புதிய சமுதாயம்
98. புதிய சமுதாயம்
பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் ;
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும் ;
கூட்டாளி வர்க்கங்கள் குணம்மாற வேண்டும் ;
குற்றேவல் தொழிலென்ற மனம்மாற வேண்டும் ;
வீட்டொடு தான்மட்டும் சுகமாக உண்டும்
வேறுள்ளோர் துன்பங்கள் கண்ணாரக் கண்டும்
நாட்டோடு சேராத தனிபோக உரிமை
நடவாதிங் கினியென்று நாமறிதல் பெருமை.
உடலத்தின் வடிவத்தில் பேதங்கள் உண்டு ;
உள்ளத்தின் எண்ணத்தில் வித்யாசம் உண்டு ;
சடலத்தை ஆள்கின்ற பசிதாகம் எல்லாம்
சகலர்க்கும் உலகத்தில் சமமான தன்றோ!
கடலொத்த தொழிலாளர் வெகுபாடு பட்டும்
கஞ்சிக்கு வழியின்றிக் கண்ணீரைக் கொட்டும்
மடமிக்க நிலைமைக்கு மாற்றில்லை யானால்
மனிதர்க்கிங் கறிவுள்ள ஏற்றங்கள் ஏனோ?
பசைமிக்க தொழில்செய்து பலன்முற்றும் யாரோ
பரிவற்ற முதலாளி பறிகொண்டு போக
பசிமிக்கு மிகநொந்த தொழிலாளர் எல்லாம்
பகையென்று நமையெண்ணிப் பழிகொள்ளு முன்னால்
வசைமிக்க நிலைமாற வழியன்று சூழ்வோம்
வறுமைக்கே இடமற்ற சமுதாய வாழ்வை
இசைமிக்க முறைகண்டு ஏற்பாடு செய்வோம்
எல்லாரும் குறைவற்ற நலமெய்தி உய்வோம்.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள்
வாங்க அப்பு.. எங்க கொஞ்ச நாளா சத்தத்தை காணோம்?
Posted by Pavals | Fri Apr 21, 04:31:00 am (IST)
This comment has been removed by a blog administrator.
Posted by ஏஜண்ட் NJ | Fri Apr 21, 04:38:00 am (IST)
கவிதை?? எங்க அது?? :)
Posted by Pavals | Fri Apr 21, 04:41:00 am (IST)
ஒன்னுமில்ல தல,
ச்சும்மா...
சுண்டு
வெரலு
சுளுக்கிக்கிச்சு!
;-)
(கவிதை! உபயம்: உஷா)
Posted by ஏஜண்ட் NJ | Fri Apr 21, 04:41:00 am (IST)
தல, broken link fixed now!
Posted by ஏஜண்ட் NJ | Fri Apr 21, 04:45:00 am (IST)
முதன் முதலாக என் பதிவுக்கு ஒரு + விட்ட இளவஞ்சிக்கு நன்றி!
-- Agent 8860336 ஞான்ஸ்
Posted by ilavanji | Fri Apr 21, 05:17:00 am (IST)
இளவஞ்சிக்கு முன்பாகவே, தன் பதிவில் தானே + குத்திக் கொண்ட ஞான்ஸ் வாழ்க! வாழ்க!!
இப்படிக்கு
ஈரேழு உலக தமிழ் வலைப்பதிவாளர்களின் பிரதிநிதி!
;-)
Posted by ஏஜண்ட் NJ | Fri Apr 21, 06:56:00 am (IST)
தல,
இம்மா நாளு எங்க போய் குந்திகின ? சுளுக்குன சுண்டு விரலு எப்ப்டிகிது ?
Posted by Karthik Jayanth | Fri Apr 21, 07:33:00 am (IST)
சுளுக்கு இப்போ பரவால்லபா...
ம்... அல்லாருமெ இப்டி தயாநிதி கணக்கா மெட்ராஸ் டமில்லே டபாய்ச்சிக்கினே இர்ந்தா இன்னாபா ஆவுறது!
;-)
Posted by ஏஜண்ட் NJ | Fri Apr 21, 01:19:00 pm (IST)