« Index | Home | விண்மீனா... உன் கண் மீனா ! » | வனிதாவணி... இளமோகினி... வந்தாடு... » | வேலுண்டு... வினையில்லை... » | சில நேரங்களில்... சில விஷயங்கள்... » | எனர்ஜி இண்டிபெண்டன்ஸ் Energy Independence » | பயிற்றிப் பல கல்வி தந்து... » | சிறுகதை - பனி விழும் மலர்வனம்... » | ஆலோசனை ப்ளீஸ் » | தலையெழுத்தென்ன மொழியடா... சர்வேஸா » | உளவுத்'துரை' » 

27 August 2005 

இறைவன் கால் மாற்றி ஆடிய ஸ்தலம்

இறைவன் நடராஜர் நடனமாடிய ஐந்து சபைகள்:

Image hosted by Photobucket.com
1. கனக சபை / பொன்னம்பலம் (சிதம்பரம்)

2. வெள்ளி அம்பலம் (மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்)

3. ரத்தின சபை (திருவளங்காடு)

4. தாமிர சபை (திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம்)

5. சித்திர சபை (குற்றாலம் - குற்றாலீஸ்வரர் ஆலயம்)Image hosted by Photobucket.com

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அறியப்படுகிறது.

மற்ற இடங்களில் எல்லாம் இறைவனின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, இறைவன் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றிய விவரம்:

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ராஜசேகரன், சிவபெருமானின் தீவிர பக்தனாக விளங்கினான். அவன் ஆய கலைகள் 64-ல் நாட்டியக் கலை தவிர ஏனைய 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். ராஜசேகர பாண்டியன் நாட்டியக் கலையைக் கற்ற போது நடராஜர் சிலை வடிவம் கொண்டது போல் வலதுகால் ஊன்றி இடது கால் உயர்த்தி நின்றபோது, அது எவ்வளவு கடினமானதும் வலியைத் தரக்கூடியதும் என்பதை உணர்ந்தான்.

சிறிது நேரம் நிற்பதற்கே தனக்கு இத்தனை வலியென்றால், ஆண்டாண்டு காலமாக ஒரே காலில் நிற்கும் இறைவனுக்கு எவ்வளவு வலிக்கும் என்று எண்ணியவன், இறைவனிடம் கால் மாற்றி நின்று தனது மனவருத்தம் போக்குமாறு வேண்டுகிறான். இறைவன் அவ்வாறு செய்யாமல் இருக்கவே, உடனே ராஜசேகர பாண்டியன் தனது வாளை உருவி, "இறைவா, நீ கால் மாறி நில்லாது போனால், இந்த வாளின் மேல் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்று கூறி அவ்வாறே செய்ய முற்பட்டான்.

அவனது பக்தியை மெச்சிய இறைவன் தனது கால் மாற்றி ஆடினான் என்பது வரலாறு. இது திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Image hosted by Photobucket.com

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம்
2. கூடற் காண்டம்
24. கால் மாறி ஆடின படலம்

1480.
நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா
அன்பின் குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.

1481.
நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக்
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்
வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே.

References:
http://www.shaivam.org
http://www.angelfire.com/musicals/kallidaihari/five_sabhais.htm

என்ன ஞான்ஸ்,

கால் மாறி ஆடியத்கேற்ப உங்கள் படங்கள் இல்லையே?

எங்கே தவறு என்று கண்டு பிடிப்பவருக்கு பரிசு தரலாமுங்களா?


அய்யா குமரேஸா...

ரெண்டு நடராஜர் படம் போட்டிருக்கேன்;

எது நார்மல்...
எது கால் மாற்றி ஆடியது.... அப்டீன்னு
பாக்கறதுல அவ்வளவு கஷ்டமாய்யா!!


அட என்ன இது சாப்பாடு , அடுத்தது சினிமா இப்போ சாமியா??

கொஞ்ச நாள் அசின், மீனா, சுஷ், திரிஷா னு வலைப்பூ போச்சு..
இப்போ ஜீஸஸ், கோயில் , கிருஷ்ணன், மகாபாரதம், கருணாதிதி / கண்ணகி கோயில் ...
அடுத்து என்னவோ???

//வாளின் மேல் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்வேன் //
ஞான்ஸ் தான் அந்த காலத்து ராஜசேகர பாண்டியனா??
கையில வாள் வெச்சுட்டு அது மேல எதுக்கு விழனும்? குத்திக்கொள்வேன் னு தானே சொல்லிருக்கனும்?

ஒரு வேளை கடவுள் ஒத்துக்கலைனா, வாளை படுக்க போட்டு அது மேல விழுந்துட்டு, சொன்ன மாதிரி செஞ்சுட்டேன் பாருனு சொல்லியிருப்பாரோ?? உசார் பாண்டியன் :)

சரி சரி, தகவலுக்கு நன்றி ஞான்ஸ்..


ஞான்ஸ், உமக்கு பரிசு இல்லை.

அவசரப்படாமல் சிந்தித்து பார்க்கவும்.


//...கையில வாள் வெச்சுட்டு அது மேல எதுக்கு விழனும்? குத்திக்கொள்வேன் னு தானே சொல்லிருக்கனும்?... உசார் பாண்டியன்// - VM

இதற்கு பதில் எல்லோருக்குமே தெரிந்தது தானே.


உடுக்கை!


அசுரன் தலை!!


சூப்பர் குமரேஸ்,
இது கால் மாற்றி ஆடின மாதிரி இல்லை.. கண்ணாடியில் பார்பதை போல் உள்ளது..
அசுரன் தலை வெவ்வேறு பக்கம் உள்ளது.. இரண்டு படத்திலும் அவரின் ஊன்றிய கால் தலைப்பக்கமே உள்ளது..

உன்மையாவே அவரு வேற வேற காலை தூக்கி ஆடினாரா இல்லயா ...யாராச்சும் சொல்லுங்கப்பா?

வீ எம்


ஞான்ஸ், ஒருவாறு கண்டுபிடித்துவிட்டீர்.

வி.எம்,

எனக்கென்னவோ, முன்னொருகாலத்தில் யாரோ ஒரு சிற்பி, சோமபான உபயத்தில் காலை மாற்றி சிலையை செய்துவிட்டு, அதனை செய்ய சொன்ன அரசனிடம் பொற்காசு பெறுவதற்காக கிளப்பிவிட்ட கதை, காலப்போக்கில் பல கிளைக்கதைகளை, பாடல்களை கண்டு, இன்றுள்ள நிலைக்கு வந்திருக்கலாம் போல் தோன்றுகிறது.

இதேமாதிரித்தான் எதிர்காலத்தில் Information Centre...
களைத்தான் பக்தர்கள் கோவில்களாக வழிபாடு செய்ய வாய்பு உண்டு.


Information Centre உரிய இணைப்பு

http://kumaraess.blogspot.com/2005/05/blog-post_20.html


அன்புடையீர்,

தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கோயில் இருக்கும் இடங்களைத் தலங்கள் என்றுதான் தமிழில் சொல்லுவார்கள். தலம் என்ற தமிழ்ச்சொல்லை ஸ் என்ற முன்னொட்டுச் சேர்த்து வடமொழியில் வழங்குவார்கள். நாமும் அதற்கு ஆம் என்று போட்டு அது என்னமோ ஏதோ என்று வழங்கினால் எப்படி? சமய நெறிகள், செய்திகள், பழக்க வழக்கங்களைத் தமிழில் ஆளப் பழகுவோம். எல்லாவற்றையும் வடசொல்லாக்கி நாம் எதைக் கண்டோ ம்? ஆங்கிலச் சொல்லை French பலுக்கல் முறையில் எழுதுவீர்களோ? நம் மொழியை நாம் கொஞ்சம் கற்றுக் கொள்ளவில்லையானால் எப்படி? அளவுக்கு மீறிய வடமொழித் திரிவுகளும், தமிங்கிலப் பயன்பாடுகளும் நம்மை உருக்குலைக்கின்றன. இவையெல்லாம் ஊடுறுவிய பின்னால் நம்மிடம் சமய உணர்வு தங்கியிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? தமிழின்றித் தென்னாடுடைய சிவன் எங்கே?

தலம் என்பது இன்னும் திரிந்து தளம் என்று கூடப் பலுக்கப் பெறும். இணைய தளம் என்று சொல்லுகிறீர்கள் அல்லவா? லகர/ரகரப் போலியில் தரை என்று கூட ஒரு சொல் இருக்கிறது. தரை, தலம், தளம் எல்லாம் ஒன்றிற்கொன்று இணையான சொற்கள். போகிற போக்கைப் பார்த்தால் தளத்தை ஸ்தளம் என்றும் தரையை ஸ்தர என்றும் சொல்லும் காலம் வந்து விடும் போல் இருக்கிறது.

ஐந்து அம்பலங்களையும் பொன்னம்பலம், வெள்ளம்பலம், மணியம்பலம், செப்பம்பலம், முத்தம்பலம் என்று சொல்ல வேண்டும். இவை முறையே கனக சபை, சுவேத சபை, ரத்ன சபை, தாம்ர சபை, சித்ர சபை என்ற வடமொழிச் சொற்களால் அல்லது இருபிறப்பிச் சொற்களால் அழைக்கப் படும்.

மணியம்பலம் இருப்பது திரு ஆலங்காடு (அரக்கோணத்திற்கு அருகில் இருப்பது). அது திருவளங்காடு அல்ல. ஆலமரம் நிறைந்த காடு ஆலங்காடு. ஆல் அமர் செல்வனுக்கு ஆலங்காடு பெரிதும் உகந்ததே.

சித்ரம் என்பது முத்து என்பதன் வடமொழியாக்கம். அது ஓவிய சபை என்று தவறாகப் பலராலும் புரிந்து கொள்ளப் படுகிறது. பொன், வெள்ளி, தாம்பரம், மணி போன்று இந்த அம்பலம் முத்தால் வேயப்பட்டது. ஓவியத்தைக் கொண்டு அம்பலம் வேயமுடியாது. (தவிரவும் தலம் பற்றி இன்னொரு செய்தி. அந்த ஊர் குல் + தாலம் = குற்றாலம். குல் என்பது குன்று, குறிச்சி போன்றவற்றின் வேர்ச்சொல். மலை என்ற பொருளைத் தரும். தாலம் என்பது மேலே சொன்ன தலம் என்ற சொல்லின் நீட்சி. குற்றாலம் = மலைகள் பொருந்திய இடம்/தளம். அங்கு இருக்கும் ஈசர் குற்றால ஈசர். அவரை அங்கிருக்கும் பலாவின் பெருமையால் குறும்பலவின் ஈசர் என்று கூட திரிகூட ராசப்பர் அழைப்பார். ஸ்தலம் என்ற சொல்வது முறையானால், அப்புறம் கொற்றலையாற்றை குஸஸ்தலை ஆறு என்று சென்னைக்கு அருகில் அழைப்பது போல், இந்த இடத்தைக் குல்ஸ்தலம் என்று சொல்ல வேண்டும். கேட்க நன்றாக இருக்குமா? இது மாதிரி பல்வேறு தமிழ் ஊர்களின் பெயர்களைக் குட்டிச் சுவர் ஆக்கியிருக்கிறோம். மான்கள் நிறைந்த காடு மரைக்காடு. அதை மறைக்காடு என்று தவறாகப் பலுக்கி பின் வேதாரண்யம் என்று வடமொழியாக்கி, என்ன கந்தர கோளம் பாருங்கள். மொத்தத்தில் நம்மூரை நம்மூராகப் பாவிப்போம்.)

தாம்பரம் என்பது செம்பைக் குறிக்கும் நல்ல தமிழ்ச் சொல்லே. அதைத் தாம்ரம் என்று திரித்து இருபிறப்பி ஆக்கி வடமொழி பாவிக்கும். ரத்ன என்பதும் இருபிறப்பி தான்.

சிவநெறி, விண்ணெறி பற்றிய செய்திகளைச் சரியானபடி புரிந்து கொள்ளுவோம்.

இவர் யாரைய்யா எனக்கு வந்து சொல்லுவது என்று உங்களுக்குத் தோன்றினால் என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
இராம.கி.


நன்றி குமரேஸ், வீ.எம், இராம.கி


நீர் ஞானபீடமா அல்லது ஞானப்பழமா ??? என்ன ஒரே பக்திப் பரவசமா பதிவு ???

உம்மை மெச்சினேன், தலைவரே (BOSS!!!) ;-)


அடப்போங்க பாலா!

இங்க என் பக்தியே பஞ்சர் ஆயிப்போயி கெடக்குது!

இதுல நீங்க வேற...


ஞான்ஸ்

என்ன ஞானவழி பக்திவழின்னு கலக்குறீங்க..

மதுரை போன போது எங்க தூரத்து உறவினருடன் கோயிலுக்கு சென்றேன்... அவரும் ஒரு கதைய சொன்னாரு......
ரொம்ப நேரம் ஆடினதுனால நடராஜருக்கு கால் வலிச்சிச்சாம் அதனால் கால் மாத்தி ஆடினாராம் ......அப்படீன்னு
ஆனா பாருங்க இப்பத்தான் தெரியுது அது பீலான்னு........கொஞ்சம் ஒற்றுமை இருந்தாலும் பீலா பீலாதான்


////இது கால் மாற்றி ஆடின மாதிரி இல்லை.. கண்ணாடியில் பார்பதை போல் உள்ளது..
அசுரன் தலை வெவ்வேறு பக்கம் உள்ளது.. இரண்டு படத்திலும் அவரின் ஊன்றிய கால் தலைப்பக்கமே உள்ளது..

உன்மையாவே அவரு வேற வேற காலை தூக்கி ஆடினாரா இல்லயா ...யாராச்சும் சொல்லுங்கப்பா?//


//எனக்கென்னவோ, முன்னொருகாலத்தில் யாரோ ஒரு சிற்பி, சோமபான உபயத்தில் காலை மாற்றி சிலையை செய்துவிட்டு, அதனை செய்ய சொன்ன அரசனிடம் பொற்காசு பெறுவதற்காக கிளப்பிவிட்ட கதை, காலப்போக்கில் பல கிளைக்கதைகளை, பாடல்களை கண்டு, இன்றுள்ள நிலைக்கு வந்திருக்கலாம் போல் தோன்றுகிறது.

இதேமாதிரித்தான் எதிர்காலத்தில் Information Centre...
களைத்தான் பக்தர்கள் கோவில்களாக வழிபாடு செய்ய வாய்பு உண்டு. //

சில வருடங்களுக்கு முன் துபாயில் (அல்லது லண்டனில்) நடந்த நட்சத்திர கலைவிழாவில் மணிவண்ணந்தியாகு சம்பந்தப்பட்ட காட்சி.

மணிவண்ணனிடம் தியாகு 2000 ரூபாய் கடன் கேட்பார். அதற்கு மணிவண்ணன் ஒற்றைக் காலில் நடராஜர் மாதிரி நின்றால் தருவதாக சொல்வார். கொஞ்ச நேரம் நின்றுவிட்டு, தள்ளாடிய தியாகு, யோவ் ஒற்றைக்காலில் நிற்க முடியாதய்யா, இது ரொம்ப கஷ்டம் என்பார். அதற்கு மணிவண்ணன் சிதம்பரம் நடராஜர் இத்தனை வருடங்களாக நிற்கவில்லையா? என்பார். உடலே தியாகு, யோவ், அது கல்லு என்பார். அதற்கு மணிவண்ணன் "நாங்களும் அதைத்தானய்யா சொல்றோம் என்பார். புரிந்து கொண்டால் சரி.


என்ன ஞான்ஸ் நைசாக முதல்படத்தில் நடராசரின் காலை மறைத்துவிட்டீரே?

பார்த்து,

தெரியும்தானே, நாம் உம்மை கவனித்துக்கொண்டிருப்பது.

அதுசரி ஏன் இன்னமும் எனது புது முயற்சி பற்றி நீங்கள் திருவாய் மலரவில்லை? ஏன் நல்லா இல்லையா?


Post a comment Home Index

Links to this post

Create a Link