« Index | Home | உயர்ந்த மனிதனாக உருவாக்கும் கிரகங்கள் » | ஒரு மழைப்பூச்சியின் புலம்பல்! » | கேப்பை » | நெஞ்சு நிமிர்த்திச் சொல்! » | சோதனை ரெண்டு - தள மேம்படுத்தல் » | சோதனை - ஒன்று » | ஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும் » | நந்தவனத்தில் ஓர் ஆண்டி » | இலக்கணம் மாறுதோ » | பருப்பு சாதம் நெய் விட்டு... » 

05 December 2005 

புலி வால் கல்யாணம்

வால்-னு சொன்னா, எனக்கு ஒடனே ஞாபகத்துக்கு வர்றது, வால் தான்!

நா எத்தனையோ வால் பாத்திருக்கேன்;

பல்லி வால், பாம்பு வால்,
எலி வால், புலி வால்,
குதிரை வால், குரங்கு வால்,
நாய் வால், நரி வால்,
Dove tail, Cow tail, Cocktail
இப்டி எத்தனையோ....

*** *** ***

செல உதார்மொழிகள்! கூட கேட்ருக்கேன்; இப்டி,

சிங்கத்துக்கு வாலா இருக்கறத விட,....

தல இருக்கப்ப வால் ஆடலாமா?

*** *** ***

செலபேர வையிறது கூட உண்டு; இப்டி,

சுத்த அறுந்த வாலா இருக்கியே!

வால சுருட்டிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா?

எங்கிட்ட வாலாடுன, வால ஒட்ட வெட்டிருவேன், ஜாக்ரத!!

*** *** ***

பல்லி வால் துண்டிச்சாலும் திரும்ப வளர்ந்துடும்!

யானை வால் மோதிரம் போட்டா நல்லதுன்னு (யாருக்கு?) கூட கேள்விப்பட்ருக்கேன்

*** *** ***

? கேள்விக்குறி கூட நிறுத்திவெச்ச வால் மாதிரி எனக்குத் தெரியுது!

! ஆச்சர்யக் குறி கூட பெண்டு நிமிர்த்தப்பட்ட வால்-னு சொன்னா அது அவ்ளோக்கா தப்பில்ல!

\\ ரெட்டை வால் குருவி-ன்னு சொல்றது கூட, இருதலைக் கொள்ளி எறும்பா மனுஷன் படுற அவஸ்தைக்கு கொடுக்கப்பட்ட ஒரு உருவகமான உவமானமோன்னும் தோணுது!!!

இப்டி எத்தனையோ சொல்லலாம்...

*** *** ***

சரி, இப்ப சொல்ல வந்தது என்னன்னா..


இதுதான்!


**** **** ****
தலைப்பு, இது ஒரு மலையாள திரைப்படத்தோட பேர், no relations

இதப் படிச்சிட்டு wall-ல முட்டிக்கிட்டவங்க எத்தினி பேரோ!


நாய் வாலை நிமிர்த்தமுடியாது இது கூட எங்களூர் பக்கம் அடிக்கடி சொல்லும் கூற்று.

-theevu-


no relations - இத எயுதாம உட்டு பெரிய ரவுசாயிடுச்சப்பா.. வர வர டிஸ்கி, ஸ்மைலி இல்லாம பதிவே எயுதமுடியலையே.. என்ன சொல்றதோ

***

ஞானபீடம் பதிவுகளில் எழுத ஒரு ஸ்டாண்டர்டு பின்னூட்டம் தேடிக்கொண்டிருந்தேன்... "நாய் வாலை நிமிர்த்தமுடியாது" என்ற ஒரு அருமையான பின்னூட்டத்தை டெம்ப்ளேட்டாக வழங்கியதற்கு நன்றி தீவு..


என் பங்குக்கு -புலி வாலைப் பிடிச்ச கதை தெரியுமா?


SVe. Sekar

வால்பையனிடம் டாக்டர்: நீ முதமதல்லா எப்ப வால் பாத்த?

வால்பையன்: எனக்கு மூணு வயசா இருக்கும்போது வண்டலூர் zooல புலிவால் பாத்தேன்! :))


//வாலிலுள்ள முடியைத்தான் மோதிரத்தோட போடலாம்னு சொல்வாங்கோ... // - அடி ஆத்தி

சரி, தனி மரம் தோப்பாகாது-ங்கறீங்க! எப்டியோ அது இருக்கற இடம் வாலுதானே!


*** *** ***

//நாய் வாலை நிமிர்த்தமுடியாது// -theevu & முகமூடி


வளைந்து இருப்பது தான்
வானவில்லுக்கு அழகு!

வில்லை வளைத்ததால் தான்
சீதை கிடைத்தாள் ராமனுக்கு!!

வளைந்து கொடுத்தால் நாணல்
இல்லாட்டி ஆகிடும் கோணல்!!!

வளைவு நெளிவுகள் சாலையில் மட்டுமா
வாழ்விலும் தான்!!!!
(சேலை வளைவுகள் எச்சரிக்கை என்று சமீபத்தில ஒரு பாட்டு கேட்டேன்)


ஐயகோ!!! :-(


**** **** ****

//புலி வாலைப் பிடிச்ச கதை தெரியுமா?// - ramachandran Usha

'பொடா' நீக்கப்பட்டுள்ளதும் தெரியும்; வைகோ-வுக்கு திருப்தியில்லை என்பதும் தெரியும்; நீங்கள் சொல்லும் கதை... தெரியாது!
:-)


**** **** ****

//மூணு வயசா இருக்கும்போது வண்டலூர் zooல புலிவால் பாத்தேன்! // - இராமநாதன்


கடவுளே... கடவுளே!
:-)))


===== ======= ======

நன்றி,

அடி ஆத்தி,

theevu,

முகமூடி,

ramachandranusha

இராமநாதன்

===== ======= ======
அனைவரும் மீண்டும் மீண்டும் வருக!

எனது எல்லாப் பதிவுகளையும் இங்கே காணலாம்!


போகிறபோக்கில் பின்னூட்டம் அனுமார் வால் போல் நீண்டுகொண்டு போகும் போலிருக்கிறதே..


நீண்டு இருப்பதுதான்
முருங்கைக்காய்க்கும்,
புடலங்காய்க்கும்,
மூங்கிலுக்கும்,
அழகு!


அடப்பாவிகளா இத்தனை வாலுகளா?


அதனாலதான் இந்த வால்கர் (அது வோல்கரா, வால்கரா? ஏதோ ஒன்னு. இதுக்கு என்ன பின்னூட்டம் போடறதுன்னு தெரியல. அதனாலத்தான். ) ரிப்போர்ட்டும் இப்படி எல்லார் முன்னாலயும் வாலை ஆட்டுதோ. இருக்கும்.


//அது வோல்கரா, வால்கரா? ஏதோ ஒன்னு....எல்லார் முன்னாலயும் வாலை ஆட்டுதோ.//

Mr.ஜோசப்,
Approximation-ல அசத்துறீங்க!


*** *** *** ***
//அடப்பாவிகளா...// - வால் *

missing smiley sends out wrong signals!

நட்சத்திரமானதால் வாலுக்கு, கொம்பும் முளைச்சிடுச்சோன்னு யாராச்சும் (நா இல்ல) கேக்கப் போறாக!

நாராயண... நாராயண... நாராயண...
;-)


Post a comment Home Index