« Index | Home | ஒரு மழைப்பூச்சியின் புலம்பல்! » | கேப்பை » | நெஞ்சு நிமிர்த்திச் சொல்! » | சோதனை ரெண்டு - தள மேம்படுத்தல் » | சோதனை - ஒன்று » | ஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும் » | நந்தவனத்தில் ஓர் ஆண்டி » | இலக்கணம் மாறுதோ » | பருப்பு சாதம் நெய் விட்டு... » | தண்ணி Donkey ? » 

03 December 2005 

உயர்ந்த மனிதனாக உருவாக்கும் கிரகங்கள்

லட்சியங்கள் லட்சங்களாக மாறினால் தான் லட்சியத்துக்கும் மதிப்பு. லட்சியங்கள் கனவாக மாறி கனவுகள் நிஜங்களாக மாறி, நிஜங்கள் நிமிடத்தில் நிழல் வடிவில் மாறி நித்தமும் கண்ணாமூச்சி ஆடுகின்றன. உழைப்புக்கு விலை மலிந்துவிட்டதா? இல்லை உடையவன் சரக்கு விலையாகவில்லையா? திறமை இருந்தும் ஏன்? தேக்கநிலை சிந்தனை சரியாக இருந்தும், செயல்படும் ஆற்றல் இருந்தும் எதனால் தடை? தடுப்பது எது? எங்கிருந்து இந்த ஆற்றல் புறப்படுகிறது, எந்த கிரகத்தின் அதிர்வுகள் மனிதனை அதிகமாக பாதிக்கின்றன. கட்டுரை வழியாக தெளிவாக காண்போம்.

சமுதாயத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எந்த அளவுகோல் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது. "பணம்'' என்ற அச்சிடப்பட்ட காகிதத்தால்தான். ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றான் என்பது அவனது "பொருளாதார நிலை'' ஒரு வலுவான சக்தியாக நம்முன் ஒரு பொய்யான இரும்புத்திரையை உருவாக்கிவிடுகிறது. அவனிடம் உள்ள பணம் நல்லவழியில் வந்ததா என்பதை பற்றி யாருக்கும் கவலையில்லை. அவனுக்கு சமூகத்தில் கொடுக்கும் பட்டம் "பிழைக்கத் தெரிந்தவன்'' புத்திசாலி, "உயர்ந்த மனிதன்''.

மெத்த படித்தவன் பல்துறை ஞானம் உள்ளவன், மேதைகள் எல்லாம் பணம் சம்பாதிக்க லாயக்கற்றவர்களா? இல்லை! அவர்களால் சம்பாதித்து பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியவில்லையா? ஓ! மனிதனே, பணத்தை தேடுவதை விடுத்து அறிவை தேடிப்பாருங்கள்! மகத்தான மனித மூளையின் செல்களை திறந்துவிடுங்கள்! அது பல கோடான கோடிகளுக்கு சமம்.

கீதை சொல்கிறது "எதைக் கொண்டு வந்தாய், இன்று உன்னுடையது நாளை வேறொருவருக்கு என்று.'' இந்த கூற்று பணத்துக்கும் பொருந்தும். இருப்பினும் சமுதாயம் பணக்குவியல்களைத் தேடி ஓடுவது ஏன்? பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை என்றார் குறள் முனிவர்.

பொருளின் அளவுகோல்தான் என்ன? உண்ண, உடுத்த, உறைவிடத்துக்கென்று பணம் தேவைப்படுகிறது. மறுப்பதற்கில்லை. பணம் வாழ்க்கையின் ஒரு அங்கம். பணமே வாழ்க்கையல்ல. பணம் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில்லை. அளவோடு இருக்கும் பணம் நம்மை காப்பாற்றும் அதிகமானால் நாம் பணத்தை காக்க வேண்டும். இந்த முரண்பாடுகளால்தான் மனிதனின் மனம் மரணித்துப் போகிறது. அறிவு தத்தளிக்கிறது.

ஓயாமல் தத்தளிக்கும் மனத்தை தன்மைப்படுத்தும் கிரகம் எது? அது எந்த நிலையில் இருப்பின் பணம் பெட்டியை நிரப்பும்? இவை எல்லாவற்றையும்...

மேலும்...

Source:



| | | | | |

//எதைக் கொண்டு வந்தாய், //
ஓவர் தத்துவமாய் இருந்தாலும்.....


என் முருகன் காப்பாற்றட்டும்..


//என் முருகன் காப்பாற்றட்டும்.. //

ஆமென்!


Post a comment Home Index