« Index | Home | புல்+இ = புலி » | வாடி... வாடி... நாட்டுக்கட்ட » | பூனைகள் மற்றும் ஆந்தைகள் » | நாயின் பேர் அப்பாய் » | வானிலை அறிவிப்பு » | Arya & Dravid » | முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன் » | ஆரிய, திராவிட... » | ஓ... Butterfly... » | எது வேண்டும்? » 

27 May 2006 

நைல் நதியின் லீலி புஷ்பங்கள்


Photobucket - Video and Image Hosting

வானம் மெலிதாய் தூறல் போட்டது;
சிலீரென தென்றல் வருடியது;
மண் வாசனை நாசியைத் தொட்டது;
உள்ளுக்குள் லேசாய் கதகதப்பு.

அவள் வரக் காத்திருந்தேன்;
பஸ் வராமலிருக்க வேண்டிக் கொண்டேன்;
ரம்யமான தனிமையில்,
எண்ணப் பறவையின் சிறகுகள்
விண்ணில் விரிந்தன.

'அது ஒரு அழகிய நிலாக்காலம்' என்று
தொடுத்த வைத்த வார்த்தைகளால்
எடுத்துப் போட்டு முடித்துவிட முடியாது
அந்த வசந்த கால நினைவுகளை.

ஓங்கி வளர்ந்த ஆலமரத்தின்,
விழுதுகளிலாடும் வாண்டுகள் போலே
குதூகலித்துக் கொண்டாடிய
கல்லூரி தினங்கள்,
பொன்னான கணங்கள்.

பழைய நினைவுகள் பசுமையாய் இன்னும்;
காத்திருப்பது ஒன்றே கடமையென்றானது;
அப்போதும் இப்போதும்.

நதியோரம் காத்திருந்தேன்...
பளீர் என்றொரு மின்னல்
சிரித்த முகமாய் அவள்!

எழுதிய கவிஞர் பேரயும் வெளிவந்த புத்தகத்தின் பெயரையும் போடாம விட்டுட்டீங்களே...


இப்போதைக்கு இதைப் புத்தகமாய்ப் போடும் எண்ணம் எனக்கு இல்லை!


குருவே,

Give me More !

யாருடையது அந்த அழகிய திருமுகம் ?


//குருவே,
Give me More !//

take PEPSI !

//யாருடையது அந்த அழகிய திருமுகம் ? //

கவிதைக்குப் பொய் அழகு! பேராசிரியரே!!
;-)


ஓரே ஆளுக்காகவா பல வருஷமா காத்திருந்தீங்க? ஐய்யோ பாவம்! அதுசரி, அவளுக்காக
காத்திருந்தேன், பஸ் வராமல் இருக்க வேண்டிக் கொண்ட்டேன் என்றால் என்னய்யா அர்த்தம்?


தலைப்பே கவிதை மாதிரி இருக்கு
ஆனா கவிதை கவிதை மாதிரி இல்லை :-)

என்ன தலை .. நமீதா படம் ஸ்டாக் தீந்து போச்சா ;)

*** மரவண்டு ***


.
Agent 8860336 ஞான்ஸ்:

செய்தி வாசிப்பாளார் நிர்மலா பெரியசாமி பாணியில் படித்தால்...

ஒரு கவிஞர் எழுத, எதேனும் புத்தகத்தில் வந்த கவிதையா? என்று வியந்து கேட்கிறார் முகமூடி!

அந்த அழகிய திருமுகம்? யாராக இருக்க முடியும் என்று ஆராய்ச்சி செய்கிறார் பேராசிரியர் கார்த்திக்!

என்னய்யா அர்த்தம்? எனக் குழம்புகிறார், வழக்கம் போலவே பதிவின் அர்த்தம் புரியாமல் விழிக்கும் உஷா!

தலைப்பே கவிதை மாதிரி இருக்கு
ஆனா கவிதை கவிதை மாதிரி இல்லை
என்று உண்மையைப் பட்டவர்த்தமாகப் போட்டு உடைக்கிறார் மரவண்டு!

வணக்....கம்!


கவிஞ,
யான் கவி புரியவில்லை என்று செப்பவில்லை. கவிதையின் கருவில் உள்ள குற்றத்தையல்லவா எடுத்து சொன்னேன்?
அவளுக்காக காத்திருக்கிறார், ஆனால் பேரூந்து வராமல் இருக்க வேண்டிக் கொண்டேன் என்கிறீர். இது பொருட் குற்றம் அல்லவா? "விளக்குமாறு" வேண்டிக் கொள்கிறேன்.


//கவிஞ, கவிதையின் கருவில் பொருட் குற்றம் ...// - குற்றம் சாட்டுகிறார் நக்கீரர் பரம்பரை உஷா!

குற்றமா?

பாரும்... நன்றாகப் பாரும்! கண்ணாடி போட்டும் பாரும்!!

நான் எழுதிய xyz-ல்!! குற்றமா?

முதலில் இங்கே கவிதை எங்கே இருக்கிறது என்று காட்டும்!
பிறகு பார்க்கலாம் அதில் சொற்குற்றமா? இல்லை பொருட்குற்றமா? என்பதை!

சவாலை சந்திக்கத் தயாரா?!

:-)))


ஒரே குண்ஸா இருக்குதுப்பா..

(நான் பதிவை சொல்லலை)


எனக்கு ஆதரவு தந்திருப்பதற்கு நன்றி தல!

;-)

(மாட்டிவிட்டாச்சே....!)


ஆதரவா?? எங்க..எதுக்கு..?

இரும்படிக்கிற இடத்துல ஈ'க்கு என்னசாமி வேலை..

(மாட்டிவிட்டாச்சே....!)
ஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா..
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.. :)


//ஆதரவா?? எங்க..எதுக்கு..? // raasaa

அப்போ,,, எனக்கு ஒங்க ஆதரவு இல்லியா?

நெனச்சேன்.. நீங்க, ப்ளாக் அப்டீன்னு பதிவு போட்டப்பயே நெனச்சேன்!!

இப்டிதான் நட்டாத்துல உட்ருவீங்கன்னு!

:-)))


தலைப்பு(மட்டும்) அழகு :-)


Post a comment Home Index