகமூடி
எதிர் அணிப் பாசறையில் இருப்பவர்களானாலும், உங்கள் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை உண்மையாகவே அங்கீகரிக்கும் பொன்னான மனம் படைத்தவன் இந்த NJ என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டா அங்கே!
Posted by ஏஜண்ட் NJ | Thu Oct 06, 10:35:00 am (IST)
//பொதுவான கருத்து என்னவெனில் ஞாபீ எழுதுவது இதுவரை அவருக்கே புரிந்ததில்லை... // முகமூடி
முகமூடி, அடுத்தவர் மூளைக்குள் புகுந்து பார்க்க ஆசைப்படுகிறீர்கள்!
;-)
Posted by ஏஜண்ட் NJ | Thu Oct 06, 10:51:00 am (IST)
பின்னூட்டம் வராதா, அய்யோ பின்னூட்டமே வரவில்லையே என்று பெனாத்திக் கொண்டிருக்கும் சில அரசியல் பிரமுகர்கள் உள்ள வலை உலகில், என்னுடைய இந்த நாலுவரி பதிவையும் மக்கள் பார்த்து படித்து பின்னூட்டி ஊக்குவிக்கிறார்கள் என்பதை நினைவு கூறும்போது உள்ளுக்குள் எழும் குதூகலத்தை என்னவென்று சொல்வது!
எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி! மீண்டும் வருக!!
கலகலப்புக்கு உத்திரவாதம் தரும் பதிவு இது !!!
Posted by ஏஜண்ட் NJ | Sat Oct 08, 10:59:00 am (IST)
போன பின்னூட்டம் தப்பு..
அ) கைகலப்புக்கு உத்திரவாதம் தரும் பதிவு இது :: ஞானபீட பதிவு
ஆ) கலகலப்புக்கு உத்திரவாதம் தரும் பதிவு இது :: முகமூடி
Posted by முகமூடி | Sat Oct 08, 11:21:00 am (IST)
அஸ்த'மனம்' மேற்கில் மட்டுமே
எவ்வளவோ சொல்லியும் ஏஜண்ட் கேட்பதாய் இல்லை
திரும்பி திரும்பி ஆழமான பதிவு
கடுப்பின் உச்சத்தில் நான்
பிடி'வாதத்தின் ஆழத்தில் ஏஜெண்ட்
ஹீம்... பதிவு குத்துது குடையுது
:-)
Posted by குசும்பன் | Sat Oct 08, 01:00:00 pm (IST)
என்ன ஞான்ஸ்,
தென்னைமரத்தில் தேள் கொட்டினால்
பனைமரத்தில் நெறி கட்டின கதையாக இருக்கு
உமக்கு வடக்குத் தெசையில் சூலம்
அவ ற்கு தெற்குத் தெசையில் ஓலம்
Posted by குமரேஸ் | Sat Oct 08, 03:46:00 pm (IST)
குசும்பரே!,
'அஸ்தமனம் மேற்கில் மட்டுமே' பின்னூட்டம் நீர் இட்டதால், இதை வைத்து ஒரு தனிப்பதிவிட தயாரானவர்களில் யாரோ ஒருவர் 'சின்ன'ப்புள்ளத்தனமா பொலம்பிக்கிட்டு இருப்பதாக காத்துவாக்கில் வந்த தகவல் கூறுகிறது!
ஐயா குமரேஸா
தென்னைமரத்தில் தேள் கொட்டினால்
பனைமரத்தில் நெறி கட்டின கதை...//ய பத்தி கொஞ்சம் வெளக்குங்கய்யா! எனக்கு ஒன்னுமே புரிபடல!!!! ;-)
Posted by ஏஜண்ட் NJ | Sun Oct 09, 05:27:00 am (IST)
//காத்துவாக்கில் வந்த தகவல் கூறுகிறது
NJ
இப்ப தவல்கள் எல்லாம் வாத்து வாக்கிலதான போகுது !
குசும்பர் சொன்னா என்ன ? நான் சொன்னா என்ன ? எல்லாம் ஒண்ணுத்தானே !!
:-)
Posted by சின்னவன் | Sun Oct 09, 06:56:00 am (IST)
என்னை வெகுவாகக் கவர்ந்த பின்னூட்டங்கள் இரண்டு
1. வீ.எம் எழுதியது: http://www.blogger.com/profile/9161133
ஆழத்துக்கும் உச்சத்துக்கும் உள்ள தூரம் வெறும் பிரம்மையே...!
புரிதலும், விட்டுக்கொடுத்தலும் வந்து விட்டால்..
ஆழமென்னா , உச்சமென்ன...
அன்பு மட்டுமே மிச்சம்
ஹூம் காத்தாடி பறக்குது, அருவி கொட்டுது !
*** *** *** *** *** ***
2. குசும்பன் எழுதியது: http://www.blogger.com/profile/3514797
அஸ்த'மனம்' மேற்கில் மட்டுமே
எவ்வளவோ சொல்லியும் ஏஜண்ட் கேட்பதாய் இல்லை
திரும்பி திரும்பி ஆழமான பதிவு
கடுப்பின் உச்சத்தில் நான்
பிடி'வாதத்தின் ஆழத்தில் ஏஜெண்ட்
ஹீம்... பதிவு குத்துது குடையுது
:-)
*** *** *** *** *** ***
Posted by ஏஜண்ட் NJ | Sun Oct 09, 10:22:00 am (IST)
//NJ
இப்ப தவல்கள் எல்லாம் வாத்து வாக்கிலதான போகுது !// - by chinnavan
ஹும்
காத்து...
வாத்து...
இது நல்ல கூத்து!
Posted by ஏஜண்ட் NJ | Sun Oct 09, 10:24:00 am (IST)
//..
அ) கைகலப்புக்கு உத்திரவாதம் தரும் பதிவு இது :: ஞானபீட பதிவு
ஆ) கலகலப்புக்கு உத்திரவாதம் தரும் பதிவு இது :: முகமூடி
...//
முகமூடி,
கைகலப்பு, கால்கலப்பு எல்லாம் உமக்கும் 'சின்ன' அவருக்கும் சீக்கிரம் நடக்க இருக்கிறது! எச்சரிக்கை!!
கலகலப்புக்கு உத்திரவாதம் தரும் பதிவு இந்த ஞானபீட பதிவு மட்டுமே என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்!!! :-)
- ஞானபீடம்
Posted by ஏஜண்ட் NJ | Mon Oct 10, 11:27:00 pm (IST)
அய்யா NJ
எப்படியா "எனக்கும்" , முகமூடிக்கும் சண்டை வரும் ;-)
நீரும் உம்ம ஏஜெண்டுகளும்.
Posted by சின்னவன் | Tue Oct 11, 06:21:00 am (IST)
//எப்படியா "எனக்கும்" , முகமூடிக்கும் சண்டை வரும் ;-)// - chinnavan.
சின்னவரே,
நீரே 'ஆனந்த'மானவர்
நீரே 'குசும்பு' செய்பவர்
நீரே 'பர்தா' போட்டவர்
இன்னும் மத்தத எல்லாம் நீரே லிஸ்ட் போடுமய்யா!!
Posted by ஏஜண்ட் NJ | Tue Oct 11, 11:14:00 am (IST)
ஏஜெண்டு,
Spy Vs Spy பார்தீங்கன்னா, முதல் பாடமே, நம்க்கு தெரிந்த எல்லாத்தையும் வெளியே சொல்லிடக்கூடாது. அப்புறம், இரகசியத்துக்கு என்ன மதிப்பு.
நமக்கு தெரியும் என்று எதிராளிக்கு தெரிய வைக்க வேண்டும் அவ்வள்வு தான், இப்படி இரகசியத்தை வெட்ட வெளியில் போட்டு உடைத்து விட்டால் , ஜேம்ஸ் பேண்டாய் இருப்பதில் என்ன இலாபம். ?
இப்ப பாருங்க, எனக்கு என்ன இரகசியம் தெரியும் என்று உமக்கு தெரியும் .. அதுதான் எனக்குத் தேவை...
நான் வெளியே சொல்வதாக இல்லை !
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும் ....
Posted by சின்னவன் | Tue Oct 11, 11:39:00 am (IST)
//பின்னூட்டம் வராதா, அய்யோ பின்னூட்டமே வரவில்லையே என்று பெனாத்திக் கொண்டிருக்கும் சில அரசியல் பிரமுகர்கள் உள்ள வலை உலகில்// njaanapiitam - ithai enggaL thalai mukamUti kavanikkaathathaal pizaikkiRiirkaL!
Posted by பினாத்தல் சுரேஷ் | Tue Oct 11, 12:04:00 pm (IST)
This comment has been removed by a blog administrator.
Posted by ஏஜண்ட் NJ | Tue Oct 11, 09:15:00 pm (IST)
//ஞானபீடம் இதை எங்கள் தலை முகமூடி கவனிக்காத்தால் பிழைத்தீர்கள்!// - பெநாத்தல் சுரேஷ் பாபு
ஒங்க 'தலை' பேர கெடுக்க நீர் ஒருத்தர் போதுமய்யா; கட்சி நல்லா வளாரும்!! :-))
'தலை'க்கு இப்டி பேர் (கெ)எடுத்துக் கொடுக்கும் மூ.இ.து.பொ.க்கள் தான் தேவை!
;-)
Posted by ஏஜண்ட் NJ | Tue Oct 11, 09:52:00 pm (IST)