எது வேண்டும்?

எதுஉனக்கு வேண்டு மென்று
எண்ணிப் பார்த்துச் சொல்லடா!
மதிமி குந்த மனிதஜன்ம
மகிமை காத்து நில்லடா!
ஞான முள்ள நாடிதென்று
பேர்நி லைத்தல் வேண்டுமா?
சேனை கொண்டு சென்றுகொன்று
சீர்கு லைத்தல் வேண்டுமா?
தந்தி ரத்தை வெல்லும்தூய்மை
தாங்கி நிற்க வேண்டுமா?
எந்தி ரத்தின் அடிமையாகி
ஏங்கி நிற்க வேண்டுமா?
அறிவு கொண்டு மக்களுக்கே
அன்பு செய்தல் வேண்டுமோ?
செறிவு கொண்ட சக்திபெற்றுச்
சேதம் செய்தல் வேண்டுமா?
வெள்ளை யாகத் தீமையை
எதிர்த்து வெல்ல வேண்டுமா?
கள்ளமாய் மறைந்து செய்யும்
காரி யங்கள் வேண்டுமா?
அன்பு சொல்லித் தீமையை
அடக்கி யாள வேண்டுமா?
வன்பு பேசித் தீமையை
வளர்த்து வைக்க வேண்டுமா?
சத்தி யத்தின் பற்றுக்கொண்ட
சாந்த வாழ்வு வேண்டுமா?
மற்ற செய்து மனிதமேன்மை
மாய்ந்து போக வேண்டுமா?
தீர மாகப் பொறுமைகாட்டும்
திறம டுக்க வேண்டுமா?
வீர மென்று கோபமூட்டும்
வெறிபி டிக்க வேண்டுமா?
ஆசை யற்ற சேவைசெய்யும்
நேச வேலை வேண்டுமா?
தேச பக்தி மாசுகொள்ளும்
நாசவேலை வேண்டுமா?
தெய்வம் உண்மை என்றுநம்பும்
தேச பக்தி வேண்டுமா?
பொய்யும் போரும் புனிதமென்று
பேசும் புத்தி வேண்டுமா?
வலியப் பூமி தானம்செய்து
வாழ்த்துக் கொள்ள வேண்டுமா?
வலிமை வந்து நம்மைத்தாக்கி
வீழ்த்திக் கொல்ல வேண்டுமா?
103. எது வேண்டும்? - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள்
ஏஜெண்டு,
என்னாச்சுபா உனக்கு? எலக்கியவாதியாவுரதுன்னு முடிவே பண்ணிக்கினியா? :-)
Posted by
குசும்பன் |
Sat Apr 22, 02:48:00 am (IST)
//எலக்கியவாதியாவுரதுன்னு முடிவே பண்ணிக்கினியா? :-) //
குசும்பரே,
எலக்கியவாதிகள் இதக் கேட்டு வருத்தப்படப் போறாங்க!
எதுக்கும் ஜாக்கிரதயா இரும்!!
நீர் மாட்டிக்கறதும் இல்லாம என்னயும் இழுத்து வீதியில உட்ருவீரு போலருக்கே!! ;-)
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Apr 22, 03:16:00 am (IST)
நிசமாலுமே, சுளுக்கினது சுண்டு விரல் தானா?? :(
Posted by
Pavals |
Sat Apr 22, 03:20:00 am (IST)
வ.வா.ச அறிக்கைல உபயோகப் படுத்திக்கறதுக்கா??
என்னடா ஆசிரியப்பா மாதிரி இருக்கேன்னு பார்த்தேன்.. நாமக்கல் கவிஞரோடதா.. சரி சரி..
மத்த பாட்டுக்கு லிங்கும் கொடுத்ததுக்கு நன்றி..
Posted by
பொன்ஸ்~~Poorna |
Sat Apr 22, 04:48:00 am (IST)
நிசமாலுமே, சுளுக்கினது சுண்டு விரல் தானா?? :( - Raasaa
தல, ஒங்களுக்குத் தெரியாதது இல்ல, இருந்தாலும் சொல்றேன்,
"சந்தேகக் கோடு, அது சந்தோஷக் கெடு!!"
மத்தபடி எல்லாம் சுகமே!!!
;-)
====== *** ========
//வ.வா.ச // - பொன்ஸ்
வ.வா.ச என்பது ஸ்வீட்டா, காரமா என்று சொல்லுங்களேன் பிளீஸ்!
:-)
======= **** =========
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Apr 22, 05:53:00 am (IST)
பீடமே,
ஏஜெண்ட்டின் சேவை குசும்பனுக்குத் தேவை. அருள் புரியுங்கள்.
முக்கியமாக எனது முதல் பின்னூட்டத்தைப் படித்து ஆவன செய்யுமாறு இறைஞ்சுகின்றேன்.
கைகூப்பியபடி,
இணையகுசும்பன்.
Posted by
குசும்பன் |
Sat Apr 22, 01:18:00 pm (IST)
ராசா, ஒரு படைப்பாளியின் படைப்புகளை அவர் அனுமதியில்லாமல் எடுத்துப் போடுவது தவறு என்று உங்களுக்கு தெரியாதா?
என்னுடைய சு. சு கவிதையை சொன்னேன் :-)))))))))))))
Posted by
ramachandranusha(உஷா) |
Sun Apr 23, 01:16:00 am (IST)
//என்னுடைய சு. சு கவிதையை... // USHA said.
தங்களின் படைப்புகளிலேயே மிகவும் ரசிக்கப்பட்ட 'சு.சு' கவிதையை இங்கே இலவசமாக எடுத்துப் போட்டு பிரபலப்படுத்தியதற்கு, தாங்கள் எனக்கு கொடுக்க இருக்கும் பொற்கிழிக்கு அட்வான்ஸ் நன்றிகள்!
:-)
(பி.கு: "ஆத்துல போட்டாலும் {இல்ல வீட்ல போட்டாலும்} அது ஸ்மைலியே ஆனாலும் அளந்து போடுக" - Agent-ன் ஞானமொழி!)
:-))
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Apr 23, 01:55:00 pm (IST)
ஹூம், இதுக்கு தமிழ் புத்தாண்டு அன்னைக்கு நம்ம சன் டி.வி.யிலே வந்த கவியரங்கமே பெட்டர். நாலு (மூணு?!) கவிஞர்களும் 'தல'ய புகழ்ந்து கவிதை எடுத்து உட்டாய்ங்க பாருங்க... அட.அட..அட... வவுத்து வலியே வந்திடிச்சு பாருங்களேன்.
Posted by
மாயவரத்தான் |
Sun Apr 23, 02:02:00 pm (IST)
தல
இந்த கேள்வி யாருக்கு ?
Posted by
Karthik Jayanth |
Sun Apr 23, 03:52:00 pm (IST)