« Index | Home | பருப்பு சாதம் நெய் விட்டு... » | தண்ணி Donkey ? » | உன்... நினைவு தானே... » | சூர்யோதயம் கிழக்கில் மட்டுமே... » | ரிட்டர்ன் ஆப் த... » | ஆடியபாதம்... » | இறைவன் கால் மாற்றி ஆடிய ஸ்தலம் » | விண்மீனா... உன் கண் மீனா ! » | வனிதாவணி... இளமோகினி... வந்தாடு... » | வேலுண்டு... வினையில்லை... » 

20 October 2005 

இலக்கணம் மாறுதோ

இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்

கல்லான முல்லை இன்றென்ன வாசம் காற்றான தாகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று யார் சொல்லித்தந்தார் மழைக்காலமென்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ பெண்மை தந்தானோ

மணியோசையென்ன இடியோயென்ன எது வந்தபோதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து எனைக் காக்கக்கண்டேன்
நீயெது நானெது ஏனிந்த சொந்தம் பூர்வஜென்ம பந்தம்

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை தாலாட்டுப்பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காகப்பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை உரைப்பது கீதை

என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் என் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரைபோட்டு வைத்தேன் திரைபோட்ட போதும் அணைபோட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கிவைப்பாயோ விளக்கிவைப்பாயோ

=======================
பாட்டு கேட்க இங்கே செல்லவும்!

பாட்டு போட்டு ரொம்ப நாளாச்சேன்னு இப்ப போட்டேன். அவ்ளோதான்!
மத்தபடி ஒன்னுமே இல்ல!! ;-)


=======================
வரிகள்: கண்ணதாசன்
பாடல்: இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ
படம்: நிழல் நிஜமாகிறது

=======================

எனது தனிப்பட்ட நம்பிக்கையில் இது நேர்மறையான நேர்மையான உள்ளீடு. நான் தப்பா ஏதாவது சொல்லிட்டேனா? மன்னிச்சுங்கோங்னா...

:-)


உங்களது தனிப்பட்ட நம்பிக்கை என்ன என்பதை ஆரம்பத்திலேயே இங்கே நீங்கள் சொல்லியிருப்பதை நான் நேர்மறையாகவே புரிந்து கொண்டேன்!

;-)

=============

இந்தப் பதிவில குத்து இருக்கான்னு கேக்க ஆளில்லையோ?!?!?!?!


சரி கேட்டுட்டா போச்சு
இதில குத்து ஏதாச்சும் இருக்குங்களாண்ணா ?


இந்த பதிவால் எனக்கு ஒரு பிரயோசனமும் இல்லை :(


இது ஒரு அருமையான பாடல், சுமித்திராவுக்கும், கமலஹாசனுக்கும் இடையே உள்ள ஊடலுடன், பார்க்க பரவசமும், கேட்க நவரசமும் கொண்ட இத்திரைக் காட்சி, இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. கேபி,மெல்லிசை மன்னர், கண்ணதாசன் ஆகியேரின் கூட்டுக் கலவை அற்புதம்.


எனக்கும் டாட்டா தான் போல.
ஏஜெண்ட் எந்த நேரத்தில் நீர் thanks giving பற்றி சொன்னீரோ ..


சின்னவரே, டாட்டா ஒமக்கு மட்டுமில்லய்யா!
பீடத்துக்கும் தான்!!!


முகமூடிக்கு டாட்டா (சுமோ) வந்து கொண்டே இருக்குது! உஷார்!!!


உம்ம பேருதான் பாஸானவங்க லிஸ்ட்ல் இன்னும் இருக்கு ஏஜெண்ட்.

என்னை பெயிலாக்கி Class விட்டு துரத்திட்டாங்க.

நீர் இன்ன்மும் இருக்கிறீரு.. என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்


நன்றி வெளிகண்ட நாதரே!

அப்டியே காட்சிய புட்டு வெச்சு, ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்துவிட்டீர்!

மீண்டும் வருக!!

எதுக்கும் இந்த பதிவோட url
http://njanapidam.blogspot.com அப்டீங்கறத ஞாபகம் வெச்சுக்குங்க!


அடிக்கடி வருவேன். நமது ரசனையும் கொஞ்சம் உங்களோட ஒத்துபோகுது


It remembers me the excellent performance of Super Star in "Vayasu Pilisindi"

Thanks.


ராம்கி நன்றி.

வெளிகண்ட நாதர் சொல்றாரு கமல்-சுமித்ரா நடிச்சதுன்னு! நீங்க சூப்பர் ஸ்டாருங்கறீங்க, அப்ப நீங்க சொல்றது தெலுங்குப் படத்திலயா ராம்கி?


Post a comment Home Index

Links to this post

Create a Link