ரிட்டர்ன் ஆப் த...
விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்தேன்;
கல்யாண நாள் வந்தது; கோவிலுக்குச் சென்றோம்;
ஒரு பத்து நாள் எங்க ஊருல இருந்தோம், இன்னொரு பத்து நாள் மாமனார் வீட்ல இருந்தோம்.
பெரிய தங்கையின் மகளுக்கு காதுகுத்து வைத்தார்கள்; எல்லோரும் சென்றோம்; (குழியும் குழி சார்ந்த இடமும் ரோடு என்றார்கள்! அதன்வழியேதான் பயணித்தோம்); தாய்மாமன் என்பதால் காதுக்கும் கழுத்துக்கும் நகை செய்தேன்;
ஊரில் மழை பெய்தது; குழந்தை எப்போதும் வெளியே வாசலில் விளையாடியது;காய்ச்சல் வந்தது; ஊசி போட்டு மாத்திரை கொடுக்க சரியானது;
எங்கள் ஆடு ஒன்று குட்டி போட்டது; தலைச்சன் போகம் ஒரு குட்டிதான் போடும் என்றார்கள்; ஒரு குட்டி போட்டு கொஞ்ச நேரம் கழித்து இரண்டாவது குட்டியும் போட்டது; இரண்டுமே கெடாக்குட்டிகள்!; பிறந்த சிறிது நேரத்திலேயே குட்டிகள் எழுந்து தட்டுத் தடுமாறி நடக்க ஆரம்பித்தன; "ஏன்ணே, இப்டி ஆட்டுக்குட்டி மாரியே குழந்தைகளும் பொறந்தோன்ன நடந்தா, எப்டி இருக்கும்"? என சிறிய தங்கை கேட்க, "அட, அதவுடு, இந்த ஆட்டுக்குட்டிங்க, ஆட்டோட வயத்துக்குள்ள இருக்கும்போதே நடந்திருந்தா ஆட்டுக்கு எப்டி இருந்திருக்கும்"-னு கேட்டு தம்பி கெக்கே பிக்கேவென்று சிரித்தான்.
கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் இல்லாமல், விடுமுறை முடிந்தது; திரும்ப வந்தாயிற்று.
*** *** *** *** ***
தமிழ், மயிர், உயிர், டவுசர் போட்ட சானியா, குஷ்பூ, கற்பூ, கலாச்சாரம், வாத்து, வி.காந்த்-தே.மு.தி.க...
ம்... கடிகாரம் ஓடுது... காத்து வீசுது! அவ்ளோதான்!!!

thanks inomeno & how are you.
Posted by ஏஜண்ட் NJ | Tue Sept 27, 12:35:00 am (IST)
ஹலோ ஞான்ஸ் வெல்கம் பேக்
//குழியும் குழி சார்ந்த இடமும் ரோடு என்றார்கள்!//
வந்ததும் வராததுமாக இப்படி ஆரம்பிச்சுட்டீங்களே
Posted by Ganesh Gopalasubramanian | Tue Sept 27, 03:55:00 am (IST)
வாங்க ராசா, விடுமுறை எல்லாம் நன்றாக இருந்ததா, வந்த உடனே எம்ம பதிவில் வந்து உம்ம குசும்பு பின்னூட்டத்தை எழுதிவிட்டீர்கள் போல...
Posted by குழலி / Kuzhali | Tue Sept 27, 03:58:00 am (IST)
நன்றி கணேஷ்
அனுபவத்தை சொன்னேன், அவ்ளோதான்; மற்றபடி, அரசும் அதிகாரிகளும் பொதுமக்களும் நாட்டு நலனில் அக்கறையோடு உள்ளதை மறுக்க முடியாது.
Posted by ஏஜண்ட் NJ | Tue Sept 27, 04:00:00 am (IST)
குழலி, அது நாந்தான்னு உறுதியா சொல்லமுடியுமா?, இல்ல வேற யாராவது வெள்ளி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் களோட வேலையா!
;-)
Posted by ஏஜண்ட் NJ | Tue Sept 27, 04:04:00 am (IST)
வாய்யா ஞானபீட.. நீர் இல்லாம இங்க நிறைய பேரு நிம்மதியா இருந்தாங்க... இப்பத்த்தான் நிறைய பேருக்கு நிம்மதி வருது...
ஆமா அது என்ன பெரிய வேர்டு வெரிபிகேசன் எல்லாம்வச்சி ஒரு பந்தா...
Posted by முகமூடி | Tue Sept 27, 10:17:00 am (IST)
//"அட, அதவுடு, இந்த ஆட்டுக்குட்டிங்க, ஆட்டோட வயத்துக்குள்ள இருக்கும்போதே நடந்திருந்தா ஆட்டுக்கு எப்டி இருந்திருக்கும்"-//
:)
நல்லாத்தான் எழுதிருக்கீங்க ஊருக்கு போனதப்பத்தி. ஆனா உங்க ஊர்ல அதுக்குள்ள அக்டோபர் வந்திருச்சே? என்ன ஊருங்க?
.யிர் பமக தலைவர் சொல்றதயே நானும் வழிமொழிகிறேன். வரி வெரிபிகெஷன். அவசரத்தில Alt+1 அமுக்காமல் தமிழில் அடிச்சி, அத அழிச்சி... ரொம்ப படுத்தல்ங்க.
Posted by rv | Tue Sept 27, 10:50:00 am (IST)
முகமூடி, உம்ம பின்னூட்டத்த இன்னோருதபா படிச்சுப் பாருமய்யா;
எதோ மிஸ்ஸிங்!!!
:-))
இராமநாதன், இந்த வேர்டு வெரிபிகேஷன் இல்லாட்டி, சும்மா சில கமெண்ட்ஸ் "Hi your blog is cool, visit this nonsense also" அப்டீன்னு வருது; அத தடுக்கத்தான்; ஒரு பத்து நாள் பாக்கலாம்; சரிப்படாட்டி அப்புறம் தூக்கிடலாம்னு இருக்கேன்.
வருகை புரிந்தததற்கும் கமெண்ட் இட்டதற்கும் அனைவருக்கும் நன்றி.
Posted by ஏஜண்ட் NJ | Tue Sept 27, 11:26:00 pm (IST)
//உங்க ஊர்ல அதுக்குள்ள அக்டோபர் வந்திருச்சே? என்ன ஊருங்க?// - இராமநாதன்.
நான், கால தேச வர்த்தமானங்களைக் கடந்து எழுதுகிறேனோ?!?!
Posted by ஏஜண்ட் NJ | Tue Sept 27, 11:29:00 pm (IST)
// (குழியும் குழி சார்ந்த இடமும் ரோடு என்றார்கள்! அதன்வழியேதான் பயணித்தோம்); //
ஞானபீடம்....கலக்கல்
Posted by G.Ragavan | Wed Sept 28, 04:20:00 am (IST)
//ஞானபீடம்....கலக்கல் // - G.Ragavan said.
கலக்கியதாலோ என்னவோதாங்க,
வேன்ல எங்க கூட வந்திருந்த உறவுக்கார பெண்கள் ஒரு சிலர் வாந்தியெடுத்தார்கள்! :-)
அப்புறம் வழியில ஒரு மெடிக்கல்-ல நிறுத்தி வாந்திவராம இருக்கறதுக்கு மாத்திர வாங்கிக்கிட்டு வந்தாக!
Posted by ஏஜண்ட் NJ | Wed Sept 28, 09:45:00 am (IST)
அட மறந்தே போனேன்...
தமிழ் பேசுபவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவுகள் :: (என்னது பேச மட்டும்தான் தெரியும், படிக்க தெரியாதா?)
மான் வேட்டை
கலாச்சார த். தூ.. யவர்கள்
****
ஏம்பா ஒரு விளம்பர பின்னூட்ம் வந்தா அத அழிக்கறத வுட்டுட்டு, எங்க எல்லாருக்கும் வேல கொடுக்கற
Posted by முகமூடி | Wed Sept 28, 10:01:00 am (IST)
முகமூடி, நாஞ்சொன்னது, ஒம்மோட முதல் கமெண்ட்ல 'நிம்மதி' எப்போங்கற கொழப்பத்த பத்தி!
//ஒரு விளம்பர பின்னூட்ம் வந்தா அத அழிக்கறத வுட்டுட்டு..//
ஹும், சனிக்கே தன் நாக்குல சனி!!! என்ன ஓய் அழிச்சிடவா! ;-)
Posted by ஏஜண்ட் NJ | Wed Sept 28, 10:15:00 am (IST)
t
e
s
t
!
Posted by ஏஜண்ட் NJ | Fri Sept 30, 01:59:00 am (IST)
வாங்க , வாங்க ஞான்ஸ், அடுத்த சுற்றுக்கு ரெடியா?
காணவில்லை னு போட்டு உங்களை தேடிகிட்டு இருந்தாங்க.. பார்த்தீங்களா ?
அரட்டை அரங்கம் ல போய் பாருங்க.. !
Posted by வீ. எம் | Fri Sept 30, 06:21:00 am (IST)
உங்களை யார் யாரோ எது எதுக்கோ தேடினது மாதிரு இருந்திச்சி...
Posted by தருமி | Fri Sept 30, 10:36:00 am (IST)
வீ.எம், பாத்தேன், ஒங்களோட காணாமப் போன ஆளுங்க லிஸ்ட்ட; நாந்தான் லீவுல போனேனே.
தருமி, வாங்க.
****
பொன்னைத் தேடும் பூமியிலே....
என்னைத் தேடும் ஆட்களும் உண்டென்று உணர்கிறேன்!!!
Posted by ஏஜண்ட் NJ | Sat Oct 01, 11:31:00 am (IST)
>>> ஆட்டுக்குட்டிங்க, ஆட்டோட வயத்துக்குள்ள இருக்கும்போதே நடந்திருந்தா ஆட்டுக்கு எப்டி இருந்திருக்கும்
ஹாஹாஹா... பேசாம... விட்டு ஒரு பதிவப்போடுங்க
Posted by யாத்ரீகன் | Tue Oct 11, 12:56:00 pm (IST)
//ஹாஹாஹா... பேசாம... விட்டு ஒரு பதிவப்போடுங்க//- செந்தில்
நன்றி, செந்தில்.
ஒரு டவுட்டு, ஒங்களோட கமெண்ட்டுல fill in the blanks மாதிரி கோடு உட்ருக்கீங்களே, அத எப்டி, எத வெச்சு நெரப்புறதுன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா, ஒங்க கமெண்டோட முழு அர்த்தமும் எனக்கு புரியும்!!!
:-)
Posted by ஏஜண்ட் NJ | Tue Oct 11, 09:07:00 pm (IST)